www.tnhealth.tn.gov.in_உதவி ஆராய்ச்சி அலுவலர் பணி: ஆக.25-க்குள் விண்ணப்பிக்கலாம்


இந்திய முறை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் காலியாகவுள்ள உதவி ஆராய்ச்சி அலுவலர் பணியிடத்துக்கு ஆக.25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்த பணியிடத்துக்கு ரூ.20,000 தொகுப்பூதியத்தில், தற்காலிக அலுவலர் பணியமர்த்தப் படவுள்ளனர். இதற்குத் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தை http://www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறையின் இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அரும் பாக்கம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை இணைப்பு வளாகத்திலுள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோ பதித்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு இயக்குநருக்கு ஆக.25-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும் படி அனுப்பி வைக்கவேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

kalvisolai-telegram kalvisolai official group

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||