- 4% அகவிலைப் படி உயர்வு - தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு. 01.04.2023 முதல் அகவிலைப்படி உயர்வு - இனிவரும் காலங்களில் ஒன்றிய அரசு அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் அதைப் பின்பற்றி தமிழ்நாடு அரசும் செயல்படுத்தும் என முதலமைச்சர் அறிவித்தார்.
- அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு குறித்து கனிவுடன் பரிசீலித்து, இந்த உயர்வினை 01.04.2023 முதல் செயல்படுத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
- இதன்படி, தற்போது 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.04.2023 முதல் 42 சதவீதமாக உயர்த்தப்பட்டு வழங்கப்படும்.
- அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, எதிர்வரும் காலங்களிலும் ஒன்றிய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம், உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வைச் செயல்படுத்திடும்.
- NEED THIS DOCUMENT ? | DOWNLOAD
- NEED MORE ? | CLICK HERE
D.A HIKE / 4% அகவிலைப் படி உயர்வு - தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||