செய்தி துளிகள் - 1

  JUNE 2021 UPDATES

 1. கேரளா, மராட்டியம், மத்தியபிரதேசத்தை தொடர்ந்து தமிழகத்தில் பெண் ஒருவருக்கு உருமாறிய ‘டெல்டா பிளஸ்’ கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
 2. ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி தனி அதிகாரிகளின் பதவி காலத்தை மேலும் 6 மாதத்திற்கு நீட்டித்து சட்டசபையில் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது.
 3. கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து நிச்சயமாக நல்ல முடிவு எடுக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
 4. சென்னையில் மட்டும் 14 ஏ.டி.எம். மையங்களில் ரூ.45 லட்சம் கொள்ளைபோனதாக புகார் வந்துள்ளது.
 5. சென்னை உள்பட தமிழகத்தில் 19 இடங்களில் வங்கி ஏ.டி.எம்.களில் நூதனமுறையில் ரூ.48 லட்சத்தை வடமாநில கொள்ளையர்கள் கொள்ளையடித்தது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
 6. விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட தமிழகத்தி்ல் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
 7. கொரோனாவின் 3-வது அலையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக அ.தி.மு.க. உறுப்பினர் விஜயபாஸ்கர் கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார்.
 8. ஆன்லைன் வணிக நிறுவனங்களின் அதிரடி தள்ளுபடி விற்பனை குறித்து புகார் வந்தால் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 9. ஏழை, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதால் நீட் தேர்வை தொடர்ந்து நடத்துவது சமூக அநீதி என்று நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டியிடம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
 10. கல்வித்துறையில் ஏற்பட்ட பணியிடமாற்றம் தொழில்நுட்பக் கல்வி இயக்கக, இயக்குநராக லக்‌ஷ்மி ப்ரியா நியமனம். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநராக சுதன் நியமனம். ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக லதா நியமனம். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விப் பணிகள் கழக மேலாண் இயக்குநராக டாக்டர் மணிகண்டன் நியமனம்.
 11. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான அரசாணை வெளியீடு - இணைப்பு:  விண்ணப்பப் படிவம்.
 12. 9-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. | CLICK HERE
 13. தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கான பாடப் புத்தகங்களை அந்தந்த பள்ளிக்கு அனுப்ப மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஜூன் மூன்றாவது வாரம் இணைய வழி கல்வி ஆரம்பிக்க வேண்டும் புத்தகங்கள்,நோட்டுக்கள் மாணவர்களுக்கு எப்போது வழங்கப்பட வேண்டும் என பின்னர் தெரிவிக்கப்படும்.
 14. கொரோனா தொற்று பரவலை குறைப்பதற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், அதிகாரிகள் குழு பரிந்துரை செய்துள்ளது.
 15. +1 நுழைவுத் தேர்வு ரத்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. 10 -ம் வகுப்பு மாணவர்கள், 11-ம் வகுப்பில் சேர பள்ளி அளவிலான தேர்வு நடத்தப்படும் என்ற முந்தைய அறிவிப்பு. வாபஸ் 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 11-ம் வகுப்பில் சேர்க்கை.
 16. EMIS TC UPDATES
 17. +2 பொதுத் தேர்வு இரத்து என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை வரவேற்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத்தலைவர் திரு.கு.தியாகராஜன் அவர்கள் அறிக்கை..
 18. AFTER +2 - CBSE
 19. BHARATHIDASAN UNIVERSITY ADMISSION 2021-2022 - திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள சேர்க்கை அறிவிப்பு
 20. புதுவையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு
 21. சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு போல ‘நீட்’ உள்ளிட்ட தேசிய நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்யவேண்டும் மோடிக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்
 22. NEET - COMMITTEE | ‘நீட்’ தேர்வின் பாதிப்பு குறித்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
 23. ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
 24. PLUS 2 EXAM 2021 CANCELLED | மாணவர் நலன் கருதி இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
 25. தமிழகம் முழுவதும் பள்ளி-கல்லூரி ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் 120 ஆக உயர்ந்தன சென்னையில் மட்டும் 40 புகார்கள் மீது விசாரணை.
 26. ஒடிசாவில் பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து
 27. சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் முறை பற்றி ஆராய 13 பேர் குழு
 28. தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு தொடர்பாக சட்டமன்ற கட்சி தலைவர்கள், மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்
 29. ஆசிரியர் தேர்வு வாரியத்தை அரசு தேர்வு பணியாளர் ஆணையத்துடன் இணைக்கும் திட்டம் ஏதும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
 30. ஆசிரியர் தகுதித் தேர்வு தகுதிச் சான்றிதழின் செல்லுபடியாகும் காலத்தை 7 ஆண்டுகளிலிருந்து வாழ்நாள் வரை (From the Year 2011) நீட்டித்து மத்திய அரசு உத்தரவு. ஏற்கனவே வழங்கிய TET சான்றிதழ்களை மறு மதிப்பீடு செய்து புதிய சான்றிதழ் வழங்க மாநில அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சர் அறிவுறுத்தல்.
 31. தமிழகத்தில் +2 தேர்வு தொடர்பாக நடைபெற்ற கருத்து கணிப்பில் 60 % பேர் தேர்வை நடத்த வேண்டும் என  தெரிவித்துள்ளார்கள் - பள்ளி கல்விதுறை தகவல்.
 32. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ரேஷன் பொருட்களை பெறுவதற்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
 33. பல்வேறு காரணங்களால் முதல் தவணை கொரோனா நிவாரண உதவித்தொகையை வாங்க முடியாதவர்கள், அந்த தொகையை இந்த மாதம் ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
 34. MAY 2021 UPDATES

 35. May 27 : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ந் தேதி வரை அவகாசம் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு
 36. May 27 : மின்வாரிய பணியாளர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவிக்கவேண்டும் என்று மு.க.ஸ்டாலினுக்கு, ஓ-.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 37. May 27 : டெல்லியில் கடந்த 6 மாதங்களாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 38. May 27 : நாடு முழுவதும் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கு ஜே.இ.இ. மெயின் தேர்வும், ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற முன்னணி கல்வி நிலையங்களில் சேர்க்கை பெறுவதற்கு ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வும் நடத்தப்படுகின்றன. ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வுக்கான தகுதித்தேர்வாகவும் ஜே.இ.இ. மெயின் தேர்வு உள்ளது. இந்நிலையில் ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வை இந்த ஆண்டு நடத்தும் கரக்பூர் ஐ.ஐ.டி. அலுவலர்கள் கூறுகையில், ‘தற்போதைய கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு, வருகிற ஜூலை 3-ந் தேதி நடைபெறுவதாக இருந்த 2021-ம் ஆண்டு ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு நடத்தப்படும் புதிய தேதி, உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளனர்.
 39. May 27 : முழு ஊரடங்கினால் ஓரளவுதான் திருப்தி ஏற்பட்டுள்ளது என்றும் தேவைப்பட்டால் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
 40. May 27 : புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள், தனி உரிமைக்கு எதிரானவை அல்ல என்று ‘வாட்ஸ்-அப்’ வழக்கு தொடுத்த நிலையில் மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது.
 41. May 27 : காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
 42. May 25 : தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசி மருந்துகள் குறைந்த அளவில் ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அரசு மீது சென்னை ஐகோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.
 43. May 25 : தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்யாத அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களையும் விடுதல் இன்றி பதிவு செய்ய சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் சி.வி.கணேசன் உத்தரவிட்டு உள்ளார்.
 44. May 25 : உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசை சீன ஆய்வகத்தில் உருவாக்கியதற்கான புதிய ஆதாரம் அமெரிக்க உளவுத்துறை அறிக்கையில் அம்பலமாகி உள்ளது.
 45. May 25 : தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஒருவார கால தளர்வில்லா முழு ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டன. சாலைகளும் வெறிச்சோடின.
 46. May 25 : இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், இதுவரையிலான பலி எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்து விட்டது.
 47. May 25 : 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் அளிப்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
 48. May 25 : முழு ஊரடங்கிலும் பொதுமக்கள் நலன் கருதி ரேஷன் கடைகள் இன்று முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
 49. May 23 : தமிழ்நாட்டில் பாதிப்பு சற்று குறைந்தது. அந்த வகையில் ஒரே நாளில் 35,873 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 50. May 23 : குறைந்து வரும் வைரஸ் பாதிப்பு-ஜெர்மனியில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிப்பு
 51. May 23 : நேபாளத்தில் தொடர்ந்து அரசியல் நெருக்கடி நீடித்து வந்த நிலையில், அதிபர் பித்யா தேவி பண்டாரி நேற்று நாடாளுமன்றத்தை அதிரடியாக கலைத்து உத்தரவிட்டார். அங்கு நவம்பரில் இடைத்தேர்தல் நடக்கிறது.
 52. May 23 : தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அரசு அறிவித்ததை ஆதரிப்பதாக அனைத்து சட்டமன்றக்குழு கூட்டத்துக்குப் பின் அரசியல் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 53. May 23 : பக்கத்து மாநிலங்களுடன் ஒப்பிடும்போது கொரோனா தொற்று எண்ணிக்கை தமிழகத்தில் குறைவுதான் என்றும், ஜூன் மாத தொடக்கத்தில் தொற்று எண்ணிக்கை உச்சத்தை அடையும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
 54. May 23 : 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முடிவு செய்வதற்காக அனைத்து மாநில கல்வி மந்திரிகள் மற்றும் கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய அரசு இன்று (ஞாயிற்றுக்கிழமை) உயர்மட்ட ஆலோசனை நடத்துகிறது.
