உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

www.csirhrdg.res.in | நெட் தேர்வு அறிவிப்பு - விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை, 16-9-2017-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

நெட் தேர்வு அறிவிப்பு | இந்திய விஞ்ஞான - தொழிற்சாலைகள் ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.) அமைப்பு இளம் ஆராய்ச்சியாளர் (ஜூனியர் ரிசர்ச் பெல்லோ-ஜே.ஆர்.எப்.) மற்றும் லெச்சரஸ்ஷிப் பணிகளுக்கான நெட் தேர்வை அறிவித்து உள்ளது. தேசிய தகுதி தேர்வு எனப்படும் இந்த நெட் தேர்வை (NET) எழுதுபவர்கள், இந்த அமைப்பின் ஆய்வு மையங்களில் மேற்கண்ட பணியிடங்களை பெற முடியும். மேலும் என்.இ.டி. தேர்வில் தேர்ச்சி பெறுவது இதர ஆராய்ச்சி மையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் பணி வாய்ப்பை பெறுவதற்கும் சிறப்புத் தகுதியை பெற்றுத் தரும். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை படித்தவர்கள், ஆராய்ச்சி மேற்கொள்வதற்கும், விரிவுரையாளர் உள்ளிட்ட பணியிடங் களை பெறுவதற்கும் இந்த தகுதித் தேர்வு பயனுள்ளதாக இருக்கும். ஆண்டுக்கு 2 முறை நெட் தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது 2017-ம் ஆண்டுக்கான 2-வது என்.இ.டி. தேர்வு சி.எஸ்.ஐ.ஆர். அமைப்பால் அறிவிக்கப்பட்டு உள்ளது. எம்.எஸ்சி. மற்றும் அதற்கு இணையான படிப்புகள், பி.எஸ்.- எம்.எஸ். மருத்துவ படிப்புகள், பி.இ, பி.டெக் மற்றும் பி.பார்மா/ எம்.பி.பி.எஸ். படிப்புகளை குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்வை எழுதலாம். எஸ்.சி,எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. ஜூனியர் ரிசர்ச் பெல்லோசிப் பணிக்கான (என்.இ.டி.) தேர்வு எழுத விரும்புபவர்கள் 1-7-2017 தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. விரிவுரையாளருக்கான என்.இ.டி. தேர்வு எழுதுபவர்களுக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. பொதுப்பிரிவினர் ரூ.1000-ம், ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஊனமுற்றோர் ரூ.250-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை, 16-9-2017-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான ஹார்டு காபி நகல் 23-9-2017-ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்பி வைக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை http://csirhrdg.res.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
மேலும் பல செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.