தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 16-ம் தேதி காலை வெளியிடப்படுகிறது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 16-ல் வெளியீடு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 16-ம் தேதி காலை வெளியிடப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி பிளஸ் 2 தேர்வு தொடங்கியது. இதை 8 லட்சத்து 66,934 மாணவர்கள் எழுதினர். ஏப்ரல் 6-ம் தேதி தேர்வுகள் நிறைவடைந்தன. தொடர்ந்து, விடைத் தாள்கள் திருத்தும் பணிகள் முடிவடைந்தன. இந்நிலையில் வரும் 16-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. அரசு தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகம் அமைந்துள்ள சென்னை டிபிஐ வளாகத்தில் அன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி வெளியிடுகிறார். தேர்வு முடிவு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டதும் தேர்வுத் துறையின் இணையதளங்களான www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.tnschools.in ஆகியவற்றில் மாணவர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதியைக் குறிப்பிட்டு, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்து கொள்ளலாம். | DOWNLOAD

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||