- தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட நிதிக்கு அதிக வட்டி பெறும் நோக்கில் 'குரூப் இன்சூரன்ஸ்' திட்டத்தில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரடெரிக் எங்கெல்ஸ் என்பவர், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
- மனுவில், தமிழகத்தில் 1.4.2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தாலும், அதற்கான விதிமுறைகள் வகுக்கப்படவில்லை என்றும், இதனால் ஓய்வூதியப் பலன்களை பெற முடியாமல் பலர் தவிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
- மேலும், மத்திய அரசின் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்தை தமிழக அரசு பின்பற்றவில்லை என்றும், வல்லுநர் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை என்றும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.
- இதற்குப் பதிலளித்து தமிழக அரசின் நிதித் துறைச் செயலாளர் தாக்கல் செய்த பதில் மனுவில்:
- பொது வருங்கால வைப்பு நிதி (ஜிபிஎப்) விதிகளில் திருத்தம் செய்து, 27.5.2004-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையிலேயே பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் விதிமுறைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
- வருங்கால வைப்புநிதி விகிதம் கருவூல ரசீதுகளின் வருவாயைவிட அதிகமாக இருப்பதால் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் வட்டியில் உள்ள இடைவெளியை ஈடுகட்ட, பங்களிப்பு ஓய்வூதிய நிதியை இந்திய காப்பீட்டுக் கழகத்தின் பணப் பலனுடன் கூடிய புதிய குழு (குரூப் இன்சூரன்ஸ்) ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
- தேக்க நிலை இருப்பதாக மனுதாரர் தெரிவிக்கும் குற்றச்சாட்டில் உண்மையில்லை.
- கடந்த அக்டோபர் மாதம் வரை பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணம் கேட்டு வரப்பெற்ற 54,000 விண்ணப்பங்களில் 51,000 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
- எனவே, மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
- மேலும், இவ் வழக்கு விசாரணையில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டதையடுத்து, விசாரணையை டிசம்பர் 4-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Note : The Study materials from our website are not created by us. These materials for Educational and Competitive Exam Purpose only. All the credits go to the creators who created them.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
















No comments:
Post a Comment