பள்ளி மற்றும் பட்டப்படிப்பை தமிழ்வழியில் படித்த மாணவர்கள், அரசு வேலை வாய்ப்புகளில் பயன்பெறும் வகையில், கடந்த 2010-ம் ஆண்டு தமிழ்வழி இட ஒதுக்கீடு சட்டம் (பி.எஸ்.டி.எம்) கொண்டு வரப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததால், கடந்த ஆண்டு தமிழக அரசு 1-ம் வகுப்பு முதல் கல்லூரி வரை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்று தமிழ் வழி இடஒதுக்கீடு முறையில் மாற்றம் கொண்டு வந்தது.
இந்த நிலையில் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் பாதிக்காத வகையில், அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக நேற்று சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் மாணவர்கள் சசிக்குமார், ராஜா, காளிதாஸ் ஆகியோர் நிருபர்களுக்கு கூட்டாக அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஆரம்ப பள்ளிகளில் ஏதேனும் ஒரு வகுப்பை மட்டும் ஆங்கில வழியில் படித்ததால், 6-ம் வகுப்பு முதல் கல்லூரி வரை தமிழ்வழியில் படித்தும், தமிழ் வழி இடஒதுக்கீடு முறை மாற்றத்தால், தமிழகத்தில் பல லட்சக்கணக்கான மாணவர்கள் அரசு வேலை வாய்ப்பை பெற முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, தமிழக அரசு 10, 12-ம் வகுப்புகள் மற்றும் பட்டப்படிப்பை தமிழ்வழியில் படித்தவர்கள் பாதிக்காத வகையில், மாற்றம் செய்யப்பட்ட இந்த இடஒதுக்கீடு முறையை பரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.









No comments:
Post a Comment