பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது: 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் - மைச்சர் செங்கோட்டையன் தகவல்! ஈரோடு மாவட்டம் கோபி முருகன்புதூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் முதல்வர்எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வி துறைக்கு மட்டும் ரூ.27 ஆயிரத்து 205 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. வருகிற 21-ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.ஆனால், பிளஸ்-1 வகுப்பில் இருந்து பிளஸ்-2 செல்லும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளதால் கோடை விடுமுறை அவர்களுக்கு பொருந்தாது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகிற ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும். அதற்கு முன்னதாக வருகிற 2-ஆம் தேதி முதல் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.அரசு நிர்ணயித்ததை விட தனியார் பள்ளிக்கூடங்கள் அதிககட்டணம் வசூலித்தால் இதுபற்றி முன்னாள் நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிடம் புகார் அளிக்கலாம். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 3 ஆயிரம் அரசு பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க அரசு ரூ.60 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதுதவிர 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.463 கோடி தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.பள்ளிகள் திறந்ததும் அரசு பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று கூறினார்

2 comments:

  1. 12th students kum leave venum avangaluku stress irukum ..

    ReplyDelete
  2. sir konjam karunai kaatugal, leave vidugal.......

    ReplyDelete

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||