"பள்ளிகளில் பராமரிக்கப்படும் பதிவேடுகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படு கிறது" என கல்வித்துறை கமிஷனர் நந்தகுமார் தெரிவித்தார். மதுரையில் கல்வித் துறை சார்பில் மண்டல ஆய்வுக் கூட்டம் நந்த குமார் தலைமையில் நடந்தது. இதில் அவர் பேசுகையில், "அரசு பள்ளிகளில் பராமரிக்கப்படும் தேவையில்லாத பதிவேடுகளை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட அளவில் பள்ளி ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகள் புதிதாக பதிவேடுகளை பராமரிக்க வற்புறுத்தக்கூடாது. நலத்திட்டங்கள் ஒவ்வொரு வகுப்பறையிலும் உள்ள கடைசி மாணவனுக்கும் சென்று சேரும் அரசு வகையில் பள்ளி செயல்பாடுகள் அமைய வேண்டும்" என்றார். இயக்குனர் முத்துபழனிசாமி பேசுகையில், "வகுப் பறைகள் கண்காணிப்பில் தலைமையாசிரியர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். தலைமையாசிரியர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு வகுப்பறையையாவது முழுமையாக பார்வையிட வேண்டும்" என்றார். கூட்டத்தில் இயக்குனர்கள் குப்புசாமி (வயதுவந்தோர் கல்வி), ராமேஸ்வர முருகன் (கூடுதல் மாநில திட்டம்), லதா (எஸ்.சி.இ.ஆர். டி.,), சேதுராமவர்மா (தேர்வுத்துறை), இணை இயக்குனர்கள் சசிகலா, அனிதா, சாந்தி, செல்வக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளிகளில் கண்காணிப்பு குறையின்றி கற்பித்தல், நூலகப் பயன்பாடு, வகுப்பறை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஆய்வு செய்யப்பட்டன. மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருது நகர் மாவட்ட முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர். மதுரை முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||