உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

TNPSC குரூப்-4 காலி பணியிடங்கள் 9,398 ஆக அதிகரிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிந்து முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், காலி பணியிடங்கள் எண்ணிக்கை 6,491-ல் இருந்து 9,398 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 6,491 காலி பணியிடங்களை நிரப்புவதற் கான டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு கடந்த செப்டம்பர் 1-ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வு நடந்து 72 நாட்களில், அதாவது கடந்த 12-ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

இந்நிலையில், விரைவில் பணி நியமனம் நடக்க உள்ள நிலையில், அந்தந்த துறைகளின் தேவை அடிப்படையில் காலியிடங்களின் எண்ணிக்கை 6,491-ல் இருந்து 9,398 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் 397-ல் இருந்து 607 ஆகவும், இளநிலை உதவி யாளர், பில்கலெக்டர் ஆகிய பணியிடங்கள் 2,792-ல் இருந்து 4,558 ஆகவும், தட்டச்சர் பணி யிடங்கள் 1,901-ல் இருந்து 2,734 ஆகவும், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் 784-ல் இருந்து 994 ஆகவும் உயர்த்தப் பட்டுள்ளது. கள அளவையர் காலி பணியிடங்கள் எண்ணிக்கை 509-ல் இருந்து 504 ஆக குறைந் துள்ளது. இதன்மூலம், 2,907 காலி பணியிடங்கள் அதிகரித் துள்ளன.
Read More News - Download

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.