பதிவு மூப்பு விடுபட்டவர்கள் மற்றும் கோர்ட்டில் உத்தரவு பெற்றவர்கள் என, மொத்தம் 76 பேரின் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம் அனுப்பியது. இவர்களுக்கு, நேற்று சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்தன.இந்தப் பட்டியலை தேர்வு வாரியம் ஆய்வு செய்ததில், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட தேர்வுப் பட்டியலில் இருப்பவர்களை விட, இவர்களில் பல பேருக்கு பதிவு மூப்பு தகுதி இருப்பதை கண்டறிந்துள்ளது.
இதனால், தேர்வுப் பட்டியலில் திருத்தம் செய்து, புதிய பட்டியலை வெளியிட, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவெடுத்துள்ளது.இதனால், ஏற்கனவே தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றிருந்த பலர், புதிய பட்டியலில் இடம் பெறாமல் போவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. புதிய தேர்வுப் பட்டியலில், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கென தனியாக 286 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.திருத்தப்பட்ட புதிய பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, 15ம் தேதிக்குப் பின் வெளியிட, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

No comments:
Post a Comment