TNCOOPSRB RECRUITMENT 2019 | TNCOOPSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 300 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.11.2019.

  • TNCOOPSRB  RECRUITMENT 2019 | TNCOOPSRB  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : உதவியாளர், இளநிலை உதவியாளர்
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 300 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.11.2019.
  • இணைய முகவரி : www.tncoopsrb.in
தமிழக கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 300 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு கூட்டுறவு அமைப்புகளில் உள்ள காலியிட விவரத்தை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-1-2001-ந்தேதிக்கு முன்னர் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். பொது பிரிவினர் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறும் மற்ற பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து, கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

விருப்பம் உள்ளவர்கள், www.tncoopsrb.in என்ற இணையதளத்தில் முழுமையான விவரங்களை படித்து அறிந்து கொண்டு சமர்ப்பிக்க வேண்டும். அப்போது தேவையான சான்றுகளை குறிப்பிட்ட அளவுக்குள் பதிவேற்றம் (அப்லோடு) செய்ய வேண்டும். நவம்பர் 22-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இதற்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 29 அன்று நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. தேர்வு முடிவு வெளியான பின்னர் நேர்காணல் நாள் அறிவிக்கப்படும். இது பற்றிய விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டு உள்ள இணையதள பக்கத்தில் பார்க்கலாம்

Comments