- FEB 27 : கவுன்சிலிங் நடத்தாமல் மருத்துவ மேற்படிப்பில் மாணவர்கள் சேர்க்கை நடத்த காரணமாக இருந்த தேர்வுக்குழு முன்னாள் செயலாளரின் ஓய்வூதியத்தில் இருந்து மாணவர்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
- FEB 27 : மனிதநேயம், மதநல்லிணக்கம் குறித்து அப்துல்கலாம் என்ற பள்ளி மாணவர், இணையதள தொலைக்காட்சியில் கடந்த 24-ந்தேதி பேசியிருந்தார். இதையொட்டி மாணவர் ஏ.அப்துல்கலாம், சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.
- FEB 27 : தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பணியாற்றி பகுதி நேர சிறப்பாசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, சென்னையில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் தொடர்ந்து 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
- FEB 25 : உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷிய நடவடிக்கையில் எந்த நாடாவது குறுக்கிட்டால், அவை இதுவரை பார்த்திராத விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் என்று புதின் எச்சரித்துள்ளார்.
- FEB 25 : உக்ரைனில் சிக்கித் தவிக்கும் 5 ஆயிரம் தமிழக மாணவர்களை சிறப்பு விமானங்கள் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
- FEB 25 : உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி இருப்பதால் உலகம் எங்கும் அதன் தாக்கம் எதிரொலிக்கத்தொடங்கி உள்ளது.இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
- FEB 25 : தமிழகத்தில் 575 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
- FEB 25 : இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 14 ஆயிரமாக குறைந்தது. பலி சற்று அதிகரித்துள்ளது.
- FEB 25 : மேற்கு வங்காளத்தில் வரலாற்றில் முதல்முறையாக சட்டசபை கூட்டம் நள்ளிரவில் நடைபெற உள்ளது.சட்டசபை கூட்டம் தொடர்பாக கவர்னருக்கு மாநில அரசால் அனுப்பட்ட பரிந்துரை கடிதத்தில், சாதாரண தட்டச்சு பிழையாக பகல்பொழுதை குறிக்கும் ஆங்கில குறியீடான பி.எம். என்பதற்குப் பதிலாக, இரவு நேரத்தை குறிக்கும் ஏ.எம். என்ற குறியீடு, இடம் பெற்றுவிட்டது.
- FEB 22 : தி.மு.க. தொண்டரின் சட்டையை கழற்றிய விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.
- FEB 22 : பலத்த பாதுகாப்புடன் இன்று ஓட்டு எண்ணிக்கை. தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந் தேதி 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது.மாநகராட்சி பகுதியில் 1,369 வார்டுகள், நகராட்சி பகுதியில் 3,824 வார்டுகள், பேரூராட்சி பகுதியில் 7,408 வார்டுகள் என மொத்தம் 12,601 வார்டுகளுக்கு நடந்த இந்த தேர்தலில் மொத்தம் 57,746 பேர் போட்டியிட்டனர்.காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதும் தபால் ஓட்டுகள் எண்ணப்படும்.
- FEB 22 : பொதுமக்கள் http://tnsec.tn.nic.in என்ற மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலம் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
- FEB 21 : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது முறைகேடு புகார் கூறப்பட்டதால் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் இன்று (திங்கட்கிழமை) மறுவாக்குப்பதிவு நடத்த தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
- FEB 21 : செஞ்சி மருந்தாளுநரிடம் 12 பவுன் நகையை திருடிய வழக்கில் போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
- FEB 21 : இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு குறைகிறது. ஒரு நாள் பாதிப்பு 20 ஆயிரத்துக்குள் வந்துள்ளது.
- FEB 21 : தமிழகத்தில் 51 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது.
- FEB 21 : சித்தாலபாக்கத்தில் நாளை மறுதினம் நடைபெறும் நிகழ்ச்சியில் மக்களை தேடி மருத்துவம் திடட் 50 லட்சமாவது பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
- FEB 19 : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி, தொலைதூர கல்வியில் என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களுக்கான நேரடித் தேர்வு (ஆப்லைன்) தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
- FEB 19 : தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
- FEB 19 : கோதாவரி-காவிரி நதிகள் இணைப்புக்கான தொடக்க பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநில அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
- FEB 19 : திருச்சியை அருகே இனாம் குளத்தூரில் ஹாஜியார் முகமது யூசுப் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஆங்கில ஆசிரியர் முருகேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
- FEB 17 : நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.
