TNPSC CURRENT AFFAIRS 2022 JULY

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group

ஜூலை 1 : ஹாங்காங், சீனாவுடன் இணைந்ததன் 25-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.


ஜூலை 1 : கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் என்றும், முககவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.


ஜூலை 1 : கருவூலங்கள் அலுவலகத்துக்கு நேரில் வராமல் ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


ஜூலை 1 : தமிழகத்தில் 8 லட்சத்து 43 ஆயிரத்து 675 மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவில் 90 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டுகளை விட தேர்ச்சி சதவீதம் இந்த ஆண்டு குறைந்துள்ளது.


ஜூலை 1 : பிளஸ்-2 தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரிகளில் 2 சதவீதம் இடம் வழங்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.


ஜூலை 1 : ஜி-7 மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு ஜி-7 நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.


ஜூலை 1 : அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டுஉத்தரவிட்டுள்ளது.


ஜூலை 1 : கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து, அமைச்சர், அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். 10 பேருக்கு மேல் கூடினால் முககவசம் கட்டாயம் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது.


ஜூலை 1 : 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்தும் நடவடிக்கையாக ஒலிம்பியாட் சின்னத்துடன் 15 அரசு பஸ்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


ஜூலை 1 : ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்பாடு என அனைத்துக்கும் நாடு முழுவதும் தடை அமலுக்கு வந்து உள்ளது.


ஜூலை 1 : தஞ்சை அருங்காட்சியகத்தில் காணாமல் போன 300 ஆண்டுகள் பழமையான முதல் தமிழ் பைபிள் லண்டனில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.


ஜூலை 2 மெட்ரோ ரெயில் பணி சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரெயில் பணிகளுக்காக சீனாவில் இருந்து சுரங்கம் தோண்டும் எந்திரம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.


ஜூலை 1 : இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 89.94 மீட்டர் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனை படைத்தார்.


ஜூலை 2 : டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன் விளாசி இந்திய வீரர் பும்ரா உலக சாதனை. இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் 35 ரன்களை வாரி வழங்கினார்.


ஜூலை 3 : சென்னை-எத்தியோப்பியா நாட்டுக்கு இடையே நேரடி பயணிகள் விமான சேவை தொடங்கப்பட்டது. முதல் விமானத்துக்கு வாட்டர் சல்யூட் அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.


ஜூலை 3 : உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.


ஜூலை 3 : சென்னையை அடுத்த குன்றத்தூர் ஒன்றியத்தில் பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து தொல்லியல் துறையினர் அகழாய்வு பணியை தொடங்கினர்.


ஜூலை 4 : மத்திய அரசின் அனுமதியின்றி தனிநபர்கள் ‘ஜாமர்’ கருவிகளை பயன்படுத்தக்கூடாது என்று தொலைத்தொடர்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


ஜூலை 4 : தமிழகமெங்கும் ரூ.1.25 லட்சம் கோடி முதலீட்டில் 75 ஆயிரம் வேலை வாய்ப்புகளை வழங்கும் 60 தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தானது.


ஜூலை 4 : மராட்டிய சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே அரசு 164 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றது. அரசை எதிர்த்து 99 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டனர்.


ஜூலை 3 : சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 3 வது அணியை இந்தியா அறிவித்தது. தமிழக வீரர்கள் சேதுராமன், கார்த்திகேயன் இடம் பெற்றனர்.


ஜூலை 5 : இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணி ஜோ ரூட், பேர்ஸ்டோவின் சதத்தால் 378 ரன்கள் இலக்கை எட்டிப்பிடித்து புதிய சாதனை படைத்தது.


ஜூலை 6 : டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் விராட்கோலி 4 இடங்கள் சரிந்து 714 புள்ளிகளுடன் 13-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ரிஷப் பண்ட் (801 புள்ளி) 6 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.