 55. May 22 : தமிழகத்தில் 2.70 கோடி குடும்பங்களுக்கு 2-ம் தவணை கொரோனா நிவாரண நிதியாக ஜூன் 3-ந் தேதிக்குள் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
 56. May 22 : ஒரே கல்வியாண்டில் இரண்டு பட்டங்கள் பெறுவதை மத்திய அரசு அனுமதிக்கும் வரை, அவற்றை அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களாக கருதமுடியாது என சென்னை ஐகோர்ட்டு முழு அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
 57. May 21 : முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஜனாதிபதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
 58. May 20 : ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான அரசு பள்ளி மாணவர்களில், 10 பேருக்கு ஒரு ஆசிரியரை பொறுப்பாளராக நியமித்து, ஆன்லைன் வகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
 59. May 20 : பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடம் ஒழிப்பு-ஆணையரிடம் அதிகாரங்கள் - உடனடியாகத் திரும்பப்பெற தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசிற்கு கோரிக்கை
 60. May 20 : சென்னை டிபிஐ வளாகத்தில் பள்ளிக்கல்வி இயக்குனர் பதவியை ரத்து செய்து அந்த இடத்தில் ஆணையர் பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது
 61. May 20 : இயக்குநர் கண்ணப்பனுக்கு பதிலாக ஆணையர் பதவியை நந்தகுமார் ஏற்றுள்ளார். டிஎன்பிஎஸ்சி செயலாளராக இருந்தவர் நந்தகுமார் என்பது குறிப்பிடத்தக்கது
 62. May 20 : பள்ளிகளுக்கு 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களை அட்டவணைப்படுத்தவும், போர்டில் சமர்ப்பிக்கவும் சிபிஎஸ்இ ஜூன் 30 வரை காலக்கெடுவை நீட்டிக்கிறது..- சிபிஎஸ்இ
 63. May 20 : தமிழகபள்ளி கல்வித்துறை சீரமைப்பதில் தமிழக அரசு மும்முரம் காட்டி வருகிறது. பள்ளி கல்வி இயக்குநர் பதவி நீக்கப்பட்டதுடன், புதியதாக ஆணையர் நியமிக்கப்பட்டு, அவருக்கு அதிக அதிகாரங்களை தமிழக அரசு வழங்கி உள்ளது
 64. May 20 : பள்ளிக் கல்வி இயக்குநர் பணி நிலையில் மாற்றம்; மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வேண்டுகோள்
 65. May 20 : தவறு செய்யும் அலுவலர்கள் மீது பணி நீக்கம் உட்பட துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமைச்செயலாளர் திரு.இறையன்பு அறிவுறுத்தல்
 66. May 20 : 12ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பீட்டில் மாற்று முறையை நாடு முழுவதும் ஒரே மாதிரியாகக் கையாள வேண்டும் என பிரதமருக்குப் பெற்றோர் சங்கம் கோரிக்கை
 67. May 20 : காலை 10 மணிக்கு மேல் வெளியே செல்ல இ-பதிவு கட்டாயம்; மீறினால் கடும் நடவடிக்கை: சென்னை காவல்துறை அறிவிப்பு
 68. May 20 : IAS அதிகாரிகளின் ஒரு நாள் ஊதியப் பிடித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
 69. May 20 : நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளையும் பாரத் நெட் மூலம் இணைக்க மத்திய அரசு ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது
 70. May 20 : வரைவு தேசியக் கல்விக்கொள்கை -2019 குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆய்வு அறிக்கை சார்ந்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
 71. May 19 : கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடியும் மு.க.ஸ்டாலினும் காணொலி மூலமாக ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் பல்வேறு மாவட்ட கலெக்டர்களும் பங்கேற்றனர்.
 72. May 19 : முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.69 கோடி நன்கொடை வசூலாகியுள்ளது. இதில் ரூ.50 கோடியை கொரோனா சிகிச்சை நடவடிக்கைகளுக்கு செலவு செய்ய மு.க.ஸ்டாலின் அனுமதி வழங்கி உள்ளார்.
 73. May 19 : தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நாளை தொடங்கப்படும் என்றும், அதில் ஆட்டோ டிரைவர்கள், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 74. May 19 : தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் அடுத்த இரு வாரங்களில் கொரோனா 2-வது அலை உச்சத்தை எட்டலாம் என்று கணித மாதிரியில் கணிக்கப்பட்டுள்ளது.
 75. May 19 : சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மரணம் அடைந்தார். அவரது உடல் தமிழக அரசு மரியாதையுடன் இன்று தகனம் செய்யப்படுகிறது.
 76. May 18 : தேசிய கல்வி கொள்கை தொடர்பாக மத்திய அரசின் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த தமிழக அரசு
 77. May 18 : தமிழகத்தில் 7 அரசு மருத்துவக்கல்லூரி ‘டீன்’களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.
 78. May 18 : கொரோனாவால் ஏற்படும் உயிர்ப்பலியை மறைக்க தேவை இல்லை என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
 79. May 18 : பஸ், ரெயில் நிலையங்கள் உள்பட பொது இடங்களில் பொதுமக்கள் நீராவி பிடித்தால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 80. May 18 : கொரோனா நிவாரண பணிகளுக்காக தமிழக அரசின் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.1 கோடியும், கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத ஊதியமும் வழங்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
 81. May 18 : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.பி.யுமான டி.கே.ரங்கராஜன் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்து கொரோனா பெருந்தொற்றிலிருந்து தமிழக மக்களை காப்பாற்ற கட்சியின் சார்பில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கினார்கள்.
 82. May 18 : திருமணம், மருத்துவம் உள்பட அவசர பயணத்துக்கு தமிழ்நாட்டில் ‘இ-பதிவு' முறை அமலுக்கு வந்துள்ளது.இதற்காக http://eregister.tnega.org என்ற இணையதள முகவரி வெளியிடப்பட்டது.
 83. May 18 : 25 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் கொரோனா ஒருநாள் பாதிப்பு 3 லட்சத்துக்கு கீழே இறங்கி உள்ளது. அதே சமயத்தில், பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
 84. May 18 : தண்ணீரில் கரைத்து குடிக்கும் கொரோனா மருந்தை மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங் மற்றும் ஹர்சவர்தன் இணைந்து நேற்று அறிமுகம் செய்து வைத்தனர்.2-டியோக்சி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) என பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து பொடி (பவுடர்) வடிவில் உருவாக்கப்பட்டு உள்ளது. தண்ணீரில் கரைத்து குடிக்கும் இந்த மருந்து 3 கட்ட மருத்துவ சோதனையிலும் வெற்றிகரமாக செயல்படுவது கண்டறியப்பட்டது.
 85. May 18 : இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்சை வீழ்த்தி ரபெல் நடால் 10-வது முறையாக ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றினார்.
 86. May 17 : ரஷியாவில் இருந்து மேலும் 60 ஆயிரம் டோஸ் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இந்தியா வந்தடைந்தது.
 87. May 17 : ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி தள்ளிவைக்கப்பட்டு இந்த ஆண்டில் வருகிற ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடத்தப்படுகிறது.
 88. May 17 : கோவிஷீல்டு 2-வது டோசுக்கான கால இடைவெளியை மாற்றுவதற்கு முன்பே ஆன்லைனில் முன்பதிவு செய்தது செல்லும். அவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை கூறியுள்ளது.
 89. தமிழ்நாடு மின் வாரிய தலைவராக ராஜேஷ் லக்கானி நியமனம்.
 90. May 17 : அதிதீவிர புயலாக மாறியுள்ள டவ்தே புயல், நாளை குஜராத் அருகே கரையை கடக்கிறது. இதை சமாளிப்பது தொடர்பாக குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
 91. May 17 : தினசரி கொரோனா பாதிப்பு 3.11 லட்சமாக குறைந்தது. உயிர்ப்பலி 2.70 லட்சத்தை தாண்டியது. கொரோனா வைரஸ் பாதிப்பு விகிதம் 16.98 சதவீதமாகவும், சிகிச்சை பெறுவோர் விகிதம் 14.66 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
 92. May 17 : நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கும் மலையாள ‘பிக்பாஸ்’ படப்பிடிப்பு தளத்தில் 6 பேருக்கு கொரோனா உறுதி
 93. May 17 : கொரோனா நோயாளிகளுக்கு ‘ரெம்டெசிவிர்‘ மருந்து சிகிச்சை பெறும் மருத்துவமனைகள் மூலமாகவே வழங்கும் புதிய வசதி நாளை (செவ்வாய்க்கிழமை) அறிமுகம் செய்யப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
 94. May 17 : தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 311 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்தை தாண்டியது.
 95. May 17 : ‘ரெம்டெசிவிர்’ மருந்து வாங்க கூட்டம் கூடி அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 96. May 17 : டி.வி. நாடகங்கள், செய்திகள் வாசிப்பின்போது கொரோனா குறித்து விழிப்புணர்வு வாசகங்களை ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 97. May 17 : தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணிப்பதற்கு ‘இ-பதிவு' முறை கட்டாயம் ஆகும்.
 98. May 17 : கொரோனா பரவலை தடுப்பது குறித்து ஆலோசனை வழங்க அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களை கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
 99. May 12 : தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஊரடங்கை மேலும் தீவிரப் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
 100. May 11 : 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத காத்திருக்கும் தனித் தேர்வர்களுக்கு (Private Candidates), கொரோனா கட்டுக்குள் வந்த பின் கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும். - பள்ளிக்கல்வித் துறை திட்டவட்டம்.
