மனித வள மேம்பாட்டில் முக்கிய பங்காற்றுவது கல்வி. கல்வியில் மேம்பட்ட சமுதாயத்தால் தான், வளர்ச்சிக் குறியீடுகளை எளிதாக அடைய இயலும். அந்த வகையில் தான் இந்த அரசு, கல்வி வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும்
நடவடிக்கையின் ஓர் அங்கமாக, மாநிலத்தில் உள்ள 100 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை, மேல்நிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்த உத்தரவிட்டுள்ளேன். தற்போது நிலை உயர்த்தப்படும் 100 பள்ளிகளிலும், அறிவியல் பிரிவுடன் கலைப்பிரிவும் துவக்க, இந்த அரசு முடிவு செய்துள்ளது. தற்போது நிலை உயர்த்தப்படும் 100 பள்ளிகளில் கூடுதலாக 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்.வரலாறு, பொருளியல், வணிகவியல் ஆகிய பாடங்களைப் படிக்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைப்பதுடன், இந்தப் பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் வேலை வாய்ப்பு பெறவும் இது வழி வகுக்கும். தமிழ் மொழிப் பாட ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்பளிப்பு வழங்கப்படுவதால், தமிழ் மொழிப் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு, மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் வேலை வாய்ப்பு பெற ஒரு வாய்ப்பாக அமையும். இவ்வாறு 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்தப்படுவதால், ஆண்டு ஒன்றுக்கு தோராயமாக 44 கோடியே 91 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

No comments:
Post a Comment