ஆரம்பக் கல்வியை மேம்படுத்துவதன் மூலம் கல்வியின் தரத்தை உயர்த்தலாம் : அப்துல் கலாம்

அணுசக்தி மின்சாரம் என்பது நமக்குத் தேவையான ஒன்று. விமானங்களில் விபத்து ஏற்படுகிறது. அதனால் விமானங்களை நாம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமா?. அணுஉலைகள் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடைபெறுகிறது. அதில் பாதுகாப்பு விவரங்கள் கிடைக்கும். எனவே
அணுசக்தியை நாம் ஒதுக்கிவிடக் கூடாது. விவசாயத்தைப் பொறுத்தமட்டில் நாம் புதிய தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். வீரிய ரக ஒட்டு விதைகள், சொட்டுநீர் பாசனம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த வேண்டும். தற்போது 235 மில்லியன் டன் உணவு உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு 170 மில்லியன் ஹெக்டேர் நிலம் பயன்படுத்தப்படுகிறது. வருங்காலத்தில் விவசாய நிலம் 100 மில்லியன் ஹெக்டேராக குறைய வாய்ப்பு உள்ளது. அப்போது நமது தேவை தற்போது உள்ளதைவிட இருமடங்காகிவிடும். கிராமத்திற்கும், நகரத்திற்கும் இடைப்பட்ட சமூகப் பொருளாதார இடைவெளி குறைய வேண்டும். சுத்தமான நீர், சுகாதாரமான வாழ்க்கை, வெளிப்படையான ஊழல் அற்ற நிர்வாகம் அமைய வேண்டும். இந்தியாவை முன்னோடி நாடாக உருவாக்க மாணவர்கள் பாடுபட வேண்டும். கூட்டு ஆராய்ச்சி மூலம் சிறந்த பங்களிப்பை அளிக்க முடியும். ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தன்மை உள்ளது. கடின உழைப்பு, சீரிய சிந்தனை, சிறப்பான செயல்பாட்டுடன் லட்சியத்தை அடைய முயற்சி செய்ய வேண்டும். அறிவியல் தொழில்நுட்பங்கள் குறித்து பல்கலைக்கழகங்கள் ஆய்வு நடத்த வேண்டும்.

 கல்வி, தகவல் தொழில்நுட்பம், மின்சாரம், உள்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்தப் பாடுபட வேண்டும். லஞ்சத்தை ஒழிக்க மாணவர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும். அன்பாலும், பாசத்தாலும் லஞ்சத்தை ஒழிக்க மாணவர்கள் முன்வர வேண்டும் 

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||

TRB PG RECRUITMENT 2021 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : PGT/PD/Computer Instructor Grade I விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.10.2021. | Click Here
kalvisolai-kalviseihi-padasalai-kalvikural-kaninikkalvi-

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.