உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

புதுச்சேரி அரசு பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கைக்கான நேர்காணல் துவங்கியது


அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கைக்கான நேர்காணலை, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் பன்னீர் செல்வம் நேற்று துவக்கி வைத்தார். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு சேர்க்கை, அந்தந்தப் பள்ளிகளில் உள்ள மொத்த இடங்களில் 50 சதவீதம் அப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் மூலமாகவும், மீதமுள்ள 50 சதவீதம் மையப்படுத்தப்பட்ட கலந்தாய்வு மூலமாகவும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மையப்படுத்தப்பட்ட சேர்க்கைக்கான
நேர்காணல், கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று துவங்கியது. நேர்காணல் விதிகள் குறித்து, இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் விளக்கினார். பள்ளிக்கல்வி இயக்குனர் பன்னீர்செல்வம், நேர்காணலைத் துவக்கி வைத்து, மாணவர்களுக்கு சேர்க்கை அனுமதி உத்தரவை வழங்கினார்.


நேர்காணலின் முதல் நாளான நேற்று, சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்தோருக்கு (சுதந்திரப் போராட்ட வீரர் வாரிசு, மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசு) ஆகிய பிரிவினருக்கான நேர்காணல் நடந்தது. இன்று (28ம் தேதி) காலை 491 மதிப்பெண்கள் முதல் 451 வரையிலும், மதியம் 450 முதல் 436 வரை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கும், 29ம் தேதி காலை 435 முதல் 421 மதிப்பெண்கள் வரையும், மதியம் 420 முதல் 411 மதிப்பெண்கள் வரை,, 30ம் தேதி காலை 410 முதல் 401 வரை, மதியம் 400 முதல் 391 வரை, 1ம் தேதி காலை 390 முதல் 381 வரை, மதியம் 380 முதல் 376 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு நேர்காணல் நடக்கிறது. 376க்கு கீழ் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான நேர்காணலுக்கான அறிவிப்பு, பின்னர் வெளியிடப்படும்.

நேர்காணலில் பங்கேற்க வரும் மாணவ, மாணவியர்கள் மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், புதுப்பிக்கப்பட்ட நிரந்தர ஒருங்கிணைக்கப்பட்ட சான்றிதழ் அல்லது தாலுகா அலுவலகத்தால் அளிக்கப்பட்ட குடியுரிமை மற்றும் சாதி சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காலை நடக்கும் நேர்காணலில் பங்கேற்கும் மாணவர்கள், காலை 9.30 மணிக்குள்ளும், மதியத்தில் நடக்கும் நேர்காணலில் பங்கேற்கும் மாணவர்கள் மதியம் 2 மணிக்குள்ளும் வந்து, சேர்க்கை மைய அலுவலர் அளிக்கும் விண்ணப்பத்தில், தங்கள் வருகையை உறுதி செய்ய வேண்டும். புதுச்சேரியில் உள்ள மேல்நிலைப் பள்ளிகள், அப் பள்ளிகளில் உள்ள பாடப் பிரிவுகள், பயிற்று மொழி (மீடியம்), நிரப்பப்பட உள்ள இடங்கள் உள்ளிட்ட விபரங்கள், பவர் பாயிண்ட் மூலம் மாணவர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்படுகிறது. அதன் மூலம், மாணவர்கள் தாங்கள் விரும்பிய பள்ளி, பாடப் பிரிவை தேர்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.