உலகிலேயே, புலிகள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் பகுதியாக அசாமில் உள்ள காசிரங்கா வனவிலங்கு பூங்கா அடையாளம் காணப்பட்டுள்ளது. அசாம் வனத் துறையினரும், சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆராநாயக் என்பவரும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலகிலேயே புலிகள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் பகுதி எது என்பதை அறிந்து கொள்வதற்காக ஆய்வு மேற்கொண் டோம். காசிரங்காவில் உள்ள தேசிய வனவிலங்கு பூங்காவில் புலிகளின் எண்ணிக்கை எந்த அளவுக்கு அடர்த்தியாக உள்ளது என்பதை அறிவதற்காக ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டோம்.
பூங்காவில் 144 ச.கி.மீ., பரப்பளவில் நடமாடும் விலங்குகள் பற்றிய எண்ணிக்கையை மதிப்பிடுவதற்காக, ஆங்காங்கே ரகசியமாக கேமராக்கள் பொருத் தப்பட்டன. இதில்,100 ச.கி.மீ., பரப்பளவில் 32 புலிகள் வசிப்பது தெரியவந்தது. இதன் மூலம், உலகிலேயே புலிகள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் பகுதி கசிரங்கா பூங்கா தான் என்பது தெரியவந்தது. இந்த 32 புலிகளில் ஒன்று குட்டி. 50 நாட்கள் இந்த கேமரா கண்காணிப்பு நடந்தது. இந்தியாவில் உள்ள மற்ற வனவிலங்கு பூங்காக்களில் 100 ச.கி.மீ., பரப்பளவில் சராசரியாக மூன்றில் இருந்து 12 புலிகள் தான் வசிக்கின்றன. இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment