உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

PENSION NEWS | ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள்  ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் உயிர்வாழ் சான்றை சமர்ப்பித்தால் போதும் இந்த ஆண்டிலிருந்து புதிய நடைமுறை அமல்

ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் தங்கள் உயிர் வாழ் சான்றை ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் சமர்ப்பிக் கும் புதிய நடைமுறை இந்த ஆண்டி லிருந்து அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 30 ஆயிரம் ஓய்வூதியர்கள் தங்கள் மாதாந்திர ஓய்வூதியத்தை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக பெறுகின்றனர். ஓய்வூ தியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூ தியர்கள் உயிர்வாழ் சான்றை ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான மாதங்களில் சமர்ப்பித்து வருகிறார்கள்.

அந்த வகையில், ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான காலம் கோடை காலம் என்பதாலும், தற்போது கரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதாலும் ஓய்வூதிய சங்கங்களின் கோரிக்கையை ஏற்று மார்ச் 26-ம் தேதி நிதித்துறை வெளியிட்ட அரசாணையின்படி மாநில அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஏப்ரல், மே மற்றும் ஜுன் மாதங்களில் அளிக்கப்படும் உயிர்வாழ் சான்றை ஓய்வூதியம் பட்டுவாடா செய்யும் அலுவலர்களிடம் ஜுலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த புதிய நடைமுறை 2020-ம் ஆண்டு முதல் அமலுக்கு வரு கிறது.

அனைத்து அரசு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் தங்கள் உயிர்வாழ் சான்றை ஓய்வூ தியம் பட்டுவாடா செய்யும் அலுவலர்களிடம் அளிக்கவோ அல்லது நேரடியாக ஓய்வூதியம் பட்டுவாடா செய்யும் அலுவலர் களான ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் அல்லது கருவூல அலு வலர் அல்லது உதவி கருவூல அலுவலர் முன்னிலையில் ஜுலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங் களில் ஏதாவதொரு பணி நாளில் 2020ஆம் ஆண்டு முதல் ஒவ் வொரு வருடமும் நேர்காணலுக்கு ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மாநில அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றை ஜுலை, ஆகஸ்ட், செப்டம்பரில் சமர்ப்பிக்க வேண்டும்.

1 comment:

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.