MAIN MENU

Naan Mudhalvan hall ticket / அடுத்த மாதம் 10-ந்தேதி தேர்வு நடைபெறும் நிலையில் நான் முதல்வன் மதிப்பீட்டு தேர்வுக்கான 'ஹால்டிக்கெட்' வெளியீடு

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித்தேர்வு பிரிவு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் கடந்த மார்ச் மாதம் 7-ந்தேதியன்று தொடங்கி வைக்கப்பட்டது. அந்தப்பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்திய அரசுவேலைவாய்ப்புக்கானபோட் டித்தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சிதிட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தநிலையில், 2023-24-க்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உரை யில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு குடிமைப்பணி தேர்வுகளுக்கு (சிவில் சர்வீசஸ்) தயாராகி வரும் 1,000 மாணவர்கள் மதிப்பீட்டுத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு, முதல்நிலைதேர்வுக்கு தயாராவதற்கு ஒவ்வொருமாணவருக்கும் மாதம் ரூ.7 ஆயிரத்து 500 பத்து மாதங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக் கப்பட்டிருந்தது. ஊக்கத்தொகைக்கான 1,000 பயனாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக கடந்த 2-ந்தேதியன்று அறிவிப்பு வெளியிடப்பட்டு கடந்த 17-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன் தொடர்ச்சியாக நான் முதல்வன் மற்றும் அகில இந்திய குடிமைப்பணிகள் பயிற்சி மையங்க ளுக்கான மதிப்பீட்டுத்தேர்வு அடுத்த மாதம் 10-ந்தேதியன்று நடைபெ றும் நிலையில், இந்தத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு நேற்று வெளியிடப் பட்டுள்ளது. நான் முதல்வன் ஊக்கத்தொகைக்கான மதிப்பீட்டுத்தேர்வுக்குவிண் ணப்பித்திருக்கும் மாணவர்கள் https://www.naanmudhalvan.tn.gov.inஎன்ற இணையதளத்தில் நுழைவுச்சீட்டை (ஹால்டிக்கெட்) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேற்கண்ட தகவல் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

kalvisolai-telegram kalvisolai official group

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||