பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான மறுகூட் டல் முடிவுகள் வெள்ளிக்கிழமை (ஆக.18) வெளியிடப்படும் என அரசுத்தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு எழுதியவர்களில் மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றமுள்ள மாண வர்களின் பதிவெண் பட்டியல் வெள்ளிக்கிழமை பிற்பகல் வெளி யிடப்படுகிறது. அதன்விவரங்களை மாணவர்கள் தேர்வுத்துறை யின் www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
இந்த பட்டியலில் இடம்பெறாதவர்களின் விடைத்தாள்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் மாற்றமுள்ள மாணவர்கள் மட்டுமே மேற்கண்ட தேர்வுத் துறை இணையதளத்திலிருந்து திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டி யலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அசல் மதிப்பெண் சான் றிதழ் வழங்கப்படும் தேதி விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||