கொரோனா தொற்று அதிகரித்த காரணத்தினால், கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடக்கும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி பிப்ரவரி 1-ந் தேதியில் (இன்று) இருந்து 20-ந் தேதிக்குள் ஆன்லைனில் நடத்தி முடிக்கவும் உயர் கல்வித்துறை உத்தரவிட்டது. அந்த உத்தரவை தொடர்ந்து என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்பட அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் செமஸ்டர் தேர்வு அட்டவணையை வெளியிட்டது.
அந்த வகையில் என்ஜினீயரிங் படிப்புகளுக்கான தேர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் முதல் வாரம் வரை ஒவ்வொரு பாட பிரிவுகளுக்கும் வெவ்வேறு விதமாக தேர்வு நடக்க இருக்கிறது.
இந்த தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. இதேபோல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு சென்னை பல்கலைக்கழகம் வருகிற 4-ந் தேதி முதல் தேர்வை நடத்த இருக்கிறது. இதுபோல் தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வை நடத்த உள்ளன.









No comments:
Post a Comment