ஜூலை 7 : அரை இறுதியில் தோல்வி அடைந்த நிலையில் விம்பிள்டன் டென்னிசில் இருந்து சானியா விடைபெற்றார்.


ஜூலை 8 : 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் 100 நாள் கவுண்ட் டவுன் தொடங்கியது.


ஜூலை 9 : விம்பிள்டன் டென்னிசில் கஜகஸ்தான் வீராங்கனை ரைபகினா முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சரித்திரம் படைத்தார்.


ஜூலை 9 : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.


ஜூலை 5 : சென்னையில் வணிக வளாகங்கள், திரையரங்குகள், மார்க்கெட் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.


ஜூலை 5 : காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 3-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.


ஜூலை 5 : வாக்காளர் பட்டியலில் இணைக்க வாக்காளர்களிடம் இருந்து பெறுகிற ஆதார் தரவுகள், பொது வெளியில் கசிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது.


ஜூலை 5 : உலகின் 2-வது பழமையான கண் மருத்துவமனையான எழும்பூர் அரசு கண் மருத்துவமனை 204-வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.


ஜூலை 6 : மாநிலங்களவை நியமன எம்.பி.யாக இசையமைப்பாளர் இளையராஜாவை நியமித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தடகள வீராங்கனை பி.டி.உஷாவும் எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


ஜூலை 6 : சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 2 மாத இடைவெளியில் மீண்டும் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது.


ஜூலை 6 : தமிழகத்தில் உள்ள அரசு நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


ஜூலை 6 : மத்திய நீர்வள அமைச்சகத்தின் நிலத்தடி நீர் குறித்த அறிவிப்பு தமிழகத்துக்கு பொருந்தாது என்று அரசு விளக்கம் அளித்துள்ளது.


ஜூலை 7 : அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 481 என்ஜினீயரிங் கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாக கல்லூரிக்கு முதலிடம் கிடைத்தது.


ஜூலை 7 : கோதுமையை தொடர்ந்து கோதுமை மாவு, மைதா, ரவை போன்றவை ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.


ஜூலை 7 : தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


ஜூலை 8 : திருவண்ணாமலை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 2 லட்சமாவது மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


ஜூலை 8 : ஏரி, குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை இலவசமாக விவசாயிகள் எடுத்துப்பயன்படுத்துவதற்கு வழிகாட்டி நெறிமுறைகளை அரசு பிறப்பித்துள்ளது.


ஜூலை 8 : சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ.15 குறைக்குமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.


ஜூலை 8 : அனைத்து வாக்காளர்களும் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்துள்ளது.


ஜூலை 9 : 5 ஆண்டுகளில் நாட்டில் பெட்ரோல் காணாமல் போய்விடும். ஸ்கூட்டர் அல்லது கார்கள் பசுமை ஹைட்ரஜன், எத்தனால், சி.என்.ஜி. அல்லது எல்.என்.ஜி. போன்ற பசுமை எரிப்பொருளில் தான் இயக்கப்படும் என மத்திய மந்திரி நிதின் கட்காரி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.


ஜூலை 9 : ஆன்மிகத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல என்றும், சாதியால், மதத்தால் பிளவுபடுத்துபவர்களுக்கு தான் தாங்கள் எதிரிகள் என்றும், அறிவார்ந்த யாரும் அரசுக்கு ஆலோசனை சொல்லலாம் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


ஜூலை 9 : குற்ற வழக்குகளில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக ஒரு நடைமுறையை உருவாக்க வேண்டும் என்று டி.ஜி.பி.க்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


ஜூலை 6 : கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மாகாணத்தை கைப்பற்ற ரஷிய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளன.


ஜூலை 7 : பிறப்பு விகிதம் குறைந்த நிலையில் சீனர்களின் ஆயுள்காலம் 0.6 ஆண்டு அதிகரித்து 77.93 ஆண்டுகளாகி இருக்கிறது.


ஜூலை 7 : கட்சியில் பலரும் போர்க்கொடி உயர்த்திய நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.


