× JOB !!! இன்றைய கல்வி வேலைவாய்ப்பு தகவல்கள் : CLICK HERE
× PRAYER !!! இன்றைய பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் : CLICK HERE
× TNCMTSE !!! தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு முடிவுகள் : CLICK HERE
× REGULARISATION ORDER !!! பொதுவான பணிவரன்முறை ஆணைகள் : CLICK HERE

POLYTECHNIC TRB | பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு இன்று முதல் பிப்.12-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

  • அரசு பாலிடெக்னிக் விரிவுரை யாளர் பணிக்கு இன்று முதல் பிப்.12-ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 
  • அரசு பாலிடெக்னிக் கல்லூரி களில் விரிவுரையாளர் பணியிடங் களை நிரப்ப கடந்த 2017-ம் ஆண்டு ஜூலையில் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து செப்டம்பரில் நடந்த தேர்வில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 568 பேர் தேர்வு எழுதினர். தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடந்த நிலையில், விடைத்தாள் மதிப்பீட்டின்போது முறைகேடு நடந்துள்ளதாக குற்றச் சாட்டு எழுந்தது. 
  • இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இறுதியில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, கடந்த ஆண்டு நவ.27-ம் தேதி 1,060 பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கை வெளியானது. 
  • இதை யடுத்து, தற்போது அதற்கான விண்ணப்பம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
  • இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு பாலிடெக்னிக் விரி வுரையாளர்கள் காலி பணியிடங் களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய கடந்த ஆண்டு நவ.27-ம் தேதி அறிவிக்கை வெளி யிடப்பட்டது. 
  • இப்பணியிடங் களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பத்தை ஜன.22 (இன்று) முதல் பதிவேற்றம் செய்யலாம். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு வரும் பிப்.12-ம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 
  • விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும். தேர்வு அட்டவணை இறுதி நிலையில் உள்ளதால், எக்காரணம் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது.

கல்விச்செய்திகள்
வேலைவாய்ப்பு செய்திகள்
STUDY MATERIALS (NEW SYLLABUS)
KALVISOLAI - WHAT'S APP GROUP
KALVISOLAI - TELEGRAM GROUP

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||