- தமிழக அரசு பணியிடங்களில் காலியாக உள்ள குரூப் 4 பதவிகளுக்கான தேர்வு தேதி இன்று மாலை அறிவிப்பு சுமார் 7 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி முடிவு
- தமிழ் நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன் பிஎஸ்சி) தமிழக அரசு துறைகளில் குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு பத விகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது.
- ஓராண்டில் எந்தெந்த பணிகளுக்கு என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும், அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும், தேர்வு எப்போது நடத்தப்ப டும், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் ஆகிய விவரங்கள் அடங் கிய ஓராண்டு தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது.
- இது தேர் வர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு படிப்ப தற்கு உதவியாக இருந்து வருகிறது.
- அதன்படி, 2022ம் ஆண்டுக்கான ஓராண்டு தேர்வு கால அட்டவணை கடந்த டிசம்பர் 7ம் தேதி டிஎன் பிஎஸ்சி வெளியிட்டது. அதில் குரூப்-2 மற்றும் குரூப் 2ஏ (நேர்முகதேர்வு அல்லாத பதவி) பதவியில் காலியாக உள்ள பணியி டங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
- அதன் படி கடந்த மாதம் 23ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பத விகளில் காலியாக உள்ள 5,529 பணியிடத்துக்கான அறி விப்பை வெளியிட் டது. தொடர்ந்து கடந்த 23ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவ காசம் வழங்கப்பட்டது.
- குரூப் 2, குரூப் 2ஏ பதவிக்கு மொத்தம் 11 லட்சத்து 61 ஆயிரத்து 227 பேர் விண் ணப்பித்துள்ளனர். இவர் களுக்கான முதல் நிலை தேர்வு மே மாதம் 21ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஓராண்டு கால அட்டவ ணையில் குரூப் 4 பதவி களுக்கு மார்ச் மாதத்தில் தேர்வு தேதி அறிவிக்கப்ப டும் என்று அறிவித்திருந் தது.
- அதன் படி இன்று மாலை 4.30 மணியளவில் சென்னை பிராட்வேயில் உள்ள டி என் பி எஸ்சி தலைமை அலுவலகத்தில் குரூப் 4 தேர்வுக்கான தேதி அறிவிப்பு வெளியிடப்பட உள் ளது.
- டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் இதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளார். இதில் குரூப் 4 பத வியில் ஓராண்டு கால அட்டவணைப்படி 5255 பணியிடங்கள் நிரப்பப்ப டும் என்று அறிவிக்கப்பட் டது.
- தற்போது இந்த காலி இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுமார் 7 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படலாம் என்று தெரிகிறது. அது மட் டுமல்லாமல் தேர்வுக்கு எப் போது இருந்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது?. தேர்வு எப்போது நடைபெறும் என்ற அறிவிப்பு இன்று மாலை அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.
- CLICK HERE FOR DETAILS | DOWNLOAD
- Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here
முக்கியச்செய்திகள் |
TNPSC TRB LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS) |
Kalvisolai Telegram | Whats App | Face Book Invite Link |
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||