உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

ஓரியண்டல் இன்சூரன்சு கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் 300 அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

காப்பீட்டு நிறுவனத்தில் 300 அதிகாரி பணியிடங்கள் | காப்பீட்டு நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு 300 அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்று ஓரியண்டல் இன்சூரன்சு கம்பெனி லிமிடெட். புதுடெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் தற்போது நிர்வாக அதிகாரி (ஸ்கேல் -1) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 300 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் 20 இடங்களும், என்ஜினீயர்கள் பிரிவில் 15 இடங்களும், பொதுப் பிரிவில் 223 பணியிடங்களும், மருத்துவ அதிகாரி பிரிவில் 10 இடங்களும், சட்டப் பிரிவில் 30 இடங்களும், காப்பீட்டு கணிப்பாளர்கள் பணிக்கு 2 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்ப்போம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 31-7-2017-ந் தேதியில் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டு களும், ஓ.பி.எஸ். பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி: எம்.காம், எம்.பி.ஏ. (நிதி), சி.ஏ., காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் அக்கவுண்டன்ட், காஸ்ட் அண்ட் ஓக் அக்கவுண்டன்ட், ஆக்சூரியல் பேப்பர்-4 தேர்ச்சி பெற்றவர்கள், ஆட்டோமொபைல் முதுநிலை என்ஜினீயரிங் படித்தவர்கள், சட்டம் படித்தவர்கள், எம்.பி.பி.எஸ். படித்தவர்கள், இதர பட்டப்படிப்புகளை படித்தவர்கள் ஆகியோருக்கு பணி வாய்ப்புகள் உள்ளன. அந்தந்த பணிக்கான கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம். கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100-ம் மற்றவர்கள் ரூ.600-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 15-9-2017-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளா கும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.orientallnsurance.org.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.
மேலும் பல செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.