பணியிலுள்ள ஆசிரியர்களுக்கான TNTET 2026 அறிவிக்கை: கேள்விகளும் பதில்களும்
முன்னுரை:
இது 'சிறப்பு TET' அல்ல. தேவையற்ற சட்டச் சிக்கல்களைத் தவிர்க்க, ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இதனைப் 'பணியிலுள்ளோருக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST FOR WORKING TEACHERS)' என்றே குறிப்பிடுகிறது.
1. யார் விண்ணப்பிக்கலாம்? இது யாருக்கான தேர்வு?
- 01.09.2025ற்கு முன்பே ஆசிரியப் பணியில் சேர்ந்து, இதுவரை TET தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- அரசு / அரசு உதவி பெறும் / அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் காலமுறை ஊதியம் / தொகுப்பூதியம் / பகுதிநேரப் பணியில் இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் / அதனையொத்த ஆசிரியராக EMIS IDயுடன் பணிபுரிவோர் இத்தேர்வை எழுதலாம்.
| பணி / தகுதி | விண்ணப்பிக்க வேண்டிய தேர்வு | கூடுதல் தகவல் |
|---|---|---|
| இடைநிலை ஆசிரியர் (SGT), தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் (Primary HM) (D.T.Ed., / அதனையொத்த கல்வித் தகுதியுடன்) | TNTET தாள் 1 | - |
| பட்டதாரி ஆசிரியர் (BT), BRTE, சிறப்பு கல்வி ஆசிரியர்கள் (Special Edu. Teachers), நடுநிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் (MHM, HS.HM) (U.G + B.Ed., / அதனையொத்த கல்வித் தகுதியுடன்) | TNTET தாள் 2 | - |
| SGT / PHM பதவி உயர்விற்கான U.G + B.Ed., தகுதியுடன் இருப்பின் | TNTET தாள் 2 | தாள் 2 மட்டும் எழுதலாம். |
| இரு தாள்களையும் எழுத விரும்புவோர் | தாள் 1 மற்றும் தாள் 2 | தனித்தனியே உரிய கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். |
- விண்ணப்பிக்கும் காலம்: 2026 பிப்ரவரி 18 முதல் ஏப்ரல் 10 வரை.
- விண்ணப்பிக்கும் முறை: http://www.trb.tn.gov.in என்ற இணைய முகவரியில் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
| விண்ணப்பதாரர் வகை | கட்டணம் |
|---|---|
| SC, SCA, ST & மாற்றுத்திறனாளிகள் | ரூ.300/- |
| மற்றவர்கள் | ரூ.600/- |
- கட்டணம் செலுத்தும் முறை: Net banking / Credit Card / Debit Card பயன்படுத்தி இணையப் பரிவர்த்தனை மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
| வரிசை எண் | தேவைப்படும் ஆவணம் | வடிவம் & அளவு |
|---|---|---|
| 1 | மொபைல் எண் (Mobile No.) | - |
| 2 | மின்னஞ்சல் முகவரி (E-mail ID) | - |
| 3 | கடவுச்சீட்டு அளவு வண்ண புகைப்படம் (Passport size colour photograph) | Jpg/Jpeg/Png : 40-60 KB |
| 4 | கையொப்பம் (Signature) | Jpg/Jpeg/Png : 20-40 KB |
| 5 | TRB வெளியிட்ட Service Certificate (DEO / CEO எதிரொப்பத்துடன்) | Pdf : 250-300 KB |
| 6 | சாதிச் சான்றிதழ் (Community Certificate) | Pdf : 250-300 KB |
| 7 | S.S.L.C., மதிப்பெண் தாள் (Mark sheet) | Pdf : 250-300 KB |
| 8 | H.Sc., மதிப்பெண் தாள் (Mark sheet) | Pdf : 250-300 KB |
| 9 | D.T.Ed., டிப்ளமோ சான்றிதழ் (தாள் 1க்கு) | Pdf : 250-300 KB |
| தாள் - 2 எனில்: | ||
| 9 | U.G ஒருங்கிணைந்த / அனைத்து செமஸ்டர் மதிப்பெண் தாள்கள் மற்றும் பட்டம் / தற்காலிக சான்றிதழ் | Pdf : 250-300 KB |
| 10 | B.Ed., ஒருங்கிணைந்த / அனைத்து செமஸ்டர் மதிப்பெண் தாள்கள் மற்றும் பட்டம் / தற்காலிக சான்றிதழ் | Pdf : 250-300 KB |
| மாற்றுத்திறனாளி எனில்: | ||
| * | மாற்றுத்திறனாளி சான்றிதழ் (Differently Abled Certificate) | Pdf : 250-300 KB |
6. விண்ணப்பத்தில் பிழை இருந்தால் என்ன செய்வது?