- FEB 17 : கொரோனா காலத்தில் போட்ட கூடுதல் கட்டுப்பாடுகளை ரத்து செய்யுமாறு மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தி கடிதம் எழுதி உள்ளது.
- FEB 17 : போர் பதற்றம் நீடித்து வரும் உக்ரைனில் இருந்து இந்தியர்களை தாயகம் அழைத்து வர அதிக விமானங்களை இயக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- FEB 17 : ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் தொடங்குகிறது. இதுதொடர்பாக சசிகலா, அப்பல்லோ ஆஸ்பத்திரி தரப்பு வக்கீல்களுடன் ஆணையம் நேற்று ஆலோசனை நடத்தியது.
- FEB 17 : செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் வகுப்பறையில் ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவர் கைது செய்யப்பட்டார்.
- FEB 17 : தொற்று வேகமாக குறைவதால் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை தேவையில்லாத ஒன்றாக மாறிவிட்டது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
- FEB 17 : இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 31 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
- FEB 17 : உலகளவில் கொரோனா பாதிப்பு 19 சதவீதம் சரிவு அடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
- FEB 17 : TET IS MANDATORY FOR TEACHERS INCLUDING MINORITY ... JUDGEMENT. சிறுபான்மை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் T E T தேர்வு எழுத வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நாள் : 08-02-2022.
- FEB 16 : தமிழகம் முழுவதும் 75 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- FEB 16 : கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்ட கூடுதல் தளர்வுகள் தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வருவதால் நர்சரி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. தியேட்டர்கள் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்கும்.
- FEB 16 : திருப்புதல் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதுதொடர்பாக திருவண்ணாமலை கல்வி அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
- FEB 16 : ‘திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடத்துக்கு நிர்வாக நலன்கருதி, விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணிபுரியும் கோ.கிருஷ்ணபிரியா என்பவரை முழு கூடுதல் பொறுப்பு அலுவலராக நியமனம் செய்து ஆணை வழங்கப்படுகிறது. அப்பணியிடத்தில் மறு அலுவலர் பணியேற்கும் வரை கிருஷ்ணபிரியா முழு கூடுதல் பொறுப்பில் செயல்படுவார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- FEB 16 : ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்க தேவையான ஏற்பாடுகளுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
- FEB 16 : கனடாவில் கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிராக தீவிரமடைந்துள்ள போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.
- FEB 16 : தமிழகத்தில் 75 குழந்தைகள் உள்பட 1,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- FEB 16 : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த பொறியியல் பதவிகளுக்கான தேர்வு முடிவு வெளியீடு
- FEB 15 : TET IS MANDATORY FOR TEACHERS INCLUDING MINORITY ... JUDGEMENT. சிறுபான்மை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் T E T தேர்வு எழுத வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நாள் : 08-02-2022.
- FEB 15 : சமூக வலைதளங்களில் முன்கூட்டியே வெளியான வினாத்தாளுடன் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடந்து முடிந்திருக்கிறது. அந்த வினாத்தாளை படித்த மாணவர்களுக்கு இது மகிழ்ச்சியை தந்தாலும், கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
- FEB 15 : தமிழகத்தில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். வகுப்புகள் நேற்று முதல் தொடங்கின. இதையடுத்து முதலாம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் நேற்று உற்சாகமாக கல்லூரிக்கு வந்தனர்.
- FEB 15 : ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுள்ள முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு கவர்னர், முதல்-அமைச்சர் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அடித்தட்டு மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் பாடுபடுவேன் என்று தலைமை நீதிபதி உறுதி அளித்து பேசினார்.
- FEB 15 : 45-வது சென்னை புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை (புதன்கிழமை) முதல் மார்ச் 6-ந் தேதி வரை 19 நாட்கள் நடைபெற உள்ளது. 10 லட்சம் தலைப்புகளிலான புத்தகங்கள், 800 அரங்குகளுடன் கூடிய இந்த கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை 5.30 மணி அளவில் தொடங்கி வைக்கிறார்.
- FEB 15 : தேசிய கல்விக்கொள்கை தொலைநோக்கு பார்வை கொண்டது என்று சென்னையில் நடந்த விழாவில் வெங்கையா நாயுடு பேசினார்.