ஜூலை 7 : உக்ரைன் போருக்கு பின்னர் உலகமெங்கும் 7 கோடி மக்களை விலைவாசி உயர்வு, வறுமையில் தள்ளி உள்ளது என ஐ.நா. சபை அறிக்கையில் தகவல் வெளியாகி இருக்கிறது.


ஜூலை 8 : ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே, தேர்தல் பிரசாரம் செய்தபோது, சுட்டுக்கொல்லப்பட்டார்.


ஜூலை 9 : இலங்கையில் அரசு எதிர்ப்பு போராட்டம் உச்சம் தொட்டது. அதிபர் மாளிகைக்குள் மக்கள் நுழைந்தனர். கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு ஓட்டம் பிடித்தார்.


ஜூலை 10 : இயற்கை விவசாயத்துக்கான மக்கள் இயக்கம் வருகிற ஆண்டுகளில் மிகப்பெரிய வெற்றி பெறும் எனக்கூறிய பிரதமர் மோடி, விவசாயிகள் அனைவரும் இயற்கை விவசாயத்தில் இணைய அழைப்பு விடுத்தார்.


ஜூலை 10 : தமிழகத்தில் ஒரு லட்சம் இடங்களில் நடந்த சிறப்பு முகாம் மூலம் 17¼ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.


ஜூலை 11 : மக்கள் தொகையில் அடுத்த ஆண்டு சீனாவை இந்தியா முந்தும் என்று ஐ.நா. கணித்துள்ளது.


ஜூலை 11 : பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதல் காரணமாக அ.தி.மு.க. தலைமை அலுவலகம் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.


ஜூலை 11 : புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் உச்சியில் 9 ஆயிரத்து 500 கிலோ எடையில் வெண்கலத்தால் உருவாக்கப்பட்ட தேசிய சின்னத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.


ஜூலை 11 : ஜப்பானில் நடைபெற்ற நாடாளுமன்ற மேலவைக்கான தேர்தலில், சமீபத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட முன் னாள் பிரதமர் ஷின்ஜோ அபேயின் கட்சி அமோக வெற்றி பெற்றது.


ஜூலை 12 : வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு தொடர்பாக அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.


ஜூலை 12 : ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு சிவசேனா ஆதரவு அளிப்பதாக உத்தவ் தாக்கரே திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.


ஜூலை 12 : புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் உச்சியில் நிறுவப்பட்ட தேசிய சின்னத்தில் சிங்கங்களின் தோற்றத்தை மாற்றி விட்டதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.


ஜூலை 12 : தமிழகத்தில் உள்ள காற்றாலைகள் தினசரி 10 முதல் 12 கோடி யூனிட் மின்சாரத்தை தயாரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.


ஜூலை 12 : மேற்கு உக்ரைனில் உள்ள ரஷியாவின் ஆயுத கிடங்கை உக்ரைன் படை தாக்கி அழித்தது.


ஜூலை 13 : செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் 28-ந் தேதி தொடங்கி வைக்கிறார். இதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.


ஜூலை 13 : தமிழகத்தில் 103 நாட்களில் ரூ.5,000 கோடி வருவாய் பெற்று பதிவுத்துறை சாதனை படைத்தது.


ஜூலை 13 : ரூ.71 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி, பிரபஞ்சத்தின் வண்ண புகைப்படங்களை எடுத்து அனுப்பி உள்ளது.


ஜூலை 13 : இலங்கையில் போராட்டத்தை ஒடுக்க அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பி சென்றார். இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமனம் செய்யப்பட்டார்.


ஜூலை 14 : பள்ளிக்கு வரும் மாணவர்கள் காப்பு, செயின், கயிறு அணிய கூடாது. பிறந்த நாளன்றும் சீருடையில்தான் வரவேண்டும் என்று சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.


