உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்
  • TN MHC RECRUITMENT 2020 | சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள P.A, P.C வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.02.2021 | Click Here

ஆகஸ்ட் 22-ல் தமிழக அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் நாளை (22.8.2017) வேலைநிறுத்தம் | பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பெ.இளங்கோவன், ஜெ.கணேசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அனைத்து பணியாளர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். மத்திய அரசு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தியதுபோல தமிழக அரசும் மத்திய அரசுக்கு இணையான ஊதிய மாற்றத்தை அமல்படுத்தவேண்டும். அதற்கு முன் 20 சதவீத இடைக்கால நிவாரணத்தை 2016 ஜனவரி முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் கடந்த மாதம் 18-ந் தேதி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் நடத்தப்பட்டது. கடந்த 5-ந் தேதி சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 1½ லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அணி திரண்டனர். அதன்பின்னரும் அரசு பாராமுகமாக இருப்பதால், எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் வேலைநிறுத்தம் நடத்த முடிவு செய்துள்ளோம். தமிழக அரசு போராடும் ஆசிரியர்கள்- அரசு ஊழியர்களை மிரட்டுவதை கைவிட்டு, கோரிக்கைகளை நிறைவேற்ற எங்களை அழைத்து பேசவேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கு பிறகும் அரசு அலட்சியத்துடன் நடந்துகொண்டால் செப்டம்பர் 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் ச.மோசஸ், பொதுச்செயலாளர் செ.பாலச்சந்தர் ஆகியோர் கூறியதாவது:- ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் யாருக்கும் இதுவரை புதிய ஓய்வூதியம் தரவில்லை. இதற்காக அவர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.18 ஆயிரம் கோடி எங்கு சென்றது என்றே தெரியவில்லை. இதனால் ஓய்வுபெற்றவர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தவே இந்த வேலைநிறுத்தம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் பல செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.