கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு தயார் நிலையில் இருக்க தலைமை ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவு.

கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு தயார் நிலையில் இருக்க தலைமை ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவு | கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. எனவே தயார் நிலையில் இருக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது. ஜூன் 1-ந் தேதி திறப்பு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்து இருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி திறப்பு தேதி ஜூன் 7-ந் தேதிக்கு மாற்றப்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் வேகமாக தகவல்கள் பரவின. இந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பள்ளிக்கல்வி இயக்குனரின் சுற்றறிக்கையில் ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார். இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன், அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தூய்மை கோடை விடுமுறை முடிந்து 2018-19-ம் கல்வி ஆண்டில் ஜூன் 1-ந் தேதி அனைத்து வகையான பள்ளிகளும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் ஜூன் 1-ந் தேதியன்று அனைத்து வகையான பள்ளிகளும் கோடைவிடுமுறை முடிந்து திறக்கப்பட உள்ளன. இந்த சூழலில் அன்றைய தினம் மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது பள்ளி வளாகம் தூய்மையானதாகவும், நேர்த்தியானதாகவும், கற்கும் சூழலுக்கு ஏற்ற வகையிலும் தயார்நிலையிலும் இருக்க வேண்டியது அவசியமானதாகும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களை பின்பற்றி பள்ளி வளாகத்தை தயார்படுத்திடுமாறு அறிவிக்கப்படுகிறது. பராமரிக்க வேண்டும் * பள்ளிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை கிருமிநாசினி பயன்படுத்தி தூய்மையாக பராமரிக்க வேண்டும். பள்ளிகளில் உள்ள கழிவறைகள் அனைத்தையும் சுத்தம் செய்திடவும், கழிப்பறைகளில் ஏதேனும் பழுதுகள் இருந்தால் அதனை சரிசெய்து மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் அமைத்திடவும் வேண்டும். * மாணவர்களது எண்ணிக்கைக்கு தகுந்த வகையில் குடிநீர் குழாய், கழிவறைகள் மற்றும் சிறுநீர் கழிப்பறைகள் இருத்தல் வேண்டும். அவ்வாறு இல்லாமல் குறைவாக இருந்தால் தேவையான எண்ணிக்கையில் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் புதர்கள், கற்குவியல்கள் மற்றும் கழிவுப்பொருட்களின் குவியல்கள் இல்லாதவாறு தூய்மையாக வைத்திருத்தல் வேண்டும். பள்ளி வளாகத்தில் பள்ளங்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை மூடி சரிசெய்தல் வேண்டும். * கீழ்நிலை நீர்தேக்க தொட்டி, கழிவுநீர் தொட்டி ஆகியவை முறையாக மூடப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும். வகுப்பறைகளை தூய்மைப்படுத்த வேண்டும். மேலும், வகுப்பறைகளில் பழுதடைந்த நிலையில் மின்விசிறி, மின்விளக்குகள் இருப்பின் அவற்றை பழுது நீக்கி பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் மாற்ற வேண்டும். பாடப்புத்தகங்கள் * பள்ளிக்கட்டிடங்களின் மேற்கூரைகளில் பழுதுகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வகுப்பறைகளின் கதவு, ஜன்னல்களை ஆய்வு செய்து மராமத்து பணிகள் மேற்கொண்டு நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். * பள்ளிகள் திறக்கும் நாளன்றே மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டு போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். பள்ளி திறக்கும் நாளன்றே ஆசிரியர்கள் மற்றும் வகுப்புகளுக்கான கால அட்டவணை வழங்க வேண்டும். மேற்கண்ட சுற்றறிக்கையை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பி கோப்பில் வைக்க முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர்களும், மாவட்ட கல்வி அலுவலர்களும் தங்கள் பள்ளி ஆய்வின்போது மேற்கண்ட பணிகள் நடைபெற்று இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. | DOWNLOAD

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||