உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

MRB RECRUITMENT 2019 | MRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : லேப் டெக்னீசியன் . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1508 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.12.2019.

  • MRB RECRUITMENT 2019 | MRB  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : லேப் டெக்னீசியன் .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1508 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.12.2019.
  • இணைய முகவரி : www.mrb.tn.gov.in 
தமிழக மருத்துவ துறையில் லேப் டெக்னீசியன் பணியிடங்களுக்கு 1508 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

தமிழக அரசின் மருத்துவ துறையில் உள்ள மருத்துவ சேவைப் பணியிடங்களை நிரப்ப எம்.ஆர்.பி. எனும் மருத்துவ தேர்வு ஆணையம் செயல்படுகிறது. தற்போது இந்த அமைப்பு கிரேடு-2 தரத்திலான லேப் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 1508 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 465 இடங்களும், பி.சி. பிரிவினருக்கு 398 இடங்களும், பி.சி.எம். பிரிவினருக்கு 53 இடங்களும், எம்.பி.சி./டி.என்.சி. பிரிவினருக்கு 301 இடங்களும், எஸ்சி. பிரிவினருக்கு 226 இடங்களும், எஸ்.சி.(ஏ.) பிரிவினருக்கு 45 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 20 இடங்களும் உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறும் பிரிவினர் 57 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவினரில் ராணுவீரர், விதவை, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி:

பிளஸ்-2 தேர்ச்சிக்குப் பின்பு ஓராண்டு மெடிக்கல் லேப் டெக்னாலஜி சான்றிதழ் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், விதவைகள் ஆகியோர் ரூ.300-ம் மற்றவர்கள் ரூ.600-ம், கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 9-ந் தேதியாகும். வங்கி வழியாக கட்டணம் செலுத்த கடைசி நாள் டிசம்பர் 11-ந் தேதியாகும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.mrb.tn.gov.in என்ற இணைய தள பக்கத்தைப் பார்க்கவும்.
Read More News - Download

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.