 101. May 10 : அசாம் மாநிலத்தில் புதிய முதல்-மந்திரியாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 102. May 10 : சட்டசபை பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு
 103. May 10 : கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்தவும், சிகிச்சைகள் தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் விழுப்புரம் உள்பட 14 மாவட்டங்களுக்கு அமைச்சர் குழுக்களை அமைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
 104. May 10 : பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனராக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.
 105. May 10 : அனைத்து மாவட்டங்களும் ஒருங்கிணைந்து செயல்பட தொடங்கப்பட்ட கொரோனா கட்டளை மையத்திற்கு 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா கட்டளை மையத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக தாரேஷ் அகமது ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். கட்டளை மையத்தின் செயல்பாடு, தரம் குறித்து ஆய்வு செய்ய அழகு மீனா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கே.நந்தகுமார், எஸ்.உமா, எஸ்.வினித், கே.பி.கார்த்திகேயன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
 106. May 10 : தமிழக அட்வகேட் ஜெனரலாக மூத்த வக்கீல் ஆர்.சண்முக சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
 107. May 10 : தமிழகத்தில் நடைபெற்ற 16-வது சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) கூடும் சட்டசபை கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பொறுப்பேற்க இருக்கின்றனர். தற்காலிக சபாநாயகராக கீழ்பென்னாத்தூர் உறுப்பினர் கு.பிச்சாண்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் இன்று காலை 11 மணிக்கு கவர்னர் மாளிகையில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
 108. May 10 : தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இதனையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.
 109. May 10 : தமிழகத்தில் முழு ஊரடங்கு சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டுமே, தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தி, இறப்புக்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். எனவே, அமைச்சர்கள் தங்களது மாவட்டங்களில் இந்த ஊரடங்கு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படு வதை உறுதி செய்திட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
 110. May 10 : புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 111. May 10 : ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள், வியாபாரிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று போலீசாருக்கு டி.ஜி.பி. திரிபாதி அறிவுரை வழங்கி உள்ளார்.
 112. தமிழக சட்டசபை தேர்தல் குறித்து சென்னையில் ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் குழுவினர், “80 வயதை கடந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு போட வாய்ப்பு அளிக்கப்படும்” என்று தெரிவித்தனர்.
 113. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக் கையாக தமிழகத்தில் கடற்கரை, சாலைகள், ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 114. இரண்டு கட்டமாக நடந்த நீட் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியாகிறது. தேசிய தேர்வு முகமையின் இணைய தளமான www.nta.ac.in மற்றும், www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்கள் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று தேர்வு முகமை அறிவித்துள்ளது.
 115. திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவ.17ல் தொடங்கு கிறது. தங்கக் கொடி மரத்தில் நவ.20-ல் கொடியேற்றமும் நவ. 29-ல் மகா தீபமும் ஏற்றப்படும்.
 116. அண்ணா பிறந்த தினத்தை முன் னிட்டு தமிழக காவல்துறை உள் ளிட்ட சீருடைப் பணியாளர்கள் 131 பேருக்கு முதல்வரின் ‘அண்ணா’ பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள் ளன.
 117. இந்தியாவில் தினசரி பாதிப்பில் கொரோனா தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. அந்தவகையில் ஒரே நாளில் 97,570 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
 118. தமிழகத்தில் அனைத்து பெட்ரோல் பங்க்களும் காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணிவரை செயல்பட அனுமதித்து அரசு உத்தரவிடுகிறது.
 119. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு இன்று (13.09.2020) (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
 120. திமுக ஆட்சிக்கு வந்ததும் தமி ழகத்தில் நீட் தேர்வு முழுமை யாக ரத்து செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
 121. தமிழகத்தில் 7 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளதாக கல்லூரிக்கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
 122. சென்னை மாநகராட்சியில் கரோனா தொற்றால் 1.46 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டு, 7 சதவீதமாக குறைந்துள்ளது.
 123. SEP 12 : இந்தியாவில் மே மாத தொடக்கத்திலேயே 64½ லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்ற அதிர்ச்சி தகவல், ‘செரோ சர்வே’ முடிவில் வெளி வந்துள்ளது.
 124. SEP 12 : தமிழகத்தில் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களே உள்ளது. ஆனால் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
 125. SEP 12 : இந்திய-சீன வெளியுறவு மந்திரிகள் இடையே மாஸ்கோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், லடாக் எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்க 5 அம்ச திட்டத்தை நிறைவேற்றுவது என்று உடன்பாடு ஏற்பட்டது.
 126. SEP 12 : தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர், சென்னை கலைவாணர் அரங்கில் வரும் செப்.14-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இதில் பங்கேற்கும் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், அனை வருக்கும் 72 மணி நேரத்துக்கு முன்பு கரோனா பரிசோதனை கட்டாயம் என பேரவைச் செயலகம் அறிவித்திருந்தது.
 127. SEP 11 : தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. மேலும் கொரோனா பரவலை தடுக்க பொதுஇடங்களில் முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்தும் அரசாணை வெளியிட்டது.
 128. SEP 11 : வீட்டு கடன், வாகனக் கடன், கடன் அட்டை, தனி நபர் கடன் உள்ளிட்ட தவணைகளை செலுத்துவதற் கான கால அவகாசத்தை செப்டம்பர் 28-ம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 129. SEP 09 : இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கடன்கள் மீதான வட்டி விகிதத்தை 0.1 சதவீதம் குறைத் துள்ளது. இந்த வட்டி குறைப்பு நாளை (செப். 10) முதல் அமலுக்கு வருகிறது.
 130. AU FINAL SEMESTER EXAM : என்ஜினீயரிங் படிப்புகளில் இறுதி செமஸ்டர் அரியர் தேர்வு 22-ந் தேதி தொடங்கும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
 131. MANIDHANEYAM IAS ACADEMY : சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தொலைக்காட்சி மூலம் பயிற்சி வகுப்பு சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையம் தொடங்குகிறது.
 132. HALL TICKLET : எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 துணைத்தேர்வுக்கு ‘ஹால்டிக்கெட்’ நாளை மறுதினம் முதல் பதிவிறக்கம் செய்யலாம்
 133. CORONA VACCINATION : கரோனா தடுப்பு மருந்து சோதனையை சீரம் நிறுவனம் நிறுத்த உத்தரவு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் நடவடிக்கை
 134. AGRI FEE COMMITTEE : வேளாண் கல்லூரி கல்விக் கட்டணம்: அறிக்கை சமர்ப்பிப்பு
 135. JEE 2020 RESULT : ஜேஇஇ முதல்நிலை தேர்வில் 24 பேர் 100 சதவீத மதிப்பெண் தமிழக மாணவர் 99.99% பெற்றார்
 136. AMBULANCE RECRUITMENT : 108 ஆம்புலன்ஸில் பணிபுரிய ஆட்கள் தேர்வு
 137. ITI ADMISSION 2020 : சென்னையில் உள்ள அரசு ஐடிஐ.க்களில் சேர செப்.15-க்குள் விண்ணப்பம் மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு
 138. B.ED COLLEGE RECOGNITION CANCELLED : 71 பிஎட் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து ஆசிரியர் கல்வியியல் பல்கலை. அறிவிப்பு
 139. 7 NEW ART COLLEGE 2020-21 : நடப்பு கல்வி ஆண்டில் 7 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடக்கம் கல்லூரிக்கல்வி இயக்குநரகம் அறிவிப்பு
 140. NEET EXAM 2020 : 3,842 மையங்களில் 15.97 லட்சம் பேர் எழுதுகின்றனர்
 141. LIFE CERTIFICATE : மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழ் அளிக்க கால நீட்டிப்பு
 142. EXAM GUIDELINES 2020 : தேர்வுகள் நடத்துவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசு வெளியிட்டது
 143. TEACHERS ONLINE TRAINING : முதல்-அமைச்சர் ஒப்புதல் பெற்று ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் புத்தாக்க பயிற்சி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
 144. PERIYAR AWARD 2020 : சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்.
 145. NEP 2020 : புதிய கல்விக் கொள்கையின் மூலம் மதிப்பெண்களின் அழுத்தத்தில் இருந்து மாணவர்களை விடுவிப்பதே முக்கிய நோக்கம்
 146. DCE DIRECTOR : கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனத்துக்கு நீதிமன்றம் இடைக்கால தடை.
 147. TN SCHOOLS PORTION : கரோனா தொற்றால் பள்ளிகள் திறப்பில் தாமதம் பள்ளிக்கல்வியில் பாட அளவு 40% குறைப்பு நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல்
 148. AU FEE DETAILS : அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரிகளின் கல்வி கட்டண விவரம்
 149. ARTS COLLEGE ADMISSION 2020 : அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீதம் கூடுதல் இடங்கள் உயர்கல்வித் துறை அரசாணை
 150. IAS TRANSFER : கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநர் உட்பட 11 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
 151. WWW.NTANEET.NIC.IN | இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக 3,842 மையங்களில் நாளை ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் 15.97 லட்சம் பேர் எழுதுகின்றனர்
