உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை (28.03.211) தொடங்குகிறது. தனித்தேர்வர்கள் உள்பட 9 1/2 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்

தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. தனித்தேர்வர்கள் உள்பட 91/2 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க 4 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதம் 3-ந் தேதி வெளியிடப்பட்டது. 

அதன்படி, பிளஸ்-2 தேர்வு கடந்த 2-ந் தேதி தொடங்கி, 27-ந் தேதி வரை நடந்தது. மொத்தம் 71/2 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதற்கிடையில், 10-ம் வகுப்பு மெட்ரிக்குலேஷன் மற்றும் ஆங்கிலோ-இந்தியன் தேர்வுகள் கடந்த 22-ந் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் நாளை (28.03.211) தொடங்குகின்றன.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 6,520 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 56 ஆயிரத்து 956 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 22 ஆயிரத்து 21 பேர். மாணவிகள் 4 லட்சத்து 35 ஆயிரத்து 935 பேர். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 2,800 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஓ.எஸ்.எல்.சி. தேர்வை 1,561 பேர் எழுதுகிறார்கள்.

சென்னையில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வை 272 பள்ளிகளைச் சேர்ந்த 36,148 மாணவ-மாணவிகள் 223 மையங்களில் எழுத உள்ளனர். இவர்களில் மாணவர்கள் 17,124 பேர். மாணவிகள் 19,024 பேர். தனித்தேர்வர்கள் ஒரு லட்சம் பேரையும் சேர்த்தால் மொத்தம் 91/2 லட்சம் பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கலந்து கொள்கிறார்கள்.

தேர்வில் மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதை தடுப்பதற்காக 4 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்குனரும், பள்ளிக்கல்வி பொறுப்பு இயக்குனருமான தண்.வசுந்தராதேவி தெரிவித்தார். தேர்வு அட்டவணை கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.


1 comment:

  1. Respected sir, wel come

    Approxmetely +2 results relese ?

    ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.