- FEB 15 : கர்நாடகத்தில் 5 நாட்களுக்கு பிறகு உயர்நிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டன. ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
- FEB 15 : தேச பாதுகாப்பு அச்சுறுத்தல், தனியுரிமை பாதிப்பு அபாயம் காரணமாக, சீனா தொடர்புடைய மேலும் 54 செயலிகளுக்கு மத்திய அரசு நேற்று அதிரடியாக தடை விதித்தது.
- FEB 10 : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளான வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) பொது விடுமுறை விடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
- FEB 10 : புதிய வகை கொரோனா உருவாக வாய்ப்பு உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
- FEB 10 : தமிழகத்தில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 3 பேருக்கு பரிசோதனை செய்ததில், 3 ஆயிரத்து 971 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- FEB 10 : இந்தியாவில் பரிசோதனைகள் அதிகரிப்பால் கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் 71,365 பேருக்கு தொற்று உறுதியானது.
- FEB 09 : ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மசோதா, சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- FEB 09 : ‘நீட்’ தேர்வு அரசியலமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்ட தேர்வு முறை இல்லை என்றும், அது மாணவர்களைக் கொல்லும் ஒரு பலிபீடம் என்றும் சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.
- FEB 09 : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை மதுவிற்க தடை-மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
- FEB 09 : ‘நீட்' தேர்வை ரத்து செய்யும் விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் சட்டரீதியிலான நடவடிக்கைக்கு அ.தி.மு.க. துணை நிற்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
- FEB 09 : நீதிபதி ஏ.கே.ராஜனின் அறிக்கையை ஊகம் என்பதா? இந்த 21-ம் நூற்றாண்டில் மாபெரும் அறிவுத் தீண்டாமை தான் நீட் தேர்வு என்று கவர்னருக்கு சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.
- FEB 09 : தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 9 ஆயிரத்து 152 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 2 ஆயிரத்து 675 ஆண்கள், 1,844 பெண்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 519 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
- FEB 09 : இந்தியாவில் மேலும் 67 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 1,188 ஆக உயர்ந்துள்ளது.
- FEB 08 : தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
- FEB 08 : கவர்னர் திருப்பி அனுப்பியதை தொடர்ந்து, தமிழகத்திற்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் டி.வி.க்களில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.
- FEB 08 : கொரோனா தடுப்பூசி செலுத்த ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- FEB 08 : ராஜஸ்தானில் 32 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்காக தகுதித்தேர்வு (ரீட்) நடத்தப்பட்டது. இந்த 2-வது நிலை ரீட் தகுதித்தேர்வை மாநில அரசு ரத்து செய்துள்ளது.
- FEB 08 : கால்நடை மருத்துவ படிப்பு: 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல். முதல் 5 இடங்களில் 3 பேர் மாணவிகள்
- FEB 08 : தமிழகத்தில் 33 மாவட்டத்தில் உயிரிழப்பு இல்லை. 5 ஆயிரத்து 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- FEB 07 : இந்தியாவின் இசைக்குயில் என்று போற்றப்பட்ட பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தியதையடுத்து, அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.
- FEB 07 : உருமாறிய அனைத்து கொரோனாவுக்கும் ஒரே தடுப்பூசியை உருவாக்கி வருவதாக இந்திய விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
- FEB 07 : வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி கிடையாது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்று முதல் 100 சதவீத வருகை பதிவேடு. மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் அறிவிப்பு.
- FEB 07 : ஏர் இந்தியா நிறுவனம் கடந்த 27-ந்தேதி முறைப்படி டாடா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஏற்கனவே இந்த நிறுவனத்தை டாடா நிறுவனத்திடம் இருந்துதான் மத்திய அரசும் வாங்கியிருந்தது.
- FEB 07 : இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு சுமார் 1 லட்சம் அளவுக்கு சரிந்தது. பலியும் குறைந்தது.
- FEB 07 : தமிழகத்தில் 25 மாவட்டங்களில் பாதிப்பு குறைந்தது. 6 ஆயிரத்து 120 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- FEB 07 : இளவரசர் சார்லஸ் மனைவி கமிலா, ராணி என அழைக்கப்பட வேண்டும் என்று இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் விருப்பம் தெரிவித்துள்ளார்.
- FEB 07 : ‘நீட்’ விலக்கு மசோதா விவகாரத்தில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவின்படி சட்டசபை சிறப்பு கூட்டம் 8-ந் தேதி நடக்கிறது.