ஜூலை 14 : வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு திரும்பிய ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி ஆனது. இதன் மூலம், இந்தியாவில் குரங்கு அம்மை நுழைந்துள்ளது. இதையடுத்து, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.


ஜூலை 14 : இலங்கை அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்தார். அவர் சிங்கப்பூருக்கு தப்பி ஓடியுள்ளார்.
ஜூலை 15 : இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, அவரது சகோதரர் பசில் ராஜபக்சே ஆகியோர் நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.


ஜூலை 14 : மூக்கு வழியாக செலுத்தும் மருந்தால் 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் அளவு 94 சதவீதம் குறையும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


ஜூலை 15 : கொரோனாவுக்கு எதிராக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச ‘பூஸ்டர்’ தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.


ஜூலை 15 : தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எப்.) வெளியிட்ட பட்டியலில் ஒட்டு மொத்த தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி. தொடர்ந்து 4-வது முறையாக முதல் இடத்தை தக்க வைத்திருக்கிறது. இதில் அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஆண்டை விட சற்று முன்னேற்றம் கண்டுள்ளது.


ஜூலை 16 : கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணை நிரம்பி விட்டது. அணைக்கு வந்துகொண்டிருக்கும் 1 லட்சத்து 23 ஆயிரம் கனஅடி நீர், அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


ஜூலை 16 : சென்னயில் நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டியை முன்னிட்டு திருச்சியில் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்து 140 மாணவ-மாணவிகளுக்கு செஸ் விளையாட்டு பாடம் நடத்தி உலக சாதனை படைக்கப்பட்டது.


ஜூலை 16 : அரசு ஆஸ்பத்திரிகளில் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளும் பெண் இறந்துவிட்டால், அவரின் குடும்பத்திற்கு வழங்கக்கூடிய இழப்பீட்டு தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.


ஜூலை 16 : தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில் மாநிலங்கள் அளவில் 163 கல்வி நிறுவனங்களுடன் தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது.


ஜூலை 15 : இத்தாலி பிரதமர் டிராகி பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அவரது ராஜினாமாவை அதிபர் செர்ஜியோமே ட்டரெல்லா நிராகரித்து விட்டார்.


ஜூலை 17 : கொரோனாவுக்கு எதிராக 200 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா அசத்தி உள்ளது. இதற்கு பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.


ஜூலை 18 : மனநல ஆலோசகர்கள் மூலம் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.


ஜூலை 18 : கேரளாவில் குரங்கு அம்மை நோய் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் வெளிநாட்டு பயணிகளை கட்டாயமாக பரிசோதிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


ஜூலை 18 : தமிழகத்தில் வீடுகள், தொழிற்சாலைகளுக்கான மின்கட்டணம் உயருகிறது. அதே நேரம் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


ஜூலை 18 : இலங்கையில் மீண்டும் அவசரநிலையை பிறப்பித்து இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டார்.


ஜூலை 19 : நீட் விதி விலக்கு மசோதா தொடர்பாக தமிழக அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


ஜூலை 19 : நீட் தேர்வு நடந்து முடிந்த நிலையில், அந்த தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்து 162 வினாக்கள் கேட்கப்பட்டதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.


ஜூலை 19 : முப்படைகளில் 1 லட்சத்து 35 ஆயிரம் காலியிடங்கள் உள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜூலை 20 : மேகதாது அணை தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


ஜூலை 20 : கடந்த ஜூலை மாதம் 14-ந் தேதி நிலவரப்படி, இந்தியாவில் 13 லட்சத்து 34 ஆயிரத்து 385 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று மாநிலங்களவையில் மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார்.


ஜூலை 20 : கொரோனா தொற்று அதிகமாக உள்ள தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்களின் நிலவரம் குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்பவர்களை தீவிரமாக கண்காணிக்க அறிவுரை வழங்கி உள்ளது.


