ஜே.இ.இ. தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. முதல்நிலை, முதன்மைத் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் நடப்பாண்டுக்கான நுழைவுத் தேர்வு 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

இதில் முதற்கட்ட தேர்வு வருகிற 21, 24, 25, 29 மற்றும் மே மாதம் 1, 4-ந்தேதிகளில் நடக்க இருக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்கனவே அவகாசம் வழங்கப்பட்ட நாளில் இருந்து மேலும் நீட்டிப்பு செய்து தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) அறிவித்து இருக்கிறது.

அதன்படி, வருகிற 5-ந்தேதி வரை ஜே.இ.இ. முதற்கட்டத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு www.nta.ac.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||

TRB PG RECRUITMENT 2021 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : PGT/PD/Computer Instructor Grade I விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.10.2021. | Click Here
kalvisolai-kalviseihi-padasalai-kalvikural-kaninikkalvi-