உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

DRAFT UGC REGULATIONS 2018 - கல்லூரி, பல்கலை. உதவிப் பேராசிரியர் பணி நியமனத்துக்கு யுஜிசி வரைவு விதிகள் வெளியீடு.

DRAFT UGC REGULATIONS 2018 - கல்லூரி, பல்கலை. உதவிப் பேராசிரியர் பணி நியமனத்துக்கு யுஜிசி வரைவு விதிகள் வெளியீடு | கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் பணிக்கு புதிய விதிகளை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டு கருத்து கேட்டுள்ளது. நாட்டிலுள்ள சுமார் 40,000 கல்லூரிகள் மற்றும் 800 பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பணிக்கு புதிய விதிமுறைகளை யுஜிசி வகுத்துள்ளது. இந்த வரைவு விதிகள் அதன் இணையதளத் தில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளன. இதில் இளநிலை பட்டப்படிப்புக்கு நேர்முகத் தேர்வில் அதிகபட்சம் 21 மதிப்பெண் தரப்பட்டுள்ளது. (80 சதவீதத்தை விட அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு 21 மதிப்பெண், 60 முதல் 79 சதவீதம் பெற்றவர்களுக்கு 19-ம், 55 முதல் 59-க்கு 16-ம் தரப்பட்டுள்ளது). இதையடுத்து முதுகலை பட்டப் படிப்புக்கு அதிகபட்சம் 33 மதிப்பெண் தரப்பட்டுள்ளது. (80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு 33 மதிப்பெண், 60 முதல் 79-க்கு 30, 55 முதல் 59-க்கு 25). இதைத் தொடர்ந்து எம்.பில் பட்டத்துக்கு வெறும் 7 மதிப்பெண் மட்டுமே தரப்பட்டுள்ளது. இந்த மூன்றையும் விட உயர்ந்த முனைவர் பட்டத்திற்கு 20 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் மத்திய அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அது கூடுதல் தகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
READ MORE
KALVISOLAI WHAT'S NEW TODAY
ALL OTHER NEWS
STUDY MATERIALS DOWNLOAD
MODEL QUESTION PAPERS DOWNLOAD
கல்விச்சோலை விரைவுச்செய்திகள்

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.