உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு அனுமதிச் சீட்டுகளை 19.06.2018 முதல் பதிவிறக்கம் செய்யலாம்.

மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு அனுமதிச் சீட்டுகளை 19.06.2018 முதல் பதிவிறக்கம் செய்யலாம்.
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை – 6. மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு, ஜூன்/ஜூலை 2018 தனித் தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் செய்திக்குறிப்பு நடைபெறவுள்ள ஜூன்/ஜூலை 2018, மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்புத் துணைத் தேர்வெழுத அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உட்பட) 19.06.2018 (செவ்வாய்கிழமை) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று HSE June/July 2018 Hall Ticket Download என்பதனை கிளிக் செய்து தங்களது மார்ச் 2018 பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்தால் அவர்களுடைய தேர்வுக் கூட அனுமதிச்சீட்டு திரையில் தோன்றும். அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்குக் குறைவாகப் பெற்று, தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வினை மீண்டும் செய்வதோடு எழுத்துத் தேர்விற்கும் வருகை புரிய வேண்டும். அதிகபட்ச மதிப்பெண் 200 கொண்ட செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சிச் பெறாதவர்கள் மீண்டும் செய்முறைத் தேர்விற்கு வருகை தர வேண்டும். மொழிப் பாடங்களில் கேட்டல்/பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி (தமிழ்) பாடத்தில் கேட்டல்/பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத் தனித்தேர்வர்கள் தாம் தேர்வெழுதும் தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒம்/- இயக்குநர்

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.