உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுப் பணிகள் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தன. புதிய மதிப்பெண் விவரம் கிடைக்கப்பெற்றவுடன் திருத்திய எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல் புதன்கிழமை மாலை வெளியிடப்படுகிறது.


எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க முதல் கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை ஜூன் 30-ம் தேதி தொடங்குகிறது.பி.இ., எம்.பி.பி.எஸ் படிப்புகளில் சேருவதற்கான முக்கியப் பாடங்களில் இந்த முறை அதிகமான மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றிருந்தனர். இதன் காரணமாக, இந்தப் படிப்புகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணும் அதிகரித்துள்ளது.இயற்பியல், கணிதம், வேதியியல், உயிரியல் போன்ற பாடங்களில் ஒரு சில மதிப்பெண் குறைந்தவர்களும், தேர்ச்சிபெறாத மாணவர்களும் மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்காக விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தனர்.மொத்தம் 82 ஆயிரம் மாணவர்களுக்கு விடைத்தாள் நகல்கள் அனுப்பிவைக்கப்பட்டன. அதன்பிறகு, 4 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தங்களது விடைத்தாள்களை மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பித்தனர்.பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்குவதற்குள், இந்தப் பணிகளை முடிக்க தேர்வுத்துறையினர் தீவிரமாகப் பணியாற்றி வந்தனர்.


மறுகூட்டல், மறுமதிப்பீடு பணிகள் தொடர்பாக தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியது:

ஏறத்தாழ 4 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களின் விடைத்தாள்கள் மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான மாணவர்களுக்கு 10 மதிப்பெண் வரை அதிகரித்துள்ளது. அதே அளவுக்கு மதிப்பெண்ணும் குறைந்துள்ளது.திருத்தப்பட்ட புதிய மதிப்பெண்கள் சி.டி.க்களாக எடுக்கப்பட்டு, மருத்துவக் கல்வி தேர்வுக் குழு, அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு புதன்கிழமை வழங்கப்பட உள்ளன.மாணவர்களுக்கு திருத்தப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்கள் வியாழக்கிழமை கிடைக்கும் என்று தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவை சிறப்பு மையங்கள் மூலம் விநியோகிக்கப்பட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.