உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

ஊரடங்கு உத்தரவை சமாளிக்க பி.எஃப் பணத்திற்காக குவியும் மக்கள்..!

ஊரடங்கு உத்தரவு சூழலை சமாளிக்க பிஎஃப் கணக்கிலிருந்து 3,200 கோடி ரூபாய் வரை மக்கள் செலவிற்காக வெளியே எடுத்துள்ளனர்.

கொரோனா சூழலில் மக்களின் அவசிய செலவினங்களை கருத்தில் கொண்டு பிஎஃப் பணத்தில் குறிப்பிட்ட தொகையை எடுக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. இதற்கு வசதியாக பிஎஃப் அலுவலகங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொது முடக்க சூழலால் பாதிக்கப்பட்ட சுமார் 8 லட்சத்து 20 ஆயிரம் பேர் பிஎஃப் கணக்கிலிருந்து 3 ஆயிரத்து 200 கோடி ரூபாயை வெளியே எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் மத்திய அரசின் இபிஎஃப்ஒ அமைப்பில் இருந்து மட்டும் 7 லட்சத்து 40 ஆயிரம் பேர் சேமிப்பு பணத்தை ஒரு மாதத்தில் எடுத்துள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தவிர தனியார் பிஎஃப் அறக்கட்டளைகளில் இருந்தும் 80 ஆயிரம் பேர் சேமிப்பு பணத்தை எடுத்துள்ளனர்.

Read More News - Download

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.