 152. AGRI ONLINE EXAM 2020 : ஆன்லைனில் கடைசி செமஸ்டர் தேர்வு: வீட்டில் இருந்தே தேர்வெழுதும் மாணவர்கள்.
 153. NEET EXAM 2020 : எதற்கெல்லாம் அனுமதி; ஆடைக் கட்டுப்பாடுகள் என்னென்ன? தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு
 154. SCHOOL ADMISSION : இம்மாத இறுதிவரை மாணவர் சேர்க்கை நடைபெறும் - அமைச்சர் செங்கோட்டையன்!
 155. PF வட்டி விகிதத்தில் புதிய மாற்றம்!
 156. BEO RESULT : வட்டாரக்கல்வி அலுவலர் (BEO) தேர்வு முடிவுகள் எப்போது? மனஉளைச்சலில் தேர்வர்கள் !
 157. SCHOOL REOPENING PRIMARY : மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்?
 158. SCHOOL REOPENING : தமிழகத்தில் அக்., 5 ! 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு ?
 159. SCHOOL REOPENING : பெற்றோரின் மனநிலை அறிந்து பள்ளி திறப்பது குறித்து முடிவு - முதல்வர் !
 160. CORONA PEAK | கோவை, சேலம், திருவண்ணாமலை, நாகை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில் கொரோனா உச்சத்தை தொடும் தலைமைச் செயலாளர் எச்சரிக்கை
 161. RASIPALAN | உங்கள் ராசி பலன் 11-9-2020 முதல் 17-9-2020 வரை
 162. KALVI TV : ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள்
 163. SEP 09 : கல்வி கட்டணத்தில் முதல் தவணையாக 40 சதவீத தொகையை பள்ளிக்கூடங்களுக்கு செலுத்த வருகிற 30-ந் தேதி வரை பெற்றோருக்கு கால அவகாசம் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
 164. SEP 09 : புதிய தேசிய கல்விக் கொள்கையால் 21-ம் நூற்றாண்டில் இந்தியா அறிவு மையமாக மாறும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 165. SEP 08 : 10 ஆண்டுகளாக அரசு பள்ளி களில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
 166. SEP 07 : இணைய வழி வகுப்புகளில் மாணவர்கள் இயல்பாக பங் கேற்க வேண்டுமே தவிர, அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.
 167. SEP 06 : தமிழகத்தில் ஓட்டல்களில் ஏ.சி. வசதிகளை பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
 168. SEP 06 : தமிழகத்தில் செப்.1-ம் தேதி முதல் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட் டுள்ள நிலையில், தொற்று அதிகரித் தால் செய்ய வேண்டியவை, சிகிச்சை முறைகள் குறித்து மருத் துவ நிபுணர்கள் குழுவினருடன் முதல்வர் பழனிசாமி செப்.8-ம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.
 169. SEP 06 : தமிழகத்தில் அரசு ஊழியர்கள் டிசம்பர் இறுதி வரை அனைத்து சனிக்கிழமைகளிலும் பணிக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 170. SEP 04 : தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வரும் 14-ம் தேதி கூடும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் 2020-21-ம் ஆண்டுக்கான துணை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
 171. SEP 04 : சென்னையில் வரும் 7-ம் தேதி முதல் காலை 8 மணியில் இருந்து இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 172. SEP 04 : நட்சத்திர ஓட்டல், கிளப்புகளில் மதுக்கூடங்கள் வழிகாட்டு நெறி முறைகளைப் பின்பற்றி இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 173. SEP 04 : திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் ஆன்லைன் மூலம் அனுமதிச் சீட்டு பெற்ற பக்தர்க ளுக்கு மட்டுமே அனுமதி அளிக் கும் நடைமுறை வரும் 6-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
 174. SEP 04 : தேர்வு கட்டணம் செலுத்த செப்டம் பர் இறுதிவரை அவகாசம் வழங்க வேண்டும் என்று அண்ணா பல் கலைக்கழக துணைவேந்தருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 175. SEP 04 : கல்லூரிகளில் சேர்ந்த பின்பு சேர்க் கையை ரத்து செய்யும் மாணவர் களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி தரவேண்டும் என்று ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.
 176. SEP 04 : சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்ததால், சென்னையில் நேற்று பவுனுக்கு ரூ.288 குறைந்து ரூ.39 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 875-க்கு விற்பனை ஆனது.
 177. SEP 04 : இந்தியா, சீனா இடையே மீண்டும் போர் பதற்றம் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து முப்படைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 178. SEP 04 : ஆகஸ்டு 31-ந் தேதி வரை கடன் தவணை செலுத்தாதவர்களை, மறு உத்தரவு வரும் வரையில் வாராக்கடன் பட்டியலில் சேர்க்க கூடாது என சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
 179. SEP 04 : மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையை தனியார் மருத்துவ கல்லூரிகள் இறுதி செய்யக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
 180. SEP 03 : ஆந்திர மாநிலத்திலும் இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டது.
 181. SEP 02 : நியூ இந்தியா சமாச்சார் இதழை தமிழில் வாசிக்க | Click Here
 182. SEP 01 : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட, பிரபல மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு, ஒரு ரூபாய் அடை யாள அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 183. SEP 01 : அவசரகால ஊர்தி சேவையில், நாட்டிலேயே முதல்முறையாக எம்.வீரலட்சுமி என்ற பெண் ஒருவர் ஓட்டுநராக தேர்வாகியுள்ளார்.
 184. SEP 01 : முதுநிலை மருத்துவப் படிப்புகளில் தமிழக அரசின் சிறப்பு இடஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள் ளது.
 185. SEP 01 : தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் இன்றுமுதல் பொதுமக்கள் தரிசனத் துக்காக திறக்கப்படும் நிலையில், நோய் அறிகுறி இல்லாதவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி யுள்ளது.
 186. SEP 01 : அரசு, அரசு உதவி பெறும் பள்ளி களில் இதுவரை 10.5 லட்சம் மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட் டுள்ளனர்.
 187. AUG 31 : சென்னை உட்பட மாவட்ட அளவில் நாளை முதல் பேருந்து போக்குவரத்து தொடக்கம். தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து.
 188. AUG 31 : 2019-20-ம் கல்வி ஆண்டில் 1, 2-ம் ஆண்டு படித்த பாலிடெக்னிக் மாணவர் களுக்கான ஏப்ரல் மாத பருவத்தேர்வு முடிவுகளை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டது.
 189. AUG 30 : நடுநிலைப்பள்ளிகளில் வேளாண்மை பாடத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறினார்.
 190. AUG 30 : மாக கடந்த 6 மாதங்களாக வங்கிகள் வழங்கி வந்த கடன் தவணை தள்ளி வைப்பு சலுகை நீட்டிக்கப்படாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
 191. AUG 30 : தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 192. AUG 30 : ஊரடங்கில் 4-ம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதன்படி, செப்டம்பர் 7-ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 193. AUG 30 : செப். 21-ம் தேதி முதல் சமூக, கல்வி, விளையாட்டு, கேளிக்கை, கலாச்சாரம், ஆன்மிகம், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளை 100 பேருடன் நடத்தலாம். பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை திறக்க அனுமதி இல்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
 194. AUG 30 : 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள், ஆசிரியர் களிடம் ஆலோசனைகள் பெறுவதற் காக செப்டம்பர் 21-ம் தேதி முதல் அவர வர் பள்ளிக்கு செல்லலாம். எனினும் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல அவர் களது பெற்றோர் எழுத்துபூர்வமான அனுமதி கடிதத்தை வழங்க வேண்டும்.
 195. AUG 30 : நாடு முழுவதும் தேசிய திறன்சார் பயிற்சி நிறுவனத்தின் பயிற்சி மையங்கள் செயல்படலாம். பிஎச்.டி, முதுகலை மாணவர்கள் ஆய் வகங்களுக்கு செல்ல அனுமதிக்கலாம். எனினும், இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துடன், மாநில கல்வி அமைச்சகங்கள் கலந்தா லோசிக்க வேண்டும்.
 196. AUG 30 : திருமண விழாக்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்கலாம். இறுதிச் சடங்கில் 20 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது. 21-ம் தேதிக்கு பிறகு திருமணம், இறுதிச் சடங்கில் 100 பேர் வரை கலந்துகொள்ளலாம்.
 197. AUG 30 : பாஜகவில் சேர்ந்த 4-வது நாளிலேயே கட்சி யின் மாநில துணைத் தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமிக்கப் பட்டுள்ளார்.
 198. AUG 28 : 17 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்திருப்பதாகவும், இதன் மூலம் நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை நடத்துவதற்கு அவர்கள் விருப்பத்துடன் இருப்பதாகவும் மத்திய கல்வி மந்திரி கூறியுள்ளார்.
 199. AUG 28 : ஆந்திர மாநிலத்திற்கு அமராவதியில் சட்டப்பேரவையும், விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகமும், கர்னூலில் உயர் நீதிமன்றமும் அமைக்க ஜெகன்மோகன் தலை மையிலான அரசு திட்டமிட்டுள்ளது.
 200. AUG 28 : ஓணம் பண்டிகையை முன் னிட்டு சென்னை மாவட்டத் துக்கு ஆகஸ்ட் 31-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி அறிவித் துள்ளார்.
 201. AUG 28 : கோயம்பேடு காய்கறி சந்தை வரும் செப்டம்பர் 28-ம் தேதி திறக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
 202. AUG 28 : சென்னை பச்சையப்பா அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் பச்சையப்பா கல்லூரி, கந்தசாமி நாயுடு கல்லூரி, செல்லம்மாள் மகளிர் கல்லூரி உள்ளிட்ட 6 கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. பச்சையப்பா அறக்கட்டளையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.இதுதொடர்பான வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது.