ஜூலை 20 : தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவின்படி சீமை கருவேல மரங்களை அகற்றி, அவ்வப்போது அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோட்டு உத்தரவிட்டுள்ளது.


ஜூலை 20 : அமெரிக்காவில் ஒரே பாலின திருமணத்தை பாதுகாப்பதற்கான சட்டம், நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.


ஜூலை 21 : இலங்கையின் 8-வது அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார்.


ஜூலை 21 : சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் ஓய்வு வயதை உயர்த்தும் திட்டம் இல்லை என்று மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு கூறினார்.


ஜூலை 21 : ஜனாதிபதி தேர்தலில் 64 சதவீத ஓட்டுகளை பெற்று பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு அபார வெற்றி பெற்றார்.


ஜூலை 22 : முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியை கவுரவிக்கும் வகையில் மெரினாவில் கடலுக்குள் 137 அடி உயரத்தில் ‘பேனா' நினைவுச்சின்னம் அமைக்கப்பட உள்ளது. பார்வையாளர்கள் நடந்து சென்று பார்வையிட கடல் மீது பாலமும் அமைக்கப்படுகிறது.


ஜூலை 22 : பணியிடங்களில் அனைவருக்கும் கொரோனாவுக்கு எதிராக இலவச பூஸ்டர் தடுப்பூசி போடுமாறு அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


ஜூலை 22 : தகுதி வாய்ந்தவர்களில் 4 கோடி பேர் கொரோனாவுக்கு எதிராக ஒரு டோஸ் தடுப்பூசி கூட இன்னும் போட்டுக்கொள்ளவில்லை என்று மக்களவையில் மந்திரி பாரதி பிரவிண் தெரிவித்தார்.


ஜூலை 22 : தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகராக சூர்யா தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சிறந்த நடிகையாக அபர்ணா பாலமுரளி தேர்வானார். ‘சூரரைப் போற்று’ சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், 5 தேசிய விருதுகளை அள்ளியது.


ஜூலை 22 : இலங்கை புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தனா பதவி ஏற்றார். அவர் உள்பட 18 பேர் கொண்ட மந்திரிசபையும் பொறுப்பேற்றது.


ஜூலை 23 : உக்ரைன் போர் 150-வது நாளை எட்டியது. இரு தரப்பும் பரஸ்பரம் தாக்குதலை தொடர்ந்து கொண்டிருக்கின்றன.


ஜூலை 23 : தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.


ஜூலை 23 : 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை சென்னையில் நடத்த ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


ஜூலை 23 : மத்திய அரசுடன் இணைந்து சென்னையில் அக்டோபர் மாதம் புலிகள் உச்சி மாநாடு நடத்தப்படும் என்று சர்வதேச புலிகள் தினத்தையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


ஜூலை 23 : கூவம் ஆற்றை தொடர்ந்து தற்போது ஆழமான அடையாறு ஆற்றில் மெட்ரோ ரெயிலுக்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணி வருகிற நவம்பர் மாதம் தொடங்கப்படுகிறது. வருகிற 2026-ம் ஆண்டு இந்தப் பாதையில் பயணிகள் திரில் பயணம் செய்யலாம்.


ஜூலை 23 : இரவிலும் தேசிய கொடியை பறக்க விடலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.


ஜூலை 28 : சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. 1927-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் கவுரவமிக்க இந்த போட்டி, ஆசியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் நடைபெறுகிறது. இதில் 187 நாடுகள் பங்கேற்கின்றன. எந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளையும் விட இது அதிக எண்ணிக்கையை கொண்டதாகும். 6 அணிகளில் 30 வீரர்களை கொண்டு இந்த போட்டியில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அணியை இந்தியா களமிறக்குகிறது. ஜூன் 19-ந்தேதியன்று டெல்லியில் இந்திராகாந்தி தேசிய விளையாட்டரங்கில் முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடர் ஜோதி ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைமையகத்தை நோக்கி செல்வதற்கு முன்பு இந்த ஜோதி இந்தியாவில் 40 நாட்களுக்கும் அதிகமாக சுமார் 20 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு 75 முக்கியமான இடங்கள் வழியாக பயணம் செய்து சென்னை வந்து சேர்ந்திருக்கிறது.


