Home »
@ FLASH NEWS
,
EDU UPDATES
» TN SCHOOLS OPENING DATE | நீட் 2021 தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் ஜனவரி 19 முதல் திறக்க தமிழக அரசு ஆணை.
- நீட் 2021 தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் ஜனவரி 19 முதல் திறக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகள் ஜனவரி 19 முதல் செயல்பட உள்ளது.
- 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் 2021 ஜனவரி 6 முதல் 8 வரை கருத்து கோரப்பட்டது.
- பெரும்பான்மையான பெற்றோர்கள், பள்ளிகளைத் திறக்க தங்கள் இசைவினை அளித்துள்ளதாக 95 சதவீத பள்ளிகள் அறிக்கை அளித்துள்ளது.
- மாணாக்கர்களின் வருங்கால நலனை கருத்தில் கொண்டும், வரும் 19.1.2021ம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும்.
- ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்படவும், அரசு வெளியிடும் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
- மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றது.
- அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- CLICK HERE FOR DETAILS | DOWNLOAD
Popular Posts
https://www.kalvisolai.com/
Related Posts:




பிளஸ் 2 தனித்தேர்வர்கள், "தத்கல்' திட்டத்தின் கீழ் 8ம் தேதி முதல், 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.CEO அலுவலகம், DEO அலுவலகம், தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகம் ஆகிய இடங்களில், 8ம் தேதி முதல், 10ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். தேர்வுக் கட்டணங்களுடன், சிறப்புக் கட்டணமாக, 1,000 ரூபாய் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில், 10ம் தேதி மாலை 5.45க்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். நேரடியாக பிளஸ் 2 தேர்வை தனித்தேர்வாக எழுதும் மாணவர்கள், கடைசியாக படித்த பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியரிடம், கையொப்பம் பெற வேண்டும்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||