 203. AUG 28 : தமிழகத்தில் நடமாடும் ரேஷன் கடைகள் செப்டம்பர் மாதம் முதல் செயல்படத் தொடங்கும் என அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
 204. AUG 28 : கரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாததால், இதையே நம்பியுள்ள 35 ஆயிரம் வாகனங்கள் முடங்கியுள்ளன.
 205. AUG 27 : 10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு வருகிற 27-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 206. AUG 27 : நீட் தேர்வை இந்த ஆண்டு ரத்து செய்துவிட்டு, பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் இளநிலை மருத் துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர் தனுக்கு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கடிதம் எழுதியுள்ளார்.
 207. AUG 27 : அரசு கலை, அறிவியல் கல்லூரி களில் முதலாம் ஆண்டு மாணவர் களுக்கு ஆன்லைன் வகுப்புகள் வரும் 31-ம் தேதி முதல் தொடங்க வேண்டும் என்றும், பழைய கல்வி கட்டணத்தையே பெறவேண்டும் என்றும் கல்லூரிக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 208. AUG 27 : தமிழகத்தின் கல்வி தொலைக் காட்சி மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாகத் திகழ்ந்து வருவதாக, அதன் ஓராண்டு நிறைவு நாளில் முதல்வர் பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.
 209. AUG 27 : நீட், ஜேஇஇ தேர்வுகள் நடத்தப் படுவதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்ய மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட 7 மாநிலங்களின் முதல்வர்கள் முடிவு செய்துள்ளனர்.
 210. AUG 27 : கரோனா ஊரடங்கு காலத்தில் கடன் தவணைகள் மீதான வட்டியை ரத்து செய்யும் விவகாரத்தில் மத் திய அரசின் நிலைப்பாடு என்ன என் பது குறித்து பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 211. AUG 26 : பள்ளி மாணவர்களை போல, தனித்தேர்வர்களையும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
 212. AUG 26 : எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் மதிப்பெண் கணக்கிட்டதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு
 213. AUG 26 : 2019-20-ம் ஆண்டில் 2,000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சடிக்கவில்லை என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
 214. AUG 26 : தேசிய கல்வி கொள்கை உறுதியுடன் அமல்படுத்தப்பட்டால், அது கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 215. AUG 26 : அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
 216. AUG 26 : அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் பிளஸ்-1 வகுப்பு வரை 5½ லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடந்து இருப்பதாகவும், மெட்ரிகுலேசன் பள்ளிகளில் இருந்து பலர் சேர்ந்து இருப்பதாகவும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
 217. AUG 26 : கொரோனா பரவலுக்கு இடையே அடுத்த மாதம் 13-ந்தேதி ‘நீட்’ தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை நாடு முழுவதும் 16 லட்சம் பேர் எழுத இருக்கிறார்கள்.
 218. AUG 26 : விவசாயிகள் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை அதிகாரிகள் உள்பட 20 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
 219. AUG 26 : இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என மத்திய அரசு அறிவித்துள்ளது. பரிசோதனைகளை அதிகரித்துள்ள நிலையில் ஒரே நாளில் 66,500 பேர் குணம் அடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 220. AUG 25 : கரோனா தொற்றை கருத்தில் கொண்டு 2020-21 கல்வியாண்டிற்கான பள்ளி பாடத்திட்டங்களை ஒடிசா அரசு குறைக்க வாய்ப்பு உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் சமீர் ரம்ஜன் தாஸ் தெரிவித்தார்.
 221. AUG 25 : பிற மாவட்டங்களுக்குச் செல்வதற்கான இணையவழி அனுமதிச் சீட்டு (இ- பாஸ்) முறை தொடரும். இதை இப்போதைக்கு ரத்து செய்யும் திட்டமில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 222. AUG 25 : மத்திய அரசின் வழிக்காட்டுதலின்படி கர்நாடக மாநில அரசு இ-பாஸ் முறையை ரத்து செய்துள்ளது.
 223. AUG 25 : மத்திய அரசின் வழிக்காட்டுதலின்படி புதுச்சேரி மாநில அரசு இ-பாஸ் முறையை ரத்து செய்துள்ளது.
 224. AUG 25 : மத்திய அரசின் வழிக்காட்டுதலின்படி கர்நாடக மாநில அரசு இ-பாஸ் முறையை ரத்து செய்துள்ளது.
 225. AUG 25 : ஒரு மாதத்திற்குள் அனைத்து கூட்டுறவு வங்கிகளும் ஆன்லைனில் இணைக்கப்படுமென அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
 226. AUG 25 : காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் காரசார விவாதம் 6 மாதத்தில் புதியதலைவர்: இடைக்கால தலைவராக நீடிக்கிறார் சோனியா காந்தி; மீண்டும் பதவிக்கு வர ராகுல் மறுப்பு; அதிருப்தி தலைவர்கள் ஆலோசனை
 227. AUG 25 : தமிழகத்தில் இ-பாஸ் முறை தொடர்பாக 29-ந் தேதி (சனிக்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
 228. AUG 25 : செப்டம்பர் 1-ந் தேதி முதல் 4-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. அதில், மெட்ரோ ரெயில்களை இயக்க அனுமதி அளிக்கப்படும் என்று தெரிகிறது. ஆனால், பள்ளி, கல்லூரிகள் மற்றும் தியேட்டர்களை திறக்க தடை நீடிக்கும்.
 229. AUG 25 : லடாக் எல்லை பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாவிட்டால் சீனாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைக்கு இந்தியா தயாராக இருப்பதாக முப்படை தலைவர் பிபின் ராவத் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
 230. AUG 25 : கரோனா கட்டுக்குள் வரும் வரை ஜெ.இ.இ., நீட் தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
 231. AUG 25 : தமிழகத்தில் புதிதாக தொடங் கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரி களில் அடுத்த ஆண்டு (2021-22) முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 232. AUG 25 : பொறியியல் மாணவர் சேர்க் கைக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்தாமல் ஏற்கெனவே 30 ஆயிரம் பேர் விலகிய நிலை யில், தற்போது சுமார் 14 ஆயிரம் பேர் சான்றிதழை பதிவேற்றம் செய்யாமல் கலந்தாய்வில் இருந்து விலகியது தெரியவந் துள்ளது.
 233. AUG 25 : தமிழகத்தில் 21 சுங்கச்சாவடி களில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்த தேசிய நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது.
 234. AUG 25 : சென்னையில் 22 கேரட் தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.39 ஆயிரத்து 944-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 993-க்கு விற்பனை ஆனது.
 235. AUG 25 : தமிழகத்தில் சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப் புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் தெரிவித்துள்ளார்.
 236. AUG 25 : காலாவதியான ஓட்டுநர் உரிமம் மற்றும் மோட்டார் வாகனம் சம்பந்தப்பட்ட சான்றிதழ்களைப் புதுப்பிக்க டிசம்பர் 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
 237. AUG 23 : மாவட்டங்கள், மாநிலங்கள் இடையே போக்குவரத்துக்கு தடை வேண்டாம் என்றும், இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து நீடிக்கக்கூடாது என்றும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
 238. தமிழகத்தில் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை வருகிற 28-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (செப்டம்பர்) 4-ந்தேதிவரை நடைபெறும் என்று கல்லூரிக்கல்வி இயக்குனர் சி.பூரணசந்திரன் அறிவித்துள்ளார்.
 239. சென்னையை அடுத்த ஊனமாஞ்சேரியில் உள்ள போலீஸ் அகாடமியில் பணியாற்றும் கூடுதல் டி.ஜி.பி. இனிமேல் இயக்குனர் என்று அழைக்கப்படுவார். இதில் பணியாற்றும் ஐ.ஜி. கூடுதல் இயக்குனர் என்றும், டி.ஐ.ஜி., இணை இயக்குனர் என்றும், சூப்பிரண்டு துணை இயக்குனர் என்றும் இனிமேல் அழைக்கப்படுவார்கள்.
 240. மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட தேசிய நல்லாசிரியர் விருது பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு ஆகியுள்ளனர். தமிழகத்தில் இருந்து சென்னை அசோக்நகரில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.சி.சரஸ்வதி, விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் எஸ்.திலீப் ஆகியோர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர்.
 241. சேமிப்புக் கணக்கில் மாத சராசரி இருப் புத் தொகை இல்லாததற்கான கட்ட ணம், குறுஞ்செய்தி சேவைக்கான கட்டணம் ஆகியவற்றை பாரத ஸ்டேட் வங்கி ரத்து செய்துள்ளது.
 242. சென்னை பல்கலைக்கழக துணை வேந்தராக பேராசிரியர் எஸ்.கவுரியும், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக துணை வேந்தராக ஜி.சுகுமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இதற்கான ஆணையை அவர்களிடம் வழங்கினார்.
 243. Sep 21 to Sep 28 D.T.Ed first year exam ,Sep 29 to Oct 7 D.T.Ed second year exam
 244. கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களின் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2020-21-ம் ஆண்டு பயிற்சியில் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக அடுத்த மாதம்(செப்டம்பர்) 15-ந்தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்விற்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்குப் பிறகு, இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.