ஜூலை 25 : கடந்த 18-ந் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக களம் கண்ட திரவுபதி முர்மு, தன்னை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்காவை 2 லட்சத்து 96 ஆயிரத்து 626 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். நாட்டில் பழங்குடி இனத்தில் இருந்து வந்துள்ள முதல் ஜனாதிபதி. இந்தியாவின் இரண்டாவது பெண் ஜனாதிபதி, இந்திய நாட்டின் ஜனாதிபதி நாற்காலியை இதுவரை அலங்கரித்த அனைவருமே நாட்டின் சுதந்திரத்துக்கு முன்னர் பிறந்தவர்கள்தான். இவர் மட்டும்தான் சுதந்திரத்துக்கு பின்னர் பிறந்த முதல் ஜனாதிபதி என்பதெல்லாம் சிறப்பு. ஒடிசாவில், ராய்ரங்பூரில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, படித்து, பட்டம் பெற்று, ஒடிசா நீர்வளத்துறையில் இளநிலை உதவியாளராகவும், பின்னர் பள்ளிக்கூட ஆசிரியராகவும் பணியாற்றி விட்டு, பொது வாழ்வுக்கு வந்தார். பஞ்சாயத்து கவுன்சிலர், ஒடிசா சட்டசபை உறுப்பினர், மாநில மந்திரி, நாடாளுமன்ற உறுப்பினர், ஜார்கண்ட் கவர்னர் என்று பல படிக்கட்டுகள் ஏறி வந்து நாட்டின் ஜனாதிபதி என்ற உன்னத உயரத்தை எட்டிப்பிடித்திருக்கிறார், 64 வயதான திரவுபதி முர்மு. தலைநகர் டெல்லியில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு விழா இன்று (திங்கட்கிழமை) காலை 10.15 மணிக்கு நடக்கிறது. இந்த விழாவுக்காக நாடாளுமன்ற மைய மண்டபம் விழாக்கோலம் பூண்டிருக்கிறது. பதவி ஏற்பு விழாவுக்கு முன்னதாக காலை 9.25 மணிக்கு திரவுபதி முர்மு ஜனாதிபதி மாளிகைக்கு வருகிறார். அங்கு அவருக்கு மரியாதை வழங்கப்படுகிறது. அதையடுத்து 9.50 மணிக்கு திரவுபதி முர்முவும், ராம்நாத் கோவிந்தும் ஜனாதிபதி மாளிகையில் இருந்து நாடாளுமன்றத்துக்கு புறப்படுகிறார்கள். 10.03 மணிக்கு அவர்கள் நாடாளுமன்றம் வந்தடைகிறார்கள். அங்கு அவர்களை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்று நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். 10.15 மணிக்கு திரவுபதி முர்மு, நாட்டின் 15-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். அவருக்கு சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். புதிய ஜனாதிபதி பதவி ஏற்றதும் தொடர்ந்து 21 குண்டுகள் முழங்கும். அதைத்தொடர்ந்து திரவுபதி முர்மு பதவி ஏற்பு உரை ஆற்றுவார்.


ஜூலை 24 : அதிக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்துக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை விருது வழங்கினார். இந்த விருதை அவரது மகள் ஐஸ்வர்யா பெற்றுக்கொண்டார்.


ஜூலை 24 : 750 கிராமப்புற மாணவர்கள் வடிவமைத்த ‘ஆசாதி சாட்’ செயற்கைகோள் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.


ஜூலை 24 : தண்டோரா போட தடை விதித்து தலைமைச்செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.


