ஆசிரியர் தேர்வு வாரியம் 2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள்-I மற்றும் தாள் - II) அறிவிப்பை 2025 ஆகஸ்ட் 11 அன்று வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 11, 2025 முதல் செப்டம்பர் 8, 2025 அன்று மாலை 5:00 மணி வரை ஆன்லைன் மூலம் மட்டுமே பெறப்படும்.
முக்கிய தேதிகள்:
- அறிவிக்கை வெளியிடப்பட்ட நாள்: 11-08-2025
- ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க தொடங்கும் நாள்: 11-08-2025
- ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள்: 08-09-2025
- விண்ணப்பத்தை திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் (Edit Option): 09-09-2025 முதல் 11-09-2025 வரை
- தாள் I தேர்வு நாள்: 01-11-2025 (தோராயமாக)
- தாள் II தேர்வு நாள்: 02-11-2025 (தோராயமாக)
தகுதி வரம்பு:
- வயது வரம்பு: 01-07-2025 அன்று குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
- கல்வித் தகுதி:
- தாள் I (வகுப்பு I-V): குறைந்தது 50% மதிப்பெண்களுடன் மேல்நிலை அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்று, 2-ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது இறுதி ஆண்டில் பயின்று கொண்டிருக்க வேண்டும். அல்லது NCTE விதிகளின்படி குறைந்தது 45% மதிப்பெண்களுடன் 2-ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு அல்லது குறைந்தது 50% மதிப்பெண்களுடன் 4-ஆண்டு இளங்கலை தொடக்கக் கல்வி (B.El.Ed.) பட்டப் படிப்பில் தேர்ச்சி அல்லது இறுதி ஆண்டில் பயின்று கொண்டிருக்க வேண்டும்.
- தாள் II (வகுப்பு VI-VIII): பட்டப்படிப்புடன் 2-ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் தேர்ச்சி அல்லது இறுதி ஆண்டில் பயின்று கொண்டிருக்க வேண்டும். அல்லது குறைந்தது 50% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை கல்வியியல் (B.Ed.) பட்டப்படிப்பில் தேர்ச்சி அல்லது இறுதி ஆண்டில் பயின்று கொண்டிருக்க வேண்டும். பி.இ. பட்டப்படிப்புடன் பி.எட். முடித்த விண்ணப்பதாரர்கள் கணிதம் மற்றும் அறிவியல் விருப்பப் பாடங்களுக்கு மட்டும் தாள் II-க்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
தேர்வு அமைப்பு:
- இரண்டு தாள்களிலும் 150 பலவுள் தெரிவு வினாக்கள் (MCQs) இருக்கும்.
- தேர்வு நேரம் 3 மணி நேரம்.
- தேர்வு முறை OMR அடிப்படையிலானதாக இருக்கும்.
- தாள் I: குழந்தைப் மேம்பாடு மற்றும் கற்பித்தல், மொழி-I (தமிழ்/தெலுங்கு/மலையாளம்/கன்னடம்/உருது), மொழி II-ஆங்கிலம், கணிதம் மற்றும் சுற்றுச்சூழல் கல்வி ஆகிய ஐந்து கட்டாயப் பாடங்கள்.
- தாள் II: குழந்தைப் மேம்பாடு மற்றும் கற்பித்தல், மொழி-I, மொழி II-ஆங்கிலம் ஆகியவை கட்டாயப் பாடங்கள். நான்காவது பிரிவில், கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கு கணிதம் மற்றும் அறிவியல் அல்லது சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு சமூக அறிவியல் என்ற பிரிவில் 60 வினாக்கள் இருக்கும்.
குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள்:
- பொதுப் பிரிவு: 60% அல்லது 90 மதிப்பெண்கள்.
- SC, SC(A), BC, BC(M), MBC, DNC மற்றும் மாற்றுத் திறனாளிகள்: 55% அல்லது 82.5 மதிப்பெண்கள் (82 ஆக கணக்கிடப்படும்).
- ST பிரிவு: 40% அல்லது 60 மதிப்பெண்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- SC, SCA, ST மற்றும் மாற்றுத் திறனாளிகள் தவிர மற்றவர்களுக்கு: ரூ. 600.
- SC, SCA, ST மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு: ரூ. 300.
- கட்டணம் திரும்பப் பெறப்படாது.
குறிப்பு: ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். எனினும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமே பணி நியமனத்திற்கு போதுமானதல்ல. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் நியமனம் தொடர்பான தனி போட்டித் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
TNTET 2025 Notification Download
Note : The Study materials from our website are not created by us. These materials for Educational and Competitive Exam Purpose only. All the credits go to the creators who created them.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
















TN TET
ReplyDeleteTN TET
ReplyDelete