உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

TRB கணினி ஆசிரியர்கள் தேர்வு முடிவு வெளியீடு 

கணினி ஆசிரியர்களின் தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆசிரி யர் தேர்வு வாரியம் - கணினி பயிற்றுநர் நிலை - 1 (முதுகலை ஆசிரியர் நிலை) கணினி வழி யிலான தேர்வு கடந்த ஜூன் 23, 27-ம் தேதிகளில் நடைபெற்றது.

இந்த தேர்வுக்கான தேர்வு மதிப்பெண் முடிவுகள் நேற்று (நவ.25) www.trb.tn.nic.in | Direct Recruitment of Computer Instructors Grade I (PG Cadre) - 2018 - 2019 - Publication of Computer Based Examination Result இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தேர்வர்களின் மதிப்பெண் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 814 முதுகலை கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூன் மாதம் 23 மற்றும் 27-ந்தேதிகளில் ஆன்லைனில் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 26 ஆயிரத்து 882 பேர் எழுதினர்.

இதற்கான தேர்வு முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு இருக்கிறது. அதில் 1,758 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். இதில் இருந்து 814 முதுகலை கணினி ஆசிரியர்கள் தரவரிசை அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்து இருக்கிறது.
Read More News - Download

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.