உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்த்தப் பட்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

4 comments:

 1. எங்கள் குரல் கேட்குமா? - TETல் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெற்ற பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைகள் – www.TeacherTN.comன் சிறப்பு கட்டுரை
  www.TeacherTN.comன் சிறப்பு கட்டுரை விரைவில் வெளியிடப்படும்

  ReplyDelete
 2. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 32 பேருக்கு ஆசிரியர் பணி வழங்க உத்தரவு
  ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாமல் 32 பேர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உறுதி செய்தது.
  விருதுநகர் மாவட்டம், சாட்சியாபுரத்தைச் சேர்ந்த ஜெயசாந்தி உள்ளிட்ட 32 பேர் தாக்கல்செய்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஹரிபரந்தாமன் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
  பள்ளி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில்தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றவிதிமுறையை மத்திய அரசு 2010 ஏப். 1-இல் கொண்டு வந்தது.
  அதற்கு முன்பே எங்களை ஆசிரியர்களாக பணிகளில் நியமிக்க மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஒப்பதல் அளித்தனர். இருப்பினும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்தால், எங்கள் பணி நியமனத்துக்கான ஒப்புதலை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ஏற்க மறுத்துள்ளார்.
  ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்கள் போதுமான அளவில் இல்லாத நிலை ஏற்பட்டால், ஓராண்டு காலத்தில் மத்திய அரசை, மாநில அரசு அணுகி தகுதியில் இருந்து விதிவிலக்கு பெறவேண்டும். ஆனால், தமிழக அரசு அவ்வாறு கோரவில்லை. இதனால், பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு பணி வழங்க உத்தரவிடவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
  மனுவை விசாரித்த நீதிபதி டி. ஹரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:
  மத்திய அரசின் சட்ட விதிப்படி படி, ஆசிரியர்களை பணியில் நியமிக்கமுடியாத நிலை ஏற்பட்டால், மாநில அரசு அதற்கான காலக்கெடுவுக்குள் விதிவிலக்கு கோரி விண்ணப்பித்து இருக்க வேண்டும்.
  ஆனால், தமிழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டபோதும் அரசு அதற்காக மத்திய அரசை அணுகவில்லை. இந்தச் சூழ்நிலையில் 32 மனுதாரர்களையும் ஆசிரியர்களாக பணியில் நியமிக்க மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஒப்புதல் அளித்ததில் தவறு காணமுடியவில்லை. எனவே, 32 பேருக்கும் அதிகாரிகள் தாற்காலிக ஒப்புதல் அளிக்க வேண்டும். மேலும், அதற்கான ஊதியம் பெறுவதற்கும் அனுமதிவழங்க வேண்டும். இந்த 32 பேரும் 2015 மார்ச் 31-க்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெறாவிட்டால் அவர்களை நீக்கம் செய்து தகுதியானவர்களை நியமிக்கலாம். மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு அவ்வப்போது தகுதித் தேர்வுகளை நடத்தவேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணை ஜூன் 6-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

  ReplyDelete
 3. ஆசிரியர் தகுதி தேர்வான, டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகும்' என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

  கடந்த ஆண்டு ஜூலை மற்றும் அக்டோபரில் நடந்த,ஆசிரியர் தகுதி தேர்வுகள் மூலம், 22 ஆயிரத்து 500 பேர், ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இன்னும், 20 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டி உள்ளது. இதற்காக, அடுத்த, டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பை, பட்டதாரிகள் எதிர்பார்த்தபடி உள்ளனர். அடுத்த தேர்வை நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும், இது குறித்த அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகும் எனவும், கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டைப்போல், ஜூலையில் தேர்வு நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும் என, சட்டசபையில், பல்வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள், வலியுறுத்தினர். இதுகுறித்து, முதல்வர் பரிசீலனை செய்து,முடிவை அறிவிப்பார் என, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் தெரிவித்திருந்தார். எனவே, இது தொடர்பாக, முதல்வரின் அறிவிப்பையும், பட்டதாரிகள் எதிர்பார்த்தபடி உள்ளனர்.

  ReplyDelete
 4. 8-ல் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சென்னையில் ஆர்ப்பாட்டம்
  8-ல் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சென்னையில் ஆர்ப்பாட்டம்ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 8-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்புக் கூட்டம், மாநிலத் தலைவர் அண்ணாதுரை தலைமையில்கடலூரில் வியாழக்கிழமை நடந்தது.மாவட்டத் தலைவர் ராஜா, பொருளர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மகளிரணி நிர்வாகி ஜீவா, மாநில பொதுச்செயலர் தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.6-வது ஊதியக் குழு குறைபாடுகளை களைய அமைக்கப்பட்ட மூன்று நபர் குழு அறிக்கையை வெளியிட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கானஅடிப்படை ஊதியத்தை ரூ.5,200-லிருந்து ரூ.9,300-ஆக உயர்த்த வேண்டும்.ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியதிட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும்8-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.