 245. பல்வேறு மத்திய அரசு பணிகளுக்கு பொதுவான ஒரே தகுதி தேர்வு மூலம் ஆள் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மதிப்பெண் அடிப்படையில், மத்திய அரசு துறைகள் தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளும்.இந்த தகுதி தேர்வு நடத்துவதற்காக, தேசிய பணியாளர் தேர்வு முகமை (என்.ஆர்.ஏ.) அமைக்கப்படுகிறது.
 246. காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் தொழில் நுட்ப நிறுவனம் (SRMIST) ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளில் 2-ம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. இதை குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு அறிவித்துள்ளார்.
 247. கண்டுபிடிப்பு சாதனைகளுக்கான கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில் 2-வது முறையாக சென்னை ஐ.ஐ.டி.க்கு முதல் இடம் கிடைத்து இருக்கிறது. இந்த தரவரிசை பட்டியலை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார்.
 248. மகாவீர் ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி அன்று இறைச்சிக்கடைகள் மூடப்படுவதால், ‘பர்யஷன்’ என்ற ஜெயின் மதப்பண்டிகைக்காக 10 நாட்கள் இறைச்சிக்கடைகளை மூட வேண்டிய அவசியம் இல்லை என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
 249. அமெரிக்காவை விட தமிழகத்தில் பள்ளி படிப்பை முடித்து உயர் கல்வியில் சேரும் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகமாக இருப்பது புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.
 250. ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக சமூக ஊடகமான பேஸ்புக் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்து மாறு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) மார்க் ஜுகர்பெர்க்கருக்கு காங்கிரஸ் கட்சி புகார் கடிதம் அனுப்பியுள்ளது.
 251. தமிழகம் முழுவதும் 18 டிஎஸ்பிக் களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
 252. தேசிய அளவில் சிறந்த புதுமை யான கல்வி நிறுவனங்களின் பட்டி யல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், சென்னை ஐஐடி தொடர்ந்து 2-வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது.
 253. தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண் ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள் ளது. இதேபோல், கரோனா பாதிக் கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 49 ஆயிரத்து 654 ஆக உயர்ந்துள்ளது.
 254. ஜேஇஇ முதல்நிலைத் தேர்வுக் கான ஹால்டிக்கெட்களை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ளது.
 255. மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க அமைக்கப்படும் மத்திய அரசின் குழுவில் தமிழக அரசின் பிரதிநிதியாக உமாநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
 256. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல் லும் என்று தீர்ப்பு அளித்துள்ளனர்.
 257. ஸ்ரீவைகுண்டம் அருகே கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடியை பிடிக்கச் சென்றபோது போலீஸார் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில், போலீஸ்காரர் ஒருவரும், குண்டு வீசிய ரவுடியும் உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு பதற்றம் நிலவுகிறது.
 258. பள்ளிகளை திறப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன், அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பள்ளி கல்வி செயலாளர், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பு.
 259. தமிழகத்தில் வரும் ஜனவரி 15-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டி யல் வெளியிடப்படும் என மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.
 260. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 3,12,883 பேர் விண்ணப்பம். பொறியியல் படிப்புகளில் சேர இதுவரை 1,29,030 பேர் விண்ணப்பம். பொறியியல் கலந்தாய்வுக்கு இதுவரை 5,175 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். - உயர்கல்வித்துறை.
 261. நாடு முழுவதும் ஊரடங்கை ஜூன் 15 வரை நீடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 262. நாளை (27.05.2020) முதல் 10,746 தலைமை மதிப்பீட்டாளர்கள் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபடுவார்கள். நாளை மறுநாள் முதல் 32,235 ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். தனிமனித இடைவெளியுடன் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற வேண்டும் என்றால், ஒரு அறையில் 8 பேர் மட்டுமே அமர வேண்டும் என்பதால், மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு சுமார் 1.20 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்பட உள்ளன.
 263. பத்தாம் வகுப்பு தேர்வு தள்ளி வைப்பது குறித்து அதிகாரிகளுடன், நாளை (18.05.2020) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை !!!.
 264. சி.பி.எஸ். இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான எஞ்சிய பொது தேர்வுகள் ஜூலை 1-ந் தேதி முதல் ஜூலை 15-ந் தேதி வரை நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
 265. அண்ணா பல்கலை.க்கு IoE என்ற சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு வழங்கா விட்டால், பல்கலைக்கழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசே வழங்கும் - உயர்கல்வித்துறை அமைச்சர்.
 266. முதல்வரை சந்தித்தபின் 11ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்* 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் பொழுது ஒவ்வொரு தேர்வையும் தகுந்த கால இடைவெளியில் நடத்த அரசு முடிவு. தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.
 267. ஆகஸ்ட் மாதம் கல்லூரிகள் திறப்பு. வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 1ம் தேதி தொடங்கும் :மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.
 268. தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோாின் எண்ணிக்கை 508 ஆக உள்ளது. இதில் சென்னையில் மட்டும் இன்று 278 போ் பாதிக்கப்பட்டு உள்ளனா். இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோாின் எண்ணிக்கை தமிழகத்தில் 3550லிருந்து 4058 ஆக உயா்ந்துள்ளது
 269. ஆகஸ்ட் 15க்குள் பொறியியல் முதற்கட்ட கலந்தாய்வினை நடத்தி முடிக்க வேண்டும்-அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ உத்தரவு. 2ஆம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 25க்குள் நடத்தி முடிக்க உத்தரவு. ஆகஸ்ட் 1 ஆம் தேதி 2 ஆம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை வகுப்புகள் தொடங்க அறிவுறுத்தல்.
 270. அமலுக்கு வருகிறது புதிய கல்விக் கொள்கை! வரும் கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை அமல். மாணவர்களுடனான ஆன்லைன் உரையாடலில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்.
 271. JEE முதன்மைத் தேர்வு தேதிி அறிவிப்பு.ஜூலை 18 20 21 22 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு.. மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால்.
 272. மே 18 வரை மின் கட்டணம் வசூலிக்க தடை. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. மே 18 வரை மின் கட்டணம் செலுத்தாவிட்டாலும் இணைப்பை துண்டிக்க கூடாது. -உயர்நீதிமன்றம்.
 273. ஜூலை 26ம் தேதி மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும் - மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம்.
 274. ஜூன் 3வது வாரத்தில் பத்தாம் வகுப்பு பொதுதேர்வு நடத்த திட்டம். இந்த மாத இறுதியில் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
 275. மே 30ஆம் தேதி நடைபெற இருந்த 2020 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது. நிலைமையை ஆராய்ந்த பின் தேர்வுக்கான புதிய தேதி மே 20ம் தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும். சென்ற ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான நேர்முகத் தேர்வும் ஒத்திவைக்கப்படுகிறது. UPSC அறிவிப்பு.
 276. கடந்த 5 ஆண்டுகளில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான 320 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. குரூப் ஏ அதிகாரிகள் (அகில இந்தியப் பணி அதிகாரிகள் உட்பட) 163 பேர் மற்றும் குரூப் பி அதிகாரிகள் 157 பேருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 277. சமூக வலைதளங்கள் பயன்படுத்துவோரின் சுயவிவரங்களை ஆதார் எண்ணுடன் இணைக்கும் திட்டமில்லை.
 278. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் அனுமதிக்கப்பட்ட மொத்த பணியிடங்கள் 38,02,799 ஆகும். 2018, மார்ச் 1-ம் தேதி நிலவரப்படி மொத்தம் 31,18,956 பணியாளர்கள் உள்ளனர். 6,83,823 பணியிடங்கள் காலியாக உள்ளன.
 279. பணியாளர் தேர்வு அமைப்புகளான யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி ஆகியவை நடப்பு நிதியாண்டில் சுமார் 1.34 லட்சம் பணியிடங்களுக்கு ஆட்களை பரிந்துரை செய்துள்ளன. மேலும் 3,10,832 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வுசெய்யும் பணியில் எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி, அஞ்சல் பணி வாரியம், பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவை ஈடுபட்டுள்ளன.
 280. அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு நாட்டமறி(APTITUDE TEST) முதன்மைத் தேர்வு ஜனவரி 30, 31 மற்றும் பிப்ரவரி 1 நடைபெறும் - இயக்குநர் செயல்முறைகள்.
 281. குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கில் தலைமறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளியும் இடைத்தரகருமான ஜெயக்குமார் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் சிபிசிஐடி போலீசார் அறிவிப்பு.
 282. மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயருகிறது.
 283. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் மாவட்ட முதன்மைக்ல்வி அலுவலர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி புத்தகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.
 284. தமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியிடு : ஜூலை 1-ம் தேதி முதல் முன் தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். அரசாணை எண் 323
 285. புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், 14 ஆண்டு கால பள்ளிபாடத் திட்டங்களை மாற்ற NCERT முடிவு :
 286. அரசு ஊழியர்களுக்கான பணப்பயன் பில்லுக்கு அன்றைய தினமே செட்டில்மென்ட் -புதிய நடைமுறை நவம்பர் முதல் நடைமுறைக்கு வருகிறது..
 287. ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2019 நடைபெறும் கால அட்டவணை இம்மாத இறுதியில் வெளியாக வாய்ப்பு.
 288. ஆசிரியர் பணியிட மாறுதல் கவுன்சலிங் குறித்து நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பேரில், அரசாணையில் திருத்தம் செய்து பள்ளிக் கல்வி த்துறை ஆணை வெளியிட்டுள்ளது. அதைப் பின்பற்றி கலந்தாய்வு நடத்த வேண்டும் - பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.
