ஓணம் பண்டிகையை முன்னிட்டு அரசு உத்தரவின்படி வரும் 29-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) சென்னை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடு முறைக்கு பதிலாக அடுத்த மாதம் செப்டம்பர் 2-ந் தேதி (சனிக்கிழமை) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. உள்ளூர் விடுமுறை நாளான 29-ந் தேதியன்று அவசர அலுவல்களை கவனிப்பதற்காக சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களை கொண்டுபொது மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் செயல்படும். இந்த அறிவிக்கை www.chennai.tn.nic.inஎன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சென்னை மாவட்டகலெக்டர் அருணா வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||