உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்
  • TN MHC RECRUITMENT 2020 | சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள P.A, P.C வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.02.2021 | Click Here

மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு உள்ளது போல் கலை, அறிவியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு யுஜிசிக்கு முன்னாள் துணைவேந்தர் குழு பரிந்துரை.

மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு உள்ளது போல் கலை, அறிவியல் படிப் புக்கு நுழைவுத் தேர்வு நடத்த யுஜிசிக்கு முன் னாள் துணைவேந்தர் குழு பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கு நாடுமு ழுவதும் மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கல்வி நிறுவனங்கள் மார்ச் 16ம் தேதியே மூடப்பட்டன.பல் கலைக்கழகம் மானிய குழு (யுஜிசி), கொரோனா கார ணமாக கல்வி நிறுவனங்களில் தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகளை எப்போது தொடங்கலாம். அடுத்த கல்வி ஆண்டிற்கான பாடங்களை தொடங்கலாம் என்று ஆராய குழு அமைக்கப்பட்டது.

அரியானா பல்கலைக்கழகமுன்னாள் துணை வேந்தர் ஆர்.சி.குஹாட் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டது. மற்றொரு குழு ஊர டங்கு நேரத்தில் எப்படி ஆன்லைனில் பாடங்களை கற்பிக்கலாம் என்பது குறித்து ஆராய, இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நாகேஸ் வர ராவ் தலைமையில்கு குழு அமைக்கப்பட்டது. இரண்டு குழுக்களும் தங்களது ஆய்வு அறிக் கையை சமர்ப்பித்த நிலை யில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டிற்கான வகுப் புகளை ஜூலை மாதத்திற்கு பதிலாக செப்டம்பர் மாதத் தில் இருந்து தொடங்கலாம் என்று பல்கலைக்கழகம் மானிய குழுவிற்கு ஆய் வுக் குழு பரிந்துரை செய்துள்ளது.

சமீபத்திய அறிக்கைகளின்படி, 'பல்வேறு பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை பாடத்திட்டங்களில் சேருவதற்கு, பொதுவான நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும். குழு முன் வைத்த பரிந்துரைகள் அர சாங்கத்தால் வெளியிடப் பட்ட ஆலோசனைகளுக்கு எந்த வகையிலும் தடை யாக இல்லை. கொரோனா பரவலால், ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் பயண வரலாறு குறித்து பல்கலைக்கழகங்கள் முழுமையான சோதனை நடத்த வேண்டும். கல்வி யாண்டு அட்டவணையை பொருத்தவரை 2020 மே முதல் வாரத்திற்குப் பிறகு இயல்புநிலை திரும்பினால், 2019-20ம் கல்வியாண்டின் வகுப்புகளின் இழப்பை ஈடுசெய்ய முடியும். கல்வி யாண்டு அட்டவணையை மறுவடிவமைப்பு செய்ய வேண்டும்.

அடுத்த கல்வியாண்டிற்கான சேர்க்கைகளை 2020 ஆகஸ்ட் 1 முதல் தொடங்கி 2020 ஆகஸ்ட் 31 வரை முடிக்க வேண்டும். ஏற்கனவே முதல் மற் றும் இரண்டாம் ஆண்டில் படிக்கும் மாணவர்களுக் கான வகுப்புகள் ஆகஸ்ட் 1, 2020 முதல் தொடங்கலாம். அதேநேரத்தில் புதிய மாண வர்களுக்கு செப்டம்பர் 1 முதல் வகுப்புகள் தொடங்கலாம். பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசி ரியர்கள் மற்றும் பிற கல்வி ஊழியர்களை நியமிப்பதற் கான குறைந்தபட்ச தகுதி குறித்த யுஜிசிவிதிமுறைகள் மற்றும் குறைந்தபட்ச கற் பித்தல் நாட்கள் பின்னர் தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பை பொறுத்தவரையில் அந் தந்த கல்லூரிகள் தனித்த னியாக அவர்களுக்கான இடங்களை நிரப்பி கொள் வதற்கான கலந்தாய்வுகள் நடத்துகின்றன. ஒருசில கல்லூரிகளில் கலந்தாய்வு நடத்தும் முறை கூட இல்லாமல் மாணவர் களை நேரடியாக சேர்க் கும் சூழல் நிலவுகிறது.

ஒவ்வாரு கல்லூரிக்கும் மாணவர்கள் தனித்தனி யாகவிண்ணப்பிக்கவேண்டிய சூழல் நிலவி வருகிறது. மாணவர்கள் இரண்டு கல்லூரிக்கோ அல்லது ஒரு கல்லூரிக்கோ விண்ணப் பித்தால் எந்த கல்லூரியி லும் அவர்களுக்கு இடம் கிடைக்காத சூழல் நிலவுகி றது.இதனால், பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கு கவுன்சிலிங் நடத்துவதைப்போன்று கலை அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் நடத்திமாணவர்களை சேர்க்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இன் னும் நடைமுறைப்படுத் தப்படவில்லை .

இந்நிலையில், மருத் துவ படிப்புக்கு நீட் தேர்வு உள்ளது போல், கலை, அறிவியல் படிப்புகளுக் கும் தேசிய மற்றும் மாநில அளவில் நுழைவுத்தேர்வு நடத்த யுஜிசிக்கு அரியானா மத்திய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்குஹத் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரைகளையும் மனித மனித வளத்துறை ஆய் வு செய்து வருவதாகவும், இதை விரிவாக வல்லுநர்களிடம் கலந்தாய்வு செய்து அறிவிப்புகளை விரைவில் மத்திய அரசு வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More News - Download

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.