 289. TRB - பேராசிரியர் பணியில் சேர்வதற்கான அனுபவ சான்றிதழுக்கு கல்லுாரிகளில் வசூல் வேட்டை : உயர் கல்வி துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
 290. பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான SCERT சார்பில் பயிற்சி.
 291. தேனி மாவட்ட கல்வித்துறையில் லஞ்ச வெறியாட்டம். கோட்டைவிட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் - நாளிதழ் செய்தி
 292. மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக செயல்பட்டு 100 விருதுகளை அள்ளிக் குவித்த ஜெயங்கொண்டத்தை அடுத்த புதுச்சாவடி அரசுப் பள்ளி ஆசிரியர் - 9 ஆண்டுகளாக விடுப்பு எடுக்காமல் சாதனை - நாளிதழ் செய்தி
 293. 5 மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு உளவியல் பயிற்சி - யுனிசெஃப்- சமூகக் கல்வி நிறுவனம் தகவல்.
 294. திருவண்ணாமலையில் அக்.21, நீலகிரியில் அக்.25, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் அக்.30-ஆம் தேதி பயிற்சி முகாம்கள் நடைபெறும். அரசு நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சோந்த ஆசிரியா்கள் இதில் பங்கேற்கவுள்ளனா் என்றாா். ஒரு மாவட்டத்திற்கு தலா 50 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
 295. பொது மாறுதல் கலந்தாய்வு அரசு ஆணையை எதிர்த்து இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் 30க்கும் மேற்பட்ட வழக்கு பதிவு. மனு ஏற்றுக் கொள்ளப்பட்டு எண் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்.
 296. ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான தகுதி மதிப்பெண் அதிகரிப்பு.எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் இனி தேர்ச்சி மதிப்பெண் மட்டும் பெற்றால் சேர முடியாது.குறைந்தது 45 விழுக்காடு மதிப்பெண் பெற வேண்டும் - தமிழக அரசு அறிவிப்பு.பொதுப்பிரிவுக்கு 50 விழுக்காடாக நிர்ணயம் - தமிழக அரசு அறிவிப்பு.
 297. NEP | மொத்தம் 484 பக்கங்கள் கொண்ட புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்.புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு மீது ஜூன் 30ஆம் தேதி வரை nep.edu@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்.
 298. NEET 2019 | ஓ.எம்.ஆர். விடைத்தாள் என்.டி.ஏ. இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் https://ntaneet.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
 299. ஆசிரியர் பொது மாறுதல் / பதவி உயர்வு கலந்தாய்வு ஜூன் இறுதி வாரத்தில் EMIS இணையதளம் மூலம் நடைபெற உள்ளது.மே இறுதியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் மற்றும் பள்ளிகள் திறப்பு ஆகியவற்றால் ஜூன் இறுதி வாரத்துக்கு ஒத்திவைப்பு.
 300. EMIS ஆன்லைனில் அனைத்து விவரங்களும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் .அதை வைத்து தான் அனைத்து நலத்திட்டங்களும் வழங்கப்படும். எனவே, EMIS-ல் அனைத்து தகவல்களையும் கவனமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
 301. பயோமெட்ரிக் முறை அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அமல்படுத்தப்படும். விரைவில் நடுநிலைப் பள்ளிகளுக்கும் அமல்படுத்தப்படும்.
 302. மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு ஜூனில் வழங்கப்படும்.
 303. EMIS மூலம் ONLINE TC வழங்கப்பட வேண்டும். 5 ,8 ம் வகுப்பு மாணவர்களை MIGRATE செய்ய வேண்டும்.
 304. கல்வி சேனல் விரைவில் ஆரம்பிக்கப்படும்.
 305. பள்ளி திறக்கும் முதல்நாள் அன்றே அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும்.
 306. பள்ளி பராமரிப்பு பணிகளை முடிக்க வேண்டும்.
 307. பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுள் TET தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு DIET மூலம் இலவச பயிற்சி வழங்கப்படும் TET தேர்வு ஜூன் 8 நடத்தப்படும்.
 308. மாணவர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட வேண்டும். கடந்த ஆண்டை விட கூடுதலாக சேர்க்கப்பட வேண்டும். சேர்க்கப்பட்ட மாணவர்களை EMIS-ல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
 309. 10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் கவனம் செலுத்தி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்.
 310. EMIS-ல் பள்ளிக்கு தேவையான அனைத்து பதிவேடுகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 311. TNPSC DEO RESULT | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு முடிவுகள் மே மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும் - டிஎன்பிஎஸ்சி.
 312. தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இதுவரை 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. CBSE பள்ளிகளிலும் ஏழை மாணவர்களுக்கு RTE 25% மூலமாக இலவச கல்வி வழங்க நடவடிக்கை
 313. அனைத்து பள்ளிகளிலும் இஎம்ஐஎஸ் இணையதளத்தின் வாயிலாக மட்டுமே மாற்றுச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
 314. கோடை வெப்பம் அதிகரித்தால் பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம் - அமைச்சர் செங்கோட்டையன்.
 315. நல்ல கல்வியை கொடுக்கும் ஆசிரியர்கள் நடமாடும்தெய்வங்கள் என்று செய்யாறு அருகே அரசு பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பேசினார்.
 316. டெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான காலக் கெடு முடிந்ததை அடுத்து, இதில் தேர்ச்சி பெறாத 28 ஆயிரம் ஆசிரியர்கள் பணி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விரைவில் நடக்க உள்ள டெட் தேர்வு வரை அவகாசத்தை நீட்டிக்குமாறு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 317. தமிழ்நாட்டில் 2381 மையங்களில் மாண்டிசோரி கல்வி அடிப்படையிலான LKG மற்றும் UKG வகுப்புகள் துவங்க அரசாணை (அரசாணை எண் -89 நாள்-11.12.2018) வெளியிடப்பட்டுள்ளது.
 318. தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய/நகராட்சி மற்றும் அரசு நடுநிலைப்பள்ளிகளின் வளாகத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி பள்ளிகளின் விபரங்கள் கோரி தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
 319. உடுமலைப்பேட்டை ஆசிரியை திருமதி.ஹேனா ஷெர்லி அவர்களின் கை மற்றும் காலில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கு NHIS-ல் ரூ.29,000/- மட்டுமே அனுமதித்த நிலையில் NHIS தொடர்பான TNPTF-ன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வழிகாட்டலின்கீழ் 89% தொகையாக ரூ.1,54,780/- பெற்றுத் தரப்பட்டுள்ளது.
 320. பொதுத்தேர்வு வினாத்தாள்களை இறுதி செய்யும் பணிகள் தீவிரமாகியுள்ளன மாணவர்களை தேசிய நுழைவுத் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் விதமாக வினாத் தாள்கள் வடிவமைக்கப்பட் டுள்ளதாக தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 321. அரசு பள்ளிகளில் படித்து வரும் நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் மாநில செஸ் போட்டியில் சாதனை
 322. பல ஆண்டுகளாக ஆசிரியர்களின்றி உபரியாக இருந்த 3894 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் - இனி காலிப்பணியிடங்களாக காண்பிக்க தடை
 323. கடந்த ஆகஸ்டில் நடைபெற்ற ஆசிரியர் பயிற்சி தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. 3,000 பேருக்கு கூடுதல் மதிப்பெண்கள் கிடைத்துள்ளதாக தேர்வுத்துறை அதிர்ச்சி தகவல் அளித்துள்ளது.
 324. தொடக்கக் கல்வி டிப்ளமோ ஆசிரியர் தேர்வில் 15,000 பேர் பங்கேற்றனர். முறைகேடு புகார் எதிரொலியாக ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 325. ஆசிரியர் தகுதி பெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு மீண்டும் 2 சதவீத அளவுக்கு, பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி வாய்ப்பு வழங்கக் கோரிக்கை.
 326. 4.50 லட்சம் பட்டதாரிகள் எழுதிய குருப்-2 முதல்நிலைத் தேர்வு முடிவை ஒரே மாதத்தில் வெளி யிட்டு டிஎன்பிஎஸ்சி சாதனை புரிந்துள்ளது. மிகக் குறுகிய காலத்துக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவது டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
 327. ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளை, பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இணைப்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்வார்
 328. மலைப் பகுதிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தால் ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார்.
 329. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள, அந்தந்தப் பகுதியில் உள்ளவர்களையும் பணி அமர்த்த வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களில் கூடுதலாக 6,500 பேருக்கு மேல் உள்ளனர்.அவர்களுக்கும் பணி வழங்கப்படும். வட மாவட்டங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதால் விரைவில் நிரந்தரமாகப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
 330. எங்கெல்லாம் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதோ, அங்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம், அந்தந்தப் பகுதி எம்.எல்.ஏ., அமைச்சர்கள் உதவியுடன் 7,500 ஆசிரியர்களை நியமிக்க ஆணையிடப்பட்டுள்ளது.
 331. ஜனவரி 21ல் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யூகே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
 332. நமது பள்ளி அமைவிடம் longitude and latitude அடிப்படையில், ஏற்கனவே சர்வரில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் மட்டுமே ஆன்லைன் வருகைப் பதிவு செய்ய வேண்டும்.
 333. வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டுனர் உரிமத்தையோ அல்லது டிஜிட்டல் உரிமத்தையோ தன்னுடன் வைத்திருக்க வேண்டும்
 334. பள்ளிக்கு செல்லாமல் எழுதும் நேரடி 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜன.22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறும் - தேர்வுத்துறை அறிவிப்பு.