ஜூலை 24 : டெல்லியிலும் குரங்கு அம்மை நுழைந்து விட்டது. மணாலி சென்று வந்த ஒருவருக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


ஜூலை 24 : தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 689 தேர்வு மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நடந்தது. இந்த தேர்வை 18½ லட்சம் பேர் எழுதினார்கள். 3½ லட்சம் பேர் எழுதவில்லை.


ஜூலை 24 :  ‘வாட்’ வரி மூலம் பெற்ற வருவாயை இழந்ததாக மாநிலங்கள் முறையிட்டதாலும், கேட்டுக்கொண்டதாலும் உணவு பொருட்கள் மீது ஜி.எஸ்.டி. வரிவிதிக்கப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.


ஜூலை 24 : பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவிவரும் நிலையில் அரசு சொத்துகளை வெளிநாடுகளுக்கு விற்கும் அவசர சட்டத்துக்கு மந்திரி சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.


ஜூலை 24 : ஒப்பந்தத்தை மீறி உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்திய ரஷிய படை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உக்ரைன் போர்க்கப்பலை தாக்கி அழித்தது.


ஜூலை 24 : ஒலிம்பிக்கை தொடர்ந்து உலக தடகள சாம்பியன்ஷிப்பின் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.


ஜூலை 25 : அமெரிக்காவுடனும், தென் கொரியாவுடனும் மோதல் வந்தால், வடகொரியா அணு ஆயுதங்களை பயன்படுத்தும் என வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் எச்சரித்துள்ளார்.


ஜூலை 25 : நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவி ஏற்றார். பழங்குடி இனத்தை சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ள அவருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


ஜூலை 25 : கடந்த 9 ஆண்டுகளில் 5 ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்ட அளவு தண்ணீரை காவிரியில் கர்நாடகா திறந்துவிடவில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.


ஜூலை 25 : தமிழ்நாட்டில் யூகலிப்டஸ் மரங்களை நடுவதற்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


ஜூலை 25 : உலக தடகள போட்டி நிறைவு பெற்றது. பதக்கப்பட்டியலில் அமெரிக்கா 13 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 33 பதக்கங்களுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்தது.


ஜூலை 26 : காமன்வெல்த் போட்டியில் இருந்து இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா காயம் காரணமாக விலகி இருக்கிறார்.


ஜூலை 26 : பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பிச்சாவரம் அலையாத்திக் காடுகள், கரிக்கிலி பறவைகள் காப்பகம் ஆகியவை ஈரநிலங்களுக்கான ‘ராம்சர்’ அங்கீகாரத்தை பெற்றுள்ளன.


ஜூலை 26 : இந்திய ராணுவத்துக்கு ரூ.28 ஆயிரத்து 732 கோடி மதிப்புள்ள ராணுவ சாதனங்கள் மற்றும் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.


ஜூலை 26 : சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியேற ரஷியா முடிவு செய்துள்ளது.


ஜூலை 26 : புதிய வாக்காளராக பதிவு செய்ய 17 வயதை கடந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.


ஜூலை 26 : முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலை கடற்படையிடம் கொச்சி கப்பல் கட்டும் தளம் வழங்கியது. இது ஐ.என்.எஸ். விக்ராந்த் என்ற பெயரில் கடற்படையில் சேரும்.


ஜூலை 26 : தனுஷ்கோடி அரிச்சல்முனையில் இருந்து இந்திய கடலோர காவல் படை படகில் கடல் மார்க்கமாக பாம்பனுக்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதி எடுத்து வரப்பட்டது.


ஜூலை 27 : இங்கிலாந்தின் உயரிய விருதான சர் வின்ஸ்டன் சர்ச்சில் தலைமைத்துவ விருதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு வழங்கி பிரதமர் போரிஸ் ஜான்சன் கவுரவித்துள்ளார்.


ஜூலை 27 : 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.


ஜூலை 27 : 75 நகரங்களை கடந்து சென்னை வந்தடைந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


ஜூலை 27 : சென்னை மெரினா முதல் கோவளம் வரையிலான கடற்கரை பகுதியை ரூ.100 கோடியில் மறு சீரமைக்க தமிழக அரசு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.