- FEB 07 : குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு பின்னர் பிறந்த பெண் குழந்தைக்கு பட்டப்படிப்பு முடிக்கும் வரை ஆண்டுக்கு ரூ.1.20 லட்சம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- FEB 07 : ல்வித்துறை அனுமதித்த காலிப்பணியிடங்களில் நியமனம் பெற்று கடந்த சில ஆண்டுகளாக ஊதியமின்றி பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு உடனே ஊதியம் வழங்கிட கோரி தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
- FEB 07 : 2 நாள் அரசுமுறைப்பயணமாக இலங்கை வெளியுறவு மந்திரி ஜி.எல்.பெரீஸ் இன்று டெல்லி வருகிறார்.
- FEB 05 : தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.
- FEB 05 : தமிழக சட்டசபையில் நீர் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பிய விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் மாநிலங்களவையில் இருந்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
- FEB 05 : ‘நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்குகோரும் மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பிய நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (சனிக்கிழமை) சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் 12 கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.
- FEB 05 : பார்களை நடத்த டாஸ்மாக் நிறுவனத்துக்கு அதிகாரமே கிடையாது. எனவே, மதுவிலக்கு சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டுவரவில்லை என்றால், தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான பார்களை 6 மாதத்திற்குள் மூடவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
- FEB 05 : நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களின் இறுதி பட்டியலை தயார் செய்ய குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- FEB 05 : சென்னையில் நடந்த திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி நேற்று சென்னை வந்தார். திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு கிழக்கு கடற்கரை சாலையில் நீலாங்கரை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டிற்கு ரங்கசாமி திடீரென சென்றார். அங்கு விஜய்யை சந்தித்து பேசினார்.
- FEB 05 : தமிழகத்தில் 28 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது.
- FEB 05 : தினசரி கொரோனா பாதிப்பு 1½ லட்சத்துக்கு கீழ் வந்தது. மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.
- FEB 05 : 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி, கடந்த மாதம் 3-ந்தேதி தொடங்கியது. ஒரு மாதம் ஆன நிலையில், தகுதிவாய்ந்த சிறுவர்களில் 65 சதவீதம்பேர் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருப்பதாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
- FEB 05 : ஐதராபாத்தில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்டமான ராமானுஜர் சிலையை பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) திறந்து வைக்கிறார்.
- FEB 04 : பஞ்சாப் நேஷனல் வங்கியும், பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனமும் இணைந்து 2 புதிய கடன் அட்டைகளை அறிமுகம் செய்துள்ளது.
- FEB 04 : தமிழகத்தில் பாதிப்பும், உயிரிழப்பும் குறைந்துள்ளது. நேற்று மட்டும் 11 ஆயிரத்து 993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
- FEB 04 : சந்திரயான்-3 வருகிற ஆகஸ்டு மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்று மத்திய மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
- FEB 01 : எரிபொருள் பற்றாக்குறை :இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து பெட்ரோல், டீசல் வாங்க இலங்கை முடிவு.
- FEB 01 : 60 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு.
- FEB 01 : ரூ.48 ஆயிரம் கோடியில் ஏழைகளுக்கு 80 லட்சம் வீடுகள் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு.
- FEB 01 : கோதாவரி-காவிரி நதிகள் இணைப்பு மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு.
- FEB 01 : நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
- FEB 01 : 17 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்ததை எதிர்த்து அ.தி.மு.க. தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
- FEB 01 : வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.91 விலை குறைக்கப்பட்டு ரூ.2 ஆயிரத்து 40-க்கு விற்பனை செய்யப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து உள்ளன.
- FEB 01 : நாடு முழுவதும் உள்ள 1½ லட்சம் அஞ்சலக வங்கிகள் இணையம் மூலம் இணைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
- FEB 01 : இந்தியாவில் வரும் நிதி ஆண்டில் ‘சிப்’ பொருத்திய இ-பாஸ்போர்ட் அறிமுகம் ஆகிறது என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
- FEB 01 : நாட்டின் முக்கிய விசாரணை அமைப்பான சி.பி.ஐ.க்கு பட்ஜெட்டில் ரூ.911 கோடியே 87 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- FEB 01 : புதிதாக 400 வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- FEB 01 : மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த தரமான கல்வி வழங்க வசதியாக டிஜிட்டல் பல்கலைக்கழகம் வருகிறது.
- FEB 01 : மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விலக்கில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இது மாதச்சம்பளதாரருக்கு ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது.
செய்தி துளிகள் - FEBRUARY 2022
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||