- 2026 ஏப்ரல் 11, 12 & 13 தேதிகளில் தேவையான திருத்தங்களைச் செய்து கொள்ளலாம்.
- தேர்வு நாள் (உத்தேச): 2026 ஜூலை 4 & 5 தேதிகளில் தேர்வு நடத்த TRB உத்தேசித்துள்ளது. (உறுதியானால் ஹால் டிக்கெட் வெளியாகும்.)
- தேர்வு மையம்: TRB முடிவு செய்து Hall Ticketல் குறிப்பிட்டு ஆன்லைனில் வெளியிடும்.
- தேர்வு முறை:
- 150 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகையில் 150 வினாக்கள்.
- OMR தாளில் விடைகளை நிரப்பி அளிக்க வேண்டும்.
- தமிழ் & ஆங்கில வழியில் தேர்வு நடைபெறும். தேர்வு மொழியை விண்ணப்பத்திலேயே தேர்வு செய்ய வேண்டும்.
| வரிசை எண் | பாடம் | மதிப்பெண் |
|---|---|---|
| 1 | 6-11 வயதிற்கான குழந்தை உளவியல் & கற்பித்தல் முறை | 30 |
| 2 | மொழிப்பாடம் (தமிழ்) | 30 |
| 3 | ஆங்கிலம் | 30 |
| 4 | கணக்கு | 30 |
| 5 | சூழ்நிலையியல் | 30 |
| மொத்தம் | 150 |
- (வினாக்கள் 5ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் அமையலாம் என்றாலும், பத்தாம் வகுப்பு வரை கேட்கப்படவும் வாய்ப்புண்டு.)
| வரிசை எண் | பாடம் | மதிப்பெண் |
|---|---|---|
| 1 | 11-14 வயதிற்கான குழந்தை உளவியல் & கற்பித்தல் முறை | 30 |
| 2 | மொழிப்பாடம் (தமிழ்) | 30 |
| 3 | ஆங்கிலம் | 30 |
| 4 | கணக்கு & அறிவியல் (Maths / Science பட்டதாரிகளுக்கு) | 60 |
| 5 | சமூகவியல் (History பட்டதாரிகளுக்கு) | 60 |
| 6 | மற்ற பாட பட்டதாரிகள் | 4 / 5ல் ஒன்றை சுய விருப்பத்தின் பேரில் தேர்வு செய்யலாம். |
| மொத்தம் | 150 |
- (வினாக்கள் 6 - 8 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் அமையலாம் என்றாலும், +2 வரை கேட்கப்படவும் வாய்ப்புண்டு.)
| வகுப்பு | தேர்ச்சி மதிப்பெண் | தேர்ச்சி சதவீதம் |
|---|---|---|
| SC / SCA / ST | 60 | 40% |
| BC / BCM / MBC / DNC | 75 | 50% |
| மற்றவர்களுக்கு | 90 | 60% |
பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும். Please click the link below to download the PDF file.
Click Here to Download
Note : The Study materials from our website are not created by us. These materials for Educational and Competitive Exam Purpose only. All the credits go to the creators who created them.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
Share this Post
✨ பணியிலுள்ள ஆசிரியர்களுக்கான TNTET 2026 அறிவிக்கை முழு விவரம்
🔗 Link : https://www.kalvisolai.com/2026/02/tntet-2026.html
*உடனுக்குடன் செய்திகளை பெற பின்தொடருங்கள்*










No comments:
Post a Comment