 335. பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு அறிவிப்பு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
 336. சிறப்பாசிரியர் தேர்வு தொடர்பாக தமிழ் வழி கல்வியில் படித்த ஆசிரியர்கள், ராணுவத்தில் பணியாற்றிய ஆசிரியர்கள், விதவை பெண்களாக தேர்வு எழுதிய ஆசிரியர்கள் கோட்டாட்சியர், சார்பு ஆட்சியர் மூலம் சான்றிதழ் பெற்று அனுப்ப 4 வாரம் கால அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் அதை அனுப்பவில்லை என்றால் பொதுப்பிரிவில் இருக்கும் ஆசிரியர்களை நியமிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
 337. ஆண்டுக்கு ரூ.3 கோடி செலவில் 100 மாணவர்களை தேர்வு செய்து மேலைநாடுகளின் அறிவியல், பண்பாடு, கலாசாரத்தை புரிந்து கொள்ள அங்கு அனுப்ப இருக்கிறோம் - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
 338. பள்ளி குழந்தைகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ‘பயோ மெட்ரிக்’ திட்டத்தை பள்ளிக்கல்வி துறை அமல்படுத்துகிறது. அதை அமல்படுத்த அரசிடம் நிதி இல்லை என்றாலும், தனியார் நிறுவனம் மூலம் அதை செயல்படுத்த இருக்கிறோம் - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
 339. அறிவியல் வளர்ந்து வரும் நிலையில் மாணவர்கள் அதனை அறிந்து கொள்ள ரூ.20 லட்சம் செலவில் 671 பள்ளிகளுக்கு ‘அட்டல் டிங்கர் லேப்’ டிசம்பர் மாதம் இறுதிக்குள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
 340. 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து வகுப்பு அறைகளும் கணினி மயமாக்கப்பட்டு இணையதள வசதி கொடுக்கப்பட இருக்கிறது - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
 341. மடிக்கணினி வழங்கும் திட்டம் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நிறைவேற்றப்படும் - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
 342. வருகிற டிசம்பர் மாத இறுதியில் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்படும் - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
 343. முதல்-அமைச்சர் ஒப்புதலோடு அடுத்த ஆண்டு 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலும், 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலும் 2 வெவ்வேறு விதமான பள்ளி சீருடைகளை அறிமுகப்படுத்துகிறோம். ஒவ்வொரு மாணவருக்கும் தலா 4 சீருடைகள் வழங்கப்படும்.
 344. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு குறித்து அடுத்த மாதம் (டிசம்பர்) முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
 345. நீட் தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நிறைய இடங்களில் தொடங்கப்பட்டு இருக்கிறது. முறையான பயிற்சி வழங்காதது, அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் வந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
 346. சரளமாக மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தர அடுத்த வாரத்தில் 5 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
 347. பள்ளி கல்வித துறையில், இணை இயக்குனர் குப்புசாமி, இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனராக பதவி உயர்வு. மற்றொரு இணை இயக்குனர் உஷாராணியும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இயக்குனர் நிலையில் உறுப்பினராக பதவி உயர்வு.
 348. அடுத்தாண்டு முதல் ( 2019 ) அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஷூ வழங்கப்படும்- பள்ளிகல்வித்துறை அமைச்சர்
 349. அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இலவச லேப்டாப் வழங்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.
 350. 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மொழித்திறனை மேம்படுத்த பயிற்சி அளிக்கப்படும். அதற்கான பணிகள் அடுத்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும்.
 351. அனைத்து ஆசிரியர் காலிப்பணியிடங்களும் நிரப்பப்படும்.
 352. ஆசிரியைகள் 9 மாதம் பிரசவ விடுப்பில் செல்லும்போது அந்த பணியிடத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு தடையில்லா கல்வி வழங்கப்படும்.
 353. ஆசிரியைகளுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு ஏற்பட்டால் உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கலாம். அல்லது 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும் புகார் கொடுக்கலாம்.
 354. புகார்கள் மீது 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். தகவல்கள் பாதுகாக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 355. வீட்டுக்கடன் ரூ.100 கோடி வழங்க கூட்டுறவு சங்கங்களுக்கு ஒப்புதல்.
 356. 'குரூப் - 4' தேர்வு முடிவு எப்போது? : 20 லட்சம் பேர் காத்திருப்பு.
 357. 6,029, 'ஹை - டெக்' ஆய்வகங்கள் 60 ஆயிரம் கணினியுடன் பள்ளிகளுக்கு புது திட்டம்.
 358. கேட்’ எனப்படும் மேலாண்மை படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு, நவ., 25ல் நடைபெறம்.
 359. TNPSC: மீன்வள ஆய்வாளர், உதவி ஆய்வாளர் தேர்வுக்கு அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு.
 360. அரசு ஊழியர் தனது பிறந்த தேதியை மாற்றம் செய்ய முடியுமா என்ற கேள்விக்கு மாற்றம் கோரும் அரசு ஊழியரின் பிறந்த தேதியானது 10-ஆம் வகுப்பு முடித்திருக்கும் போது 15 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும் இல்லையென்றால் பணி ஆணை இரத்தாகும் என தலைமைச் செயலாளர் அறிவுரை.
 361. பெற்றோரின் கல்வி சீர் மூலம், கோபி அருகே, ஏழூர் அரசு துவக்கப் பள்ளியில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்கியுள்ளனர்.வகுப்பறை கட்டடங்கள் மீது விழும் மழைநீர், ஒரு துளி கூட வீணாகாமல், நிலத்தை அடைய வசதியாக, மூன்று இடங்களில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்கிஉள்ளனர்.'மூன்றாண்டுகளில் மட்டும், பெற்றோர் பங்களிப்பாக, மூன்று லட்சம் ரூபாய் வரை நிதியுதவி செய்துள்ளனர்.
 362. Maharashtra Government to disburse 25% of 7th pay commission arrears soon.
 363. பொது அறிவு புத்தகங்களை பள்ளியில் படிக்க பாடவேளை ஒதுக்கீடு:- "வாசிப்பு மாதம்"எனும் திட்டம் மூலம் நடவடிக்கை.
 364. இன்ஜினியரிங் முதல் சுற்று கலந்தாய்வை புறக்கணித்த 2,653 பேர்.
 365. ஆசிய நாடுகளுக்கு செல்லும் மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை கால சலுகை வழங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.கஜகஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிரிகிஸ்தான், தஜிகிஸ்தான், உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் ஊழியர்களுக்கு விடுமுறை கால பயண சலுகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
 366. தமிழக அரசு துறையில், வன பயிற்சியாளர் பணிக்கான தேர்வு, செப்டம்பர், 23 முதல், 30 வரை நடத்தப்படும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்திருந்தது.
 367. தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு இன்னும் ஒரு வாரக் காலத்தில் தமிழக அரசு நடைமுறைப்படுத்த உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 368. மூவாயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, 9, 10, 12ஆம் வகுப்புகள் அனைத்தும் கணினி மையமாக்கப்பட உள்ளது" என கல்வி அமைச்சர் அறிவிப்பு.
 369. அரசு பள்ளிகளில் மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்தும் வகையில் கூடுதலாக ஒரு ஆங்கில வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்படும் என கல்வி அமைச்சர் அறிவிப்பு.
 370. பிற மாநிலத்தில் ஜாதி சான்றிதழ் பெற்றவர் தமிழகத்தில் எம்பிபிஎஸ் சேர்க்கையில் இட ஒதிக்கீடு கோர முடியாது உயர்நீதிமன்றம் உத்தரவு.
 371. கணினி ஆசிரியர் கல்வி தகுதியில் மாற்றம் : விரைவில் புதிய விதிகள் அறிவிப்பு.
 372. ஐடிஐ தொழிற் பயிற்சிக்காக ஆக.11 வரை விண்ணப்பிக்கலாம்.
 373. அனைத்து பதிவுகளையும் படியுங்கள்.
 374. அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 1942 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
 375. இன்ஜினியரிங் தொழிற்கல்வி பிரிவின்கீழ் விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 376. 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் சீருடை அடுத்த ஆண்டு முதல் மாற்றி அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 377. தமிழகத்தில்அரசு அலுவலக நடைமுறைகள் மற்றும் பணபரிவர்த்தனைகளை ஆன்லைன் மூலம் செயல்படுத்தும் புதிய திட்டம், நவம்பர் ஒன்றாம் தேதி முதல் தொடக்கம்!
 378. தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில், இரண்டு மாதங்களில், இலவச இணையதள,'வைபை' வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
 379. Attendance App - தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தல் தற்போது ஆசிரியர்கெனத் தனித்தனியாக Login வசதி உருவாக்குதல், எந்த வகுப்பு மாணவர்களின் வருகையினை எந்த ஆசிரியர் பதிவு செய்ய வேண்டும் என்பது போன்ற விவரங்களைப் பள்ளித் தலைமை ஆசிரியர் முடிவெடுத்தல் தொடர்பாக விரைவில் புதிய Application வெளியிடப்பட உள்ளது.

1 comment:

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||

MHC ALL DISTRICT RECRUITMENT 2021 | சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.06.2021. பதவி : அலுவலக உதவியாளர், நகல் பிரிவு அலுவலர், சுகாதார பணியாளர், காவலர் உள்ளிட்ட பணி...பணியிட எண்ணிக்கை : 3559. | Click Here

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.