- உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்ட அரசாணை வரும் வரை காத்திருக்க வேண்டும். வழக்கை முடிக்கக்கூடாது என மதுரை ஐகோர்ட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
- உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்ட அரசாணை பிறப்பிக்கப்படும் வரை காத்திருக்க வேண்டும் என்றும், அதுவரை பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட கோரிய வழக்கை முடிக்கக்கூடாது என்றும் மதுரை ஐகோர்ட்டில் வலியுறுத்தப்பட்டது.
- திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரடெரிக் ஏங்கெல்ஸ், மதுரை ஐகோர்ட்டில் 2012-ம் ஆண்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
- அதில், தமிழகத்தில் 1.4.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதற்கான விதிமுறைகள் வகுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
- மத்திய அரசு ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் அமைத்ததை தமிழகம் பின்பற்றவில்லை என்றும், வல்லுனர் குழு பரிந்துரைகள் மீது அரசாணையோ, விதிமுறைகளோ வகுக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
- இதனால் ஓய்வூதிய பலன்களை பெற முடியாமல் பலர் தவிப்பதாகவும், எனவே புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
- இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கலைமதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
- அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, தமிழக அரசு தற்போது பழைய ஓய்வூதிய திட்ட அடிப்படையில் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ளதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றார்.
- இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் வழக்கை முடித்து வைக்கலாமா? என கேள்வி எழுப்பினர்.
- அதற்கு மனுதாரர் வக்கீல், அரசாணை வெளியிடப்படும் வரை வழக்கை ஒத்திவைக்கலாம் என்றார்.
- இதனை பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கை வருகிற 21-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
Share this Post
✨ உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்ட அரசாணை: மதுரை ஐகோர்ட்டில் வழக்கு ஒத்திவைப்பு
🔗 Link : https://www.kalvisolai.com/2026/01/blog-post.html
*உடனுக்குடன் செய்திகளை பெற பின்தொடருங்கள்*










No comments:
Post a Comment