ஜூலை 28 : வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.


ஜூலை 28 : சென்னையில் கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.


ஜூலை 28 : 18 மாத ஏற்பாடுகளை 4 மாதங்களில் செய்து முடித்துள்ளோம் என்றும், செஸ் ஒலிம்பியாட் போட்டி மூலம் தமிழ்நாட்டின் மதிப்பு மேலும் உயருகிறது என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


ஜூலை 29 : புதிய தேசிய கல்வி கொள்கை சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகளை எடுக்க மாணவர்களுக்கு சுதந்திரம் கொடுப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தெரிவித்தார்.


ஜூலை 29 : தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.


ஜூலை 29 : 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை சென்னையில் நடத்த ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


ஜூலை 29 : மத்திய அரசுடன் இணைந்து சென்னையில் அக்டோபர் மாதம் புலிகள் உச்சி மாநாடு நடத்தப்படும் என்று சர்வதேச புலிகள் தினத்தையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


ஜூலை 29 : செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்றில் இந்திய அணிகள் அனைத்தும் அபார வெற்றி பெற்றது.


ஜூலை 29 : பாகிஸ்தானில் முதல் முறையாக இந்துபெண் மனிஷா ரூபேட்டா துணை போலீஸ் சூப்பிரண்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


ஜூலை 29 : காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காம் நகரில் கோலாகலமாக தொடங்கியது. பெண்கள் ஆக்கி போட்டியில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் வெற்றியை ருசித்தது.


ஜூலை 30 : 22-வது காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவுக்கு ஒரே நாளில் 3 பதக்கம் கிடைத்தது. இதில் பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்று அட்டகாசப்படுத்தினார்.


ஜூலை 30 : உக்ரைனில் ரஷிய படைகள் வசம் உள்ள நகரில் உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 100 ரஷிய வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.


ஜூலை 30 : செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 2-வது சுற்றிலும் இந்திய அணிகள் அமோக வெற்றி பெற்றன.


ஜூலை 30 : இந்தியாவில் முதல் குரங்கு அம்மை நோயாளி குணம் அடைந்தார்.


ஜூலை 30 : குரூப்-1 பதவிகளுக்கான இறுதிப்பட்டியல் வெளியான நிலையில், 66 காலி பணியிடங்களில் 57 இடங்களை பெண்களும், 9 இடங்களை ஆண்களும் தக்கவைத்துள்ளனர்.


ஜூலை 30 : 5ஜி அலைக்கற்றை ஏலம் 5-வது நாளாக நடந்த நிலையில், அலைக்கற்றை விற்பனை ரூ.1.50 லட்சம் கோடியை நெருங்கி உள்ளது.ஜூலை 31 : போலீஸ் துறையில் சிறப்பாக சேவையாற்றி வரும் மாநிலங்களுக்கு மிக உயர்ந்த கவுரவமாக கருதப்படும் ஜனாதிபதியின் சிறப்பு கொடியை தமிழக போலீசாருக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார். அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.


ஜூலை 31 : ஜனாதிபதி கொடி கிடைத்தது வரலாற்றுமிகு பெருமை என்றும், தமிழக போலீசார் அனைவருக்கும் அரசு பதக்கம் வழங்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


ஜூலை 31 : ஆகஸ்டு 13-ந் தேதி முதல் 15-ந் தேதிவரை ஒவ்வொருவர் வீட்டிலும் தேசியக் கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.


ஜூலை 31 : கமுதி அருகே 2,500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி, மண்குவளை கண்டெடுக்கப்பட்டு உள்ளது.


ஜூலை 31 : காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், பளுதூக்குதலில் இந்திய இளம்வீரர் லால்ரினுங்கா தங்கம் வென்று சாதனை படைத்தார்.

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||