பதவி உயர்வு, புதிய ஆசிரியர் நியமன கவுன்சிலிங் அறிவிப்பு

தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் மற்றும் பட்டதாரி, முதுகலை புதிய ஆசிரியர் பணி நியமன கவுன்சிலிங் ஆகியவை, வரும் 30ம் தேதி முதல் சென்னையில் நடக்கிறது.

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங், வரும் 30ம் தேதி சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக 130 பேரும், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக 165 பேரும் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படும். புதிதாக தேர்வான முதுகலை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங், வரும் 31ம் தேதி சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.

பெண்கள் பள்ளியில் வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பணியிடங்களுக்கு காலை 9.30 மணிக்கும், தமிழ், ஆங்கிலம், உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களுக்கான கவுன்சிலிங் பகல் 1.30 மணிக்கும் நடக்கிறது. கணிதம், பொருளியல் ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் காலை 9.30 மணிக்கும், இயற்பியல், வணிகவியல், வரலாறு, புவியியல் மற்றும் அரசியல் அறிவியல் ஆகிய பாடங்களுக்கான கவுன்சிலிங் பகல் 1.30க்கும் நடைபெறுகிறது. புதிய பட்டதாரி ஆசிரியர்கள் 1,941 பேர் பணி நியமன கவுன்சிலிங், செப்., 3ம் தேதி நடக்கிறது. சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி (தமிழ்), சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி (கணிதம், ஆங்கிலம்), கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி (அறிவியல்) மற்றும் அசோக்நகர் மகளிர் மேல்நிலைப் பள்ளி (வரலாறு, புவியியல்) ஆகிய நான்கு இடங்களில், இந்த கவுன்சிலிங் நடக்கிறது.

3 comments:

  1. sir will u tell me the HS HM 2011 promotion list for MY MOTHER...... SHE IS A PG in PHY in GHSs........

    ReplyDelete
  2. ABOVE MENTIONED
    "பதவி உயர்வு, புதிய ஆசிரியர் நியமன கவுன்சிலிங் அறிவிப்பு"


    IS 2011 or 2010.......reply meee....sir

    ReplyDelete
  3. Sir kindly tell me when is the PG Maths counselling , with in the district. Also tell me the PG maths vacancies in Trichy district

    ReplyDelete

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||

Labels