தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2,331 உதவி பேராசிரியர் பணி இடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு நேற்று முதல் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வருகிற 30-ந் தேதி ஆகும். முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும். அறிவிப்பினை முழுமையாக படித்து உரிய விதிமுறைகளை தெரிந்து கொண்டு தேவையான அனைத்து சான்றிதழ்களையும் பெற்ற பின்னர், விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்கு www.trb.tn.nic.in என்ற இணையதளத்துக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
மேற்கண்ட தகவல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Your article is such an informative article. It is glad to read such those articles thanks for sharing.
ReplyDelete