கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பணியிட விவரங்கள்:
நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 9,126 இடங்களும், நவோதயா பள்ளிகளில் 5,841 இடங்களும் என மொத்தம் 14,967 ஆசிரியர் மற்றும் பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
- ஆசிரியர் மற்றும் நிர்வாகப் பணியிடங்கள் (13,008):
- இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்
- முதல்வர், துணை முதல்வர்
- நூலகர்
- ஆசிரியர் அல்லாத இதர பணியிடங்கள் (1,959):
- உதவி ஆணையர்
- நிர்வாக அதிகாரி
- இளநிலை உதவியாளர்
- மூத்த உதவியாளர்
- உதவிப் பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ)
- நிர்வாகப் பணியாளர்
- நிதி அதிகாரி
- பொறியாளர்
- மொழிபெயர்ப்பாளர்
- சுருக்கெழுத்தாளர்
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு:
- விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 4, 2025
- விண்ணப்பிக்க வேண்டிய வலைதளங்கள்: kvsangathan.nic.in மற்றும் cbse.nic.in
- தேர்வு முறை: எழுத்துத் தேர்வு கணினிவழியில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படவுள்ளது.
- ஹால்டிக்கெட் வெளியீடு: டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும்.
பின்னணி தகவல்:
மத்திய அரசுப் பணியாளர்களின் குழந்தைகள் அதிகம் சேர்க்கப்படும் இந்த தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் பள்ளிகளில், போதிய பள்ளிகள் இல்லாமலும், காலிப் பணியிடங்கள் அதிகமாகவும் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், தற்போது இந்த காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன், நடப்பாண்டில் புதிதாக 57 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
















No comments:
Post a Comment