- நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில், 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார் (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- செந்தில்குமார் கடந்த 23 ஆண்டுகளாக பல்வேறு அரசு பள்ளிகளில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
- கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஊட்டி அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் பணியில் சேர்ந்து, அங்கு 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை அறிவியல் பாடம் எடுத்துள்ளார்.
- சமீபத்தில் பள்ளிக்கு விழிப்புணர்வுக்காக சென்ற போலீசார், நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து மாணவ- மாணவிகளுக்கு விளக்கினர்.
- பயிற்சி வகுப்பு முடிந்ததும், 6 ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி ஒருவர், ஆசிரியர் செந்தில்குமார் தகாத இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தார்.
- இதேபோல், அந்த பள்ளியில் படித்த 21 மாணவிகள் தங்களுக்கு அறிவியல் ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், சில நேரங்களில் முத்தம் கொடுத்ததாகவும் புகார் அளித்தனர்.
- இதையடுத்து ஊட்டி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர்.
- அவர் ஊட்டி மகிளா கோர்ட்டு நீதிபதி செந்தில்குமார் முன் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஊட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
- நேற்று முன்தினம் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
- செந்தில்குமார் இதற்கு முன்பு பணியாற்றிய பள்ளிகளிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
No comments:
Post a Comment