தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சற்றுமுன் அறிவிப்பு வெளியிட்டார்.
இதையடுத்து, புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார். மேலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார். முன்னதாக, 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழக அரசின் முடிவைப் பொறுத்து முடிவு செய்யப்படும் என புதுச்சேரி அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Thanks for your usefull information bro job updates post panunga
ReplyDelete