மத்திய அரசில் 8¾ லட்சம் காலி பணியிடங்கள் இருப்பதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடர்ந்தது.
ராஷ்டிரீய ஜனதாதள உறுப்பினர் ஏ.டி.சிங் பேசுகையில், இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைந்து பல நாட்கள் ஆகியும் அப்பதவி காலியாக உள்ளது. அதை விரைவில் நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அ.தி.மு.க. உறுப்பினர் தம்பிதுரை பேசியதாவது:-
இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வருகிறது. மீனவர்களின் உயிரையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க உறுதியான கொள்கை முடிவு எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடப்படுவதை தடுத்து, அவற்றை மீட்டுத்தர வேண்டும்.
‘நீட்’ தேர்வால் தமிழக கிராமப்புற மாணவர்களின் நலன்கள் பாதிக்கப்படுகிறது. அவர்களால் பயிற்சி மையங்களில் செலவழித்து படிக்க முடியாது. ஆகவே, தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று தமிழக கட்சிகள் ஒருமித்த கருத்தில் உள்ளன.
மாநில மொழிகளை மத்திய அரசு ஊக்குவிக்க வேண்டும். அவற்றை தேசிய, அலுவல் மொழிகளாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.









No comments:
Post a Comment