HSE TAKKAL MARCH 2019 | மார்ச் 2019, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தனித்தேர்வர்களிடமிருந்து சிறப்பு அனுமதி திட்டத்தின் 21.01.2019 முதல் 22.01.2019 வரையிலான நாட்களில் நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மார்ச் 2019, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுத தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கத் தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அரசுத் தேர்வுத் துறை சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் தாங்கள் எந்த கல்வி மாவட்டத்திலிருந்து விண்ணப்பிக்கிறார்களோ, அந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையத்திற்கு 21.01.2019 முதல் 22.01.2019 வரையிலான நாட்களில் நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
Read More News | Download

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||