கனரா வங்கியில் 3,500 அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டிற்கு 394 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
முக்கிய விவரங்கள்:
- பயிற்சி காலம்: ஒரு வருடம்.
- உதவித்தொகை: மாதம் ரூ. 15,000.
- கடைசி தேதி: விண்ணப்பிக்க அக்டோபர் 12, 2025.
கல்வித் தகுதி:
செப்டம்பர் 1, 2025 நிலவரப்படி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஜனவரி 1, 2022 க்கு முன்போ அல்லது செப்டம்பர் 1, 2025 க்குப் பிறகோ பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
வயது வரம்பு (செப்டம்பர் 1, 2025 நிலவரப்படி):
- குறைந்தபட்சம்: 20 வயது.
- அதிகபட்சம்: 28 வயது.
- செப்டம்பர் 1, 1997 க்கு முன்போ அல்லது செப்டம்பர் 1, 2005 க்குப் பிறகோ பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
வயது தளர்வுகள்:
- அரசு விதிமுறைகளின்படி, 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு.
- மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும்.
தேர்வு முறை:
உள்ளூர் மொழி அறிவுத் திறன் தேர்வு மற்றும் ஷார்ட்லிஸ்ட் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை:
https://canarabank.bank.in/pages/Engagement-of-Graduate-Apprentice-in-Canara-Bank-under-Apprenticeship என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
















No